search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டட்சன் கோ
    X
    டட்சன் கோ

    டட்சன் கோ மற்றும் டட்சன் கோ பிளஸ் சி.வி.டி. முன்பதிவு துவங்கியது

    டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியது.

    ஜப்பானின் நிசான் குழுமத்தின் அங்கமான டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல் இந்தியச் சந்தையில் 2014-ம் ஆண்டிலிருந்து மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்தது.

    நான்கு மீட்டருக்குள்ளான மாடலில் 7 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த இரு மாடல்களில் வெளிப்புற வடிவமைப்பு, தோற்றப் பொலிவு மாற்றம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட ரகமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. என்ஜினிலும் கியர் பாக்ஸிலும் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை.

    தற்போது இவற்றில் ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் (சி.வி.டி.) இவ்விரு மாடல்களும் அறிமுகமாக இருக்கின்றன. இந்த சி.வி.டி. மாடல் 1.2 லிட்டர் என்ஜின் 3 சிலிண்டரைக் கொண்ட பெட்ரோல் மாடலாக வந்துள்ளது. இது 68 ஹெச்.பி. திறன் மற்றும் 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.

    டட்சன் கோ பிளஸ்


    இந்தப் பிரிவில் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக இது சந்தைக்கு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே இப்பிரிவில் உள்ள டாடா டியாகோ, ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி சுஸுகி செலெரியோ ஆகிய மாடலுக்குப் போட்டியாக இது விளங்கும். இந்த பிராண்டுகள் அனைத்துமே ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டவையாகும். தற்போது அத்தகைய வசதியை தனது மாடலிலும் அறிமுகப்படுத்தி மேம்படுத்தப்பட்ட ரகமாக டட்சன் அறிமுகம் செய்கிறது.

    புதிய மாடலில் முன்புற கிரில் அழகிய தோற்றத்துடனும், எல்.இ.டி. டி.ஆர்.எல். முகப்பு விளக்கு, 14 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலின் உள்பகுதியில் ஏ.சி. வென்ட் பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிரைவர் மற்றும் முன்புற பயணிக்கென ஏ.சி. வென்ட் உள்ளது.

    இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் டாகோ மீட்டர் (என்ஜினின் ஆர்.பி.எம். வேகத்தை டிஜிட்டல் முறையில் காட்டும்), 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதியோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கூடுதலாக டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் இ.எஸ்.சி. எனப்படும் மின்னணு முறையிலான கட்டுப்பாட்டு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    இத்துடன் வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல் வசதியும் பிரீமியம் மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தோனேசியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மாடல் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×