என் மலர்
பைக்
- ஹோண்டா நிறுவனம் விரைவில் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இது யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் வேரியோ 160 என்று அழைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் உள்ளதை போன்றே ஹோண்டா வேரியோ 160 மாடலும் ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கிரேசியா மாடலை போன்று காட்சியளிக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஷார்ப் லைன்கள் மற்றும் கிரீஸ்கள் உள்ளன. இந்த மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர், 13.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹோண்டா வேரியோ மாடலில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏ.பி.எஸ்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், 18 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் வேறு எந்த மாடலையும் ஹோண்டா விற்பனை செய்யாத நிலையில், வேரியோ மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் புதிய G சீரிஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இது அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் இந்தியா நிறுவனம் தனது புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை பி.எம்.டபிள்யூ. உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் உள்ளதை போன்றே 313சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மற்றும் கே.டி.எம். RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தது.
- இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மே 2022 விற்பனையில் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த மே மாத விற்பனை அமோகமாக நடைபெற்று இருக்கிறது. முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகம் வர வலியுறுத்தி இருப்பதை அடுத்து தனிப்பட்ட போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து உள்ளது.
அந்த வகையில், மே 2022 மாதத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளர்களின் வாகன விற்பனை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மே 2022 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 466 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 561 யூனிட்களை மட்டும் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை மே 2022 மாதத்தில் 59 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2021 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 60 ஆயிரத்து 342 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மே 2022 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 844 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் வெறும் 38 ஆயிரத்து 763 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 482 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் மொத்தத்தில் 52 ஆயிரத்து 084 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 மே மாதத்தில் 53 ஆயிரத்து 525 யூனிட்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 073 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த மே மாதம் 60 ஆயிரத்து 518 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.















