என் மலர்
கார்
டெஸ்லா இன்க் நிறுவனம் தனது வாகனங்களை சீனாவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது.
டெஸ்லா இன்க் நிறுவனம் சீனாவில் தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. டெஸ்லா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை சீன அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை் தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களை சீனாவில் உற்பத்தி செய்ய முடியும் என ஷாங்காய் நகரை சேர்ந்த ஆட்டோ துறை சார்ந்த நிறுவன தலைவரான யேல் ஷாங் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி பணிகளை துவங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக டெஸ்லா சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஷாங்காய் அருகில் டெஸ்லா நிறுவனம் 200 கோடி டாலர்கள் செலவில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைத்து வருகிறது. இதுவே வெளிநாட்டில் உருவாகும் டெஸ்லாவின் முதல் ஆலை ஆகும்.
ஷாங்காய் தயாரிப்பு ஆலையில் வாரத்திற்கு 1000 மாடல்களை உற்பத்தி செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக டெஸ்லாவின் மாடல் 3எஸ் கார்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜி350டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி வேகன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி கார் விலை ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஜி63 மாடல் இந்தியாவில் ரூ. 2.19 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் ஜி350டி மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதே என்ஜின் எஸ் கிளாஸ் 350டி மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடல் மணிக்கு 199 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலேயே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் லெதர் இருக்கைகள், பவர் முன்புற சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கென மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் மொத்தம் எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் மாடல் கார் ஐந்து ஆண்டுகளில் கணிசமான விற்பனையை பதிவு செய்துள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் மாடல் கார் ஐந்து ஆண்டுகளில் 14,022 யூனிட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக கலராடோ மாடல் இத்தனை யூனிட்களை கடக்க பத்து ஆண்டுகள் ஆனது.
ஹரிகேன் கூப் வெர்ஷன் கார் 2014 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின் ஸ்பைடர் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2018 ஆம் ஆண்டு பெர்ஃபார்மனேட் ஸ்பைடர் மாடல் காரின் செயல்திறன் அளவில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு புதிய ஹரிகேன் இவோ மாடல் அடுத்த தலைமுறை வி10 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லம்போர்கினி மொத்தம் 4553 கார்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 96 சதவிகிதம் அதிகம் ஆகும்.
இதில் ஹரிகேன் மாடல் 1,211 யூனிட்களும், ஹரிகேன் பர்ஃபார்மனேட் மாடலும் அடங்கும். அதன்பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹரிகேன் இவோ மாடலுக்கான வினியோகம் ஜூன் மாதத்தில் துவங்கியது. அவென்டெடார் வி12 எஸ்.வி.ஜே. மாடல் 649 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டு கார்களில் பி.எஸ். 6 ரக என்ஜின் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஏப்ரல் 2020 முதல் விற்பனைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த விதிகளுக்கு பொருந்த வேண்டும் என்பதால், பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பி.எஸ். 6 அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டத் துவங்கியுள்ளன.
பலேனோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, எக்ஸ்.எல்.6 மற்றும் சமீபத்தில் அறிமுகமான எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்கள் பி.எஸ். 6 ரக என்ஜின்களை கொண்டிருக்கின்றன. மாருதி சுசுகி நிறுவன விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு இயக்குனர் சஷான்க் ஸ்ரீவத்சவா விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் மாடல்களும் விரைவில் பி.எஸ். 6 அப்டேட் பெறும் என தெரிவித்தார்.

தற்சமயம் டீசல் வேரியண்ட் மட்டும் விற்பனை செய்யப்படும் கார்களில் 1.5 லி்ட்டர் K சீரிஸ் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் கொண்டிருக்கின்றன.
இதே என்ஜின் மாருதி சுசுகியின் சியாஸ், எர்டிகா மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்.எல்.6 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. சிறிய டீசல் என்ஜின் கொண்டிருக்கும் வாகனங்கள் பி.எஸ். 6 அப்டேட் பெறாது என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல் வாகனங்களை பி.எஸ். 4 இல் இருந்து பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதற்கான கட்டணம் அதிகம் என்பதால் அப்டேட் வழங்கும் திட்டமில்லை என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் பற்றிய விவரங்கள் வெளியாகலாம்.
ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய டி.பி.எக்ஸ். எஸ்.யு.வி. மாடல் கார் சோதனை துவங்கியிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆஸ்டன் மார்டின் கார்கள் என்றாலே ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பெரும்பாலான ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஆஸ்டன் மார்டின் கார்கள் இடம்பெற்றுள்ளன. இனிவரும் படங்களிலும் இந்தக் கார் இடம்பெறுவது நிச்சயம்.
இதுவரையில் ஹேட்ச்பேக், செடான் மாடல் கார்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது முதல் முறையாக எஸ்.யு.வி. எனப்படும் ஸ்போர்ட் யுடிலிடி மாடல் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டு அதை உருவாக்கியுள்ளது. ‘டி.பி.எக்ஸ்.’ என்ற பெயரிலான இந்த கார் தற்போது சோதனை ஓட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய டி.பி.எக்ஸ். காருக்கான சோதனை ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் தலைமையகமான இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் என்ற இடத்திலும் ஜெர்மனியில் நுபுர்கிரிங் என்ற இடத்திலும் நடைபெறுகிறது.
இந்த காரில் 4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் உள்ளது. இது மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் ஓடியது. சோதனை ஓட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ள டி.பி.எக்ஸ். மாடல் ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விலை ரூ. 3.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ கார் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சமீபத்திய விற்பனை விவரங்களில் மாருதி சுசுகி இதுவரை 5006 யூனிட்கள் வினியோகம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ விற்பனை இந்திய சந்தையில் 5000 யூனிட்களை கடந்துள்ளது. இது ரெனால்ட் க்விட் மாடலை விட அதிகம் ஆகும்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் க்விட் இதே காலக்கட்டத்தில் சுமார் 2995 யூனிட்கள் முன்பதிவுகளை கடந்துள்ளது. புதிய ரெனால்ட் க்விட் கார் காஸ்மெடிக் அளவில் மாற்றங்களை பெற்றிருக்கிறது. இத்துடன் இதில் புதிய உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ அந்நிறுவனத்தின் புதிய மாடல் ஆகும். மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஆல்டோ கே10 மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடல்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
எஸ் பிரெஸ்ஸோ கார் ஆல்டோ மற்றும் வேகன் ஆர் மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரெனால்ட் க்விட் மாடல் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் விற்பனை 45% சரிந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2019 பொலிரோ பவர் பிளஸ் தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2019 மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 7.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய தீபாவளி எடிஷனில் காஸ்மெடிக் அப்டேட்கள், புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காஸ்மெடிக் மாற்றங்களில் புதிய பொலிரோ காரில் ஸ்பெஷல் டீக்கல்கள், சீட் கவர்கள், கார்பெட் மேட்கள், ஸ்கஃப் பிளேட், ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் கார் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த காரில் ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் யு.வி. மாடலாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த கார் பல்வேறு வெர்ஷன்கள்: பிக்கப், கேம்ப்பர், மேக்சி டிரக் மற்றும் இம்பீரியோ உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது. இத்துடன் பொலிரோ கார் பாதுகாப்பு துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் மாடல் 1.5 லிட்டர் எம்ஹாக் டி70 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. @3600 ஆர்.பி.எம். மற்றும் 195 என்.எம். @1400-2200 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எம்5 காம்படீஷன் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் எம்5 காம்படீஷன் காரை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபுள்யூ. எம்5 காம்படீஷன் காரின் விலை ரூ. 1.54 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய எம்5 காம்படீஷன் கார் ஸ்டான்டர்டு எம்5 செடான் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் செயல்திறனில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோற்றத்தில் புதிய எம்5 காம்படீஷன் காரில் எம் ஸ்போர்ட் எக்சாஸ்ட் சிஸ்டம், பிளாக் குரோம் டெயில் பைப்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் யை-ஸ்போக் டூயல் கலர் வீல்கள், ஃபென்டர் மற்றும் பின்புற ஸ்பாயிலர்களில் எம் கில்ஸ், காம்படீஷன் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. காரின் உள்புறம் எம்5 லோக், பிளாக்டு-அவுட் சீட் பெல்ட்கள், லெதர் இருக்கைகள், லெதர் ஸ்டீரிங் வீல், குரோம் டீடெயிலிங், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபூட் பெடல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர பி.எம்.டபுள்யூ. எம்5 காம்படீஷன் காரில் 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல், பில்ட்-இன் 3டி நேவிகேஷன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, பி.எம்.டபுள்யூ. டிஸ்ப்ளே கீ மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற அம்சங்களை பொருத்தவரை எம்5 காம்படீஷன் எடிஷனில் ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுணஅட் சிஸ்டம், 16-ஸ்பீக்கர்கள், பின்புற கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கண்ரோல், பின்புற பார்க்கிங் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
2019 பி.எம்.டபுள்யூ. எம்5 காம்படீஷன் காரில் 4.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 625 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம்., 750 என்.எம். டார்க் @1800-5800 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கிளான்சா ஹேட்ச்பேக் காரின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
டொயோட்டா இந்தியா நிறுவனம் கிளான்சா காரின் புதிய விலை குறைந்த மாடலை அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா கிளான்சா ஜி வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா கிளான்சா ஜி மாடல் துவக்க விலை ரூ. 6.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா கிளான்சா ஜி மற்றும் வி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கபப்டுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. டொயோட்டா கிளான்சா ஜி எம்.டி. வேரியண்ட் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது.

இதன் விலை ரூ. 7.21 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் இல்லாமல் புதிய வேரியண்ட் விலை ரூ. 24,000 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் நீக்கப்பட்டது தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் புதிய காரிலும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, MID டிஸ்ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டில்ட் & டெலிஸ்கோபிக் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ விஸ் எடிஷன் கார் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ காரின் விஸ் லிமிட்டெட் எடிஷன் காரை அறிமுகம் செய்தது. புதிய டியாகோ விஸ் எடிஷன் விலை ரூ. 5.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா டியாகோ விஸ் ஹேட்ச்பேக் மாடலை சுற்றி ஆரஞ்சு நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முன்புற கிரில், வீல் கவர்கள் மற்றும் ORVMகளில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. புதிய டாடா டியாகோ விஸ் டைட்டானியம் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

வெளிப்புறம் மட்டுமின்றி காரின் உள்புறம் ஃபுல் ஃபேப்ரிக் சீட்கள், ஆரஞ்சு டிகோ-ஸ்டிட்ச், கிரானைட் பிளாக் டோர் ஹேன்டிள், டைட்டானியம் கிரே கியர் ஷிஃப்ட் பெசல் கொண்டிருக்கிறது. டாடா டியாகோ லிமிட்டெட் எடிஷன் மாலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இத்துடன் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இதே என்ஜின் டியாகோவின் ஸ்டான்டர்டு வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
டேட்சன் இந்தியா நிறுவனம் தனது டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களின் விலையை மாற்றியமைத்துள்ளது.
டேட்சன் இந்தியா நிறுவனம் தனது கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் விலையை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இரு மாடல்களின் விலையில் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிய விலை மாற்றம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலாகியிருக்கிறது.
விலை ஏற்றத்தின் படி இரு மாடல்களின் விலையில் ரூ. 30,000 வரை அதிகமாகியுள்ளது. இது கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை பொருத்து வேறுபடும்.
இந்தியாவில் டேட்சன் கோ விலை ரூ. 3.35 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி ரூ. 5.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது. டேட்சன் கோ பிளஸ் விலை ரூ. 3.86 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் விலை ரூ. 5.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரு மாடல்களின் விலை மாற்றத்திற்கு ஈடு செய்யும் வகையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இரு மாடல்களிலும் சீட் பெல்ட் ரிமைண்டர் வழங்கப்படுகின்றன. இதன் உயர் ரக மாடலில் வெஹிகில் டைனமிக் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.
தற்சமயம் டேட்சன் நிறுவனம் இரு மாடல்களிலும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. டேட்சன் மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களில் ஒற்றை 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியது.
ஜப்பானின் நிசான் குழுமத்தின் அங்கமான டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல் இந்தியச் சந்தையில் 2014-ம் ஆண்டிலிருந்து மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்தது.
நான்கு மீட்டருக்குள்ளான மாடலில் 7 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த இரு மாடல்களில் வெளிப்புற வடிவமைப்பு, தோற்றப் பொலிவு மாற்றம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட ரகமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. என்ஜினிலும் கியர் பாக்ஸிலும் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை.
தற்போது இவற்றில் ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் (சி.வி.டி.) இவ்விரு மாடல்களும் அறிமுகமாக இருக்கின்றன. இந்த சி.வி.டி. மாடல் 1.2 லிட்டர் என்ஜின் 3 சிலிண்டரைக் கொண்ட பெட்ரோல் மாடலாக வந்துள்ளது. இது 68 ஹெச்.பி. திறன் மற்றும் 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.

இந்தப் பிரிவில் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக இது சந்தைக்கு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே இப்பிரிவில் உள்ள டாடா டியாகோ, ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி சுஸுகி செலெரியோ ஆகிய மாடலுக்குப் போட்டியாக இது விளங்கும். இந்த பிராண்டுகள் அனைத்துமே ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டவையாகும். தற்போது அத்தகைய வசதியை தனது மாடலிலும் அறிமுகப்படுத்தி மேம்படுத்தப்பட்ட ரகமாக டட்சன் அறிமுகம் செய்கிறது.
புதிய மாடலில் முன்புற கிரில் அழகிய தோற்றத்துடனும், எல்.இ.டி. டி.ஆர்.எல். முகப்பு விளக்கு, 14 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலின் உள்பகுதியில் ஏ.சி. வென்ட் பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிரைவர் மற்றும் முன்புற பயணிக்கென ஏ.சி. வென்ட் உள்ளது.
இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் டாகோ மீட்டர் (என்ஜினின் ஆர்.பி.எம். வேகத்தை டிஜிட்டல் முறையில் காட்டும்), 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதியோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் இ.எஸ்.சி. எனப்படும் மின்னணு முறையிலான கட்டுப்பாட்டு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இத்துடன் வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல் வசதியும் பிரீமியம் மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தோனேசியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மாடல் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






