search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Datsun Go Plus"

    டேட்சன் இந்தியா நிறுவனம் புதிய 2018 கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #datsungo



    டேட்சன் இந்தியா நிறுவனம் புதிய 2018 கோ மற்றும் கோ பிளஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய 2018 டேட்சனஅ கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ.3.29 லட்சம் மற்றும் ரூ.3.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களில் 28 புதிய அம்சங்கள், முந்தைய மாடலை விட 100 மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

    சமீபத்தில் டேட்சன் நிறுவனம் பாலிவுட் நடிகர் அமிர் கானை விளம்பர தூதராக நியமனம் செய்து இருப்பதை அறிவித்தது. அமிர் கான் மூலம் இந்தியாவில் டேட்சன் பிரான்டை விளம்பரப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் டேட்சன் மாடல்கள் நிசான் இந்தியாவை விட அதிக மாடல்களை விற்பனை செய்து வருகிறது.



    டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் டைனமிக், சாலிட் மற்றும் ஸ்டைலிஷ் வெளிப்புறங்களை கொண்டுள்ளது. இவை காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. இதுதவிர புதிய மாடலின் முன்பக்கம் கிரில், பிளாக்டு-அவுட் ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பம்ப்பரில் சேர்க்கப்பட்டுள்ளது.

    காரின் உள்புறத்தில் புதிய டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களில் பிரீமியம் அனுபவம் மற்றும் சவுகரியமான டிரைவிங் அனுபவம் வழங்குகிறது. காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    2018 டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களில் 1.2 லிட்டர் இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 104 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த காரின் AMT வேரியன்ட் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×