என் மலர்

  நீங்கள் தேடியது "Hero Xpulse 200"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
  • இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புது அறிவிப்பின் படி இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 3 ஆயிரம் வரை அதிகரிக்க இருக்கிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் சந்தைக்கு ஏற்ப வேறுபடும்.


  தொடர்ச்சியாக செலவீனங்கள் அதிகரித்து வருவது மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு தவிர வாகனங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

  இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலை யூரோ 5 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்ற அப்டேட்கள் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 4V மாடலின் இந்திய வேரியண்டிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இம்பல்ஸ் மோட்டார்சைக்கிளுக்குப் பதிலாக இரண்டு புதிய ரக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் ‘எக்ஸ்பல்ஸ் 200டி’ மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. அந்த வகையில் இதன் விநியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

  இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களிலும் 199.6 சி.சி. திறன் கொண்டிருக்கின்றன. ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டவை. இவை இரண்டிலும் கார்புரேட்டர் மாடலுக்குப் பதிலாக ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் மாடலைக் கொண்டதாக என்ஜின் உள்ளது. ஏ.பி.எஸ்., எல்.இ.டி. விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவற்றைக் கொண்டது.

  இதில் சாகசப் பயணத்துக்கான எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் எக்ஸாஸ்ட் பைப் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் சக்கரங்கள் வயர் ஸ்போக்ஸ் மாடலாகும். முன் சக்கரம் 21 அங்குலம் கொண்டதாகவும், பின் சக்கரம் 18 அங்குலம் கொண்டதாகவும் உள்ளது.   சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பறம் டெலஸ்கோப்பிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான மோட்டார் சைக்கிளை விட இதன் உயரம் அதிகம். எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் 30 மி.மீ. உயரம் குறைவு. இதில் 17 அங்குல அலாய் சக்கரம் எம்.ஆர்.எப். நைலோகிரிப் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  இம்பல்ஸ் மாடல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இதன் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது அறிமுகமாக உள்ள இரண்டு மாடல்களுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் இது எடை குறைந்த வாகனமாக இருக்கும்.

  ஏற்கனவே சாகச மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்பீல்டு ஹிமாலயன், பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். ஆகியன உள்ளன. எடை குறைவு, சிறப்பான பிக்கப் ஆகியன இதற்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடல் தயாரான அதே பிளாட்பார்மில் இது தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் வடிவமைப்பு, செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதுபோல மேலும் பல மாடலை இதே பிளாட்பார்மில் உருவாக்கவும் ஹீரோ திட்டமிட்டு உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு விவரங்கள் கிடைத்திருக்கிறது. #motorcycle
  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான எக்ஸ் பல்ஸ் 200 மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த மோட்டார்சைக்கிள் டிசம்பர் 2018-இல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது.

  இந்நிலையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் எக்ஸ் பல்ஸ் 200 மாடல் மூன்று மாதங்கள் தாமதமாக அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. புதிய மாடல்களை வாங்குவோர் புத்தாண்டில் வாங்க விரும்புவர் என்பதால் இந்த முடிவை ஹீரோ மோட்டோகார்ப் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

  ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த இம்பல்ஸ் 150 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். ஹீரோ இம்பல்ஸ் 150 விற்பனை 2017-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அந்த வகையில் புதிய இம்பல்ஸ் 200 மாடலின் ஃபிரேம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் எக்ஸ்ட்ரீம் 200 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 முதன்முதலில் EICMA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹீரோ எக்ஸ் பல்ஸ் மாடலில் எக்ஸ்ட்ரீம் 200 சிசி இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 17 என்.எம். டார்கியூ 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

  ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஒரு சக்கரத்தில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்போக்டு வீல் கொண்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 டியூப் கொண்ட டயர் வழங்கப்படுகிறது. டியூப்-லெஸ் டயர்களை கொண்டு ஆஃப்-ரோடிங் செய்ய முடியாது என்பதால் இவ்வகை டயர்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

  தரையில் இருந்து 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், பாதுகாப்பு வழங்கும் வின்ட்-ஷீல்டு மற்றும் நக்கிள் கார்டுகள் வழங்கப்படுகிறது.

  இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும். இதேபோன்ற வசதிகளை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய விலை ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2018 மிகப்பெரிய வெளியீடாக எக்ஸ் பல்ஸ் 200 (XPulse 200) ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

  ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளில் 200-சிசி 4-ஸ்டிரோக், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் 17 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஆய்வு மையத்தின் பொறியாளர்கள் இந்த இன்ஜினை உருவாக்கியுள்ளனர்.

  5-ஸ்பீடு மேனுவல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் இந்த இன்ஜின் எடை 140 கிலோ என்றும் இதை கொண்டு ஆன் மற்றும் ஆஃப் ரோடிங் பயணங்களை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்பக்கம் நீண்ட டிராவல் சஸ்பென்ஷன்: 21-இன்ச் டையர், 190 மில்லிமீ்ட்டர் ஃபோர்க்கள், பின்புற டையர் 19 இன்ச் யூனிட் மற்றும் மோனோஷாக் 180 மில்லிமீட்டர் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


  ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஒரு சக்கரத்தில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்போக்டு வீல் கொண்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 டியூப் கொண்ட டயர் வழங்கப்படுகிறது. டியூப்-லெஸ் டயர்களை கொண்டு ஆஃப்-ரோடிங் செய்ய முடியாது என்பதால் இவ்வகை டயர்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

  தரையில் இருந்து 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், பாதுகாப்பு வழங்கும் வின்ட்-ஷீல்டு மற்றும் நக்கிள் கார்டுகள் வழங்கப்படுகிறது.

  இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும். இதேபோன்ற வசதிகளை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய விலை ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×