என் மலர்
பைக்
- யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புது வியாபாரத்தை துவங்கி இருக்கிறது.
- சிப் எனும் டெலிவரி நிறுவனத்தில் யமஹா முதலீடு செய்கிறது.
யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை லீசுக்கு விடும் புது வியாபாரத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது. யமஹா நிறுவனத்தின் துணை பிராண்டு மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா மூலம் புதிய லீசிங் வியாபாரத்தை நடத்த யமஹா முடிவு செய்துள்ளது.
இந்த வியாபாரத்திற்காக யமஹா நிறுவனம் சிப் எலெக்ட்ரிக் எனும் டெலிவரி சர்வீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது. லீசிங் வியாபாரத்தில் மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா நிறுவனம் முதற்கட்டமாக 250 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிப் நிறுவனத்திற்கு வழங்கும். சிப் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனது வியாபாரத்தில் பயன்படுத்த இருக்கிறது.
தற்போது நாடு முழுக்க சுமார் 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சிப் வைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை நீட்டிக்க சிப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2024 வாக்கில் 1.5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருக்க சிப் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது.
- டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
- அந்த வரிசையில் 125சிசி பிரீமியம் மாடல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி வருகிறது. இந்த முறை 125சிசி பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலான ரைடர் விலையை டி.வி.எஸ். நிறுவனம் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு டிஸ்க் பிரேக் கொண்ட மாடலுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் டிரம் பிரேக் மாடலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய விலை விவரங்கள்:
டி.வி.எஸ். ரைடர் டிரம் பிரேக் மாடல் ரூ. 84 ஆயிரத்து 573 (எந்த மாற்றமும் இல்லை)
டி.வி.எஸ். ரைடர் டிஸ்க் பிரேக் மாடல் ரூ. 90 ஆயிரத்து 989 (முந்தைய விலை ரூ. 89 ஆயிரத்து 089)

டி.வி.எஸ். ரைடர் மோட்டார்சைக்கிள் அந்நிறுவனத்தின் மற்ற மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப், வித்தியாச தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்., இண்டிகேட்டர்களுக்கு ஹாலோஜன் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11.32 பி.எஸ். பவர், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் G310 RR பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- தற்போது இந்த மாடலுக்கான புக்கிங் துவங்கி உள்ளது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் டி.வி.எஸ். அபாச்சா RR310 சார்ந்த பி.எம்.டபிள்யூ. G310 RR மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலின் டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பி.எம்.டபிள்யூ. G310 RR மாடலுக்கான புக்கிங் இந்தியாவில் துவங்கி உள்ளது.
புதிய பி.எம்.டபிள்யூ. G310 RR மாடலுக்கான புக்கிங் பி.எம்.டபிள்யூ. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் வலைதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. G310 RR மோட்டார்சைக்கிள் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான வினியோகம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அன்ற அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் உள்ளதை போன்றே 313சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது.
- டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஐகியூப் ST முன்பதிவு துவங்கி உள்ளது.
- இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் சில மாதங்களில் துவங்க இருக்கிறது.
டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஸ்டாண்டர்டு, S மற்றும் ST போன்ற வேரியண்ட்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களின் விலை மட்டும் அறிவிக்கப்பட்டு வினியோகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்ட் முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி டி.வி.எஸ். ஐகியூப் ST மாடல் ஆகஸ்ட் மாதம் முதல் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இந்த வேரியண்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த வேரியண்ட் விலை ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அறிவிக்கப்படலாம்.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டி.வி.எஸ். ஐகியூப் ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 130 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்ட் அம்சங்கள் மற்றும் பேட்டரியை பொருத்து இதன் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
2022 டி.வி.எஸ். ஐகியூப் S மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. டாப் எண்ட் ST வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மூன்று வேரியண்ட்களின் ரேன்ஜ் முந்தைய மாடல்களை விட அதிகமாகவே உள்ளது.
- ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்று இருக்கிறது.
- இந்த ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இரு பிரீமியம் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில், ஹோண்டா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹோண்டா U Go EV என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹோண்டா U Go EV மாடல் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான அம்சங்கள் மற்றும் அதிக செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் BLDC மோட்டார் உள்ளது. இது 1200 வாட்ஸ் மற்றும் 800 வாட்ஸ் என இருவிதங்களில் கிடைக்கிறது. இத்துடன் கழற்றக்கூடிய வசதி கொண்ட 30Ah லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

இதன் டூயல் பேட்டரி பேர் மாடல் முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும். ஹோண்டா U Go EV ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 53 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஹெட்லேம்ப், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆண்டி தெப்ட் அலாரம், யு.எஸ்.பி. சார்ஜிங், 26 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
தற்போது காப்புரிமை பெற்று இருக்கும் நிலையில் விரைவில் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹோண்டா பேட்டரி மாற்றும் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹோண்டா நிறுவனம் விரைவில் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இது யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் வேரியோ 160 என்று அழைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் உள்ளதை போன்றே ஹோண்டா வேரியோ 160 மாடலும் ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கிரேசியா மாடலை போன்று காட்சியளிக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஷார்ப் லைன்கள் மற்றும் கிரீஸ்கள் உள்ளன. இந்த மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர், 13.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹோண்டா வேரியோ மாடலில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏ.பி.எஸ்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், 18 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் வேறு எந்த மாடலையும் ஹோண்டா விற்பனை செய்யாத நிலையில், வேரியோ மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் புதிய G சீரிஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இது அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் இந்தியா நிறுவனம் தனது புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை பி.எம்.டபிள்யூ. உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் உள்ளதை போன்றே 313சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மற்றும் கே.டி.எம். RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தது.
- இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மே 2022 விற்பனையில் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மே மாத விற்பனை அமோகமாக நடைபெற்று இருக்கிறது. முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகம் வர வலியுறுத்தி இருப்பதை அடுத்து தனிப்பட்ட போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து உள்ளது.
அந்த வகையில், மே 2022 மாதத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளர்களின் வாகன விற்பனை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மே 2022 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 466 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 561 யூனிட்களை மட்டும் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை மே 2022 மாதத்தில் 59 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2021 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 60 ஆயிரத்து 342 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மே 2022 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 844 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் வெறும் 38 ஆயிரத்து 763 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 482 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் மொத்தத்தில் 52 ஆயிரத்து 084 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 மே மாதத்தில் 53 ஆயிரத்து 525 யூனிட்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 073 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த மே மாதம் 60 ஆயிரத்து 518 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.










