search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா வரும் ஹோண்டா பிரீமியம் ஸ்கூட்டர்!
    X

    விரைவில் இந்தியா வரும் ஹோண்டா பிரீமியம் ஸ்கூட்டர்!

    • ஹோண்டா நிறுவனம் விரைவில் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இது யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் வேரியோ 160 என்று அழைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் உள்ளதை போன்றே ஹோண்டா வேரியோ 160 மாடலும் ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கிரேசியா மாடலை போன்று காட்சியளிக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஷார்ப் லைன்கள் மற்றும் கிரீஸ்கள் உள்ளன. இந்த மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர், 13.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹோண்டா வேரியோ மாடலில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏ.பி.எஸ்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், 18 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் வேறு எந்த மாடலையும் ஹோண்டா விற்பனை செய்யாத நிலையில், வேரியோ மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×