என் மலர்
பைக்
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புது விலை விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதில் 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை மட்டும் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாடல்களின் விலை தற்போது ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய விலை உயர்வின் படி கே.டி.எம். 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை முறையே ரூ. 2 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. புதிய விலை மே 5 ஆம் தேதி முதல் அமலாகி இருக்கின்றன. உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக இரு மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்த்தப்படுவதாக கே.டி.எம். நிறுவனம் டீலர்களிடம் தெரிவித்து உள்ளது.

390 மற்றும் 250 டியூக் மாடல்கள் தோற்றத்தில் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கின்றன. இதன் பெயிண்ட் மற்றும் ஹெட்லேம்ப்-இல் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாடல்களிலும் சேசிஸ், வீல்கள், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் உள்ளிட்டவை ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் பெரும் வித்தியாசம் என்ஜின் மட்டும் தான் எனலாம்.
அந்த வகையில் கே.டி.எம். 390 டியூக் மாடலில் 373சிசி, என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டியூக் 250 மாடலில் 248சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.6 ஹெச்.பி. பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. எனினும் 390 டியூக் மாடலில் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் லைவ் வயர் பிராண்டு இ பைக் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு லைவ் வயர் சமீபத்தில் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட S2 டெல் மார் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் இதே மாடலின் லான்ச் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இந்த மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் லைவ் வயர் S2 டெல் மார் LE மாடல் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
புதிய டெல் மார் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த இ பைக் 80 பி.ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது லைவ் வயர் ஒன் மாடலில் உள்ளதை விட 20 சதவீதம் குறைவு ஆகும். மேலும் இது முந்தைய மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது.
இந்த இ பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த மாடலில் பில்ட் இன் GPS, இண்டர்நெட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவர் தி ஏர் அப்டேட் மூலம் புது அம்சங்கள் வழங்கப்படும்.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் மாடலின் விலை மீண்டும் மாற்றி அமைத்து இருக்கிறது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
யமஹா ஏரோக்ஸ் 155 விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டது. தற்போதைய விலை உயர்வை சேர்த்து ஏரோக்ஸ் மாடல் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை யமஹா ஏரோக்ஸ் 155 விலை ரூ. 1,800 உயர்த்தப்பட்டு உள்ளது.

விலை உயர்வின் படி ஏரோக்ஸ் 155 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் யமஹா R15 மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் லிக்விட் கூலிங், வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் 155 மாடல் ரேசிங் புளூ, கிரே வெர்மிலான் மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இந்த மாத நிலவரப்படி புல்லட் 350 மாடல் விலை ரூ. 2 ஆயிரத்து 874 அதிகரித்து உள்ளது.
புதிய விலை விவரங்கள்:
ராயல் என்பீல்டு புல்லட் 350 ஸ்டாண்டர்டு மாடல் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 999
ராயல் என்பீல்டு புல்லட் 350 கிக்ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 674
ராயல் என்பீல்டு புல்லட் 350 எல்க்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 338
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய J ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் புதிய கிளாசிக் 350 மற்றும் Meteor 350 மாடல்களை போன்று இல்லாமல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய பிளாட்பார்மில் உருவாகி, விற்பனை செய்யப்பட்டு வரும் ஒற்றை மாடலாக புல்லட் 350 இருந்து வருகிறது. முன்னதாக புதிய தலைமுறை புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
தற்போதைய புல்லட் 350 மாடல் சிங்கில் கிராடில் பிரேம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 346சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.2 பி.ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிளை ஒரு வழியாக அறிமுகம் செய்து விட்டது. புதிய கே.டி.எம். RC390 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது முந்தைய மாடலை விட ரூ. 36 ஆயிரம் அதிகம் ஆகும்.
அதிக விலைக்கு ஈடு செய்யும் வகையில் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிளில் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. 2022 கே.டி.எம். RC390 மாடலின் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கே.டி.எம். RC200 ஸ்போர்ட் பைக் மாடலை தழுவிய டிசைன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பியூவல் டேன்க், ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில் செக்ஷன், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கே.டி.எம். RC390 மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏ.பி.எஸ்., குயிக்ஷிப்டர், TFT டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கியர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இதே அம்சங்கள் அதன் சர்வதேச வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 2022 கே.டி.எம். RC390 மாடலிலும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டிற்குள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் நிலையில் இருக்கும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவது பற்றிய தகவலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. இதே பெயரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூட்டும் போது, அதன் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என ஹோண்டா நம்புகிறது.
எனினும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குமா அல்லது தனது ஆக்டிவா மாடலை மாடிபை செய்து எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனம் பென்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் டெஸ்டிங் செய்து வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளில் சத்தமின்றி புது அப்டேட் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அப்டேட் செய்து இருக்கிறது. புது அப்டேட் படி பல்சர் 250 மாடல் இனி கிரீபியன் புளூ நிறத்திலும் கிடைக்கிறது. புதிய நிறம் பல்சர் N250 மற்றும் பல்சர் F250 மாடல்களில் கிடைக்கும். புகிய நிறம் கொண்ட வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், இரு மாடல்களின் புது நிறம் கொண்ட வேரியண்ட் தற்போதைய விலையிலேயே கிடைக்கும்.
இந்தியாவில் பஜாஜ் பல்சர் F250 கரீபியன் புளூ நிற மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 979 என்றும் பஜாஜ் பல்சர் N250 கரீபியன் புளூ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் ஹெட்லைட் கவுல், முன்புற பெண்டர், என்ஜின் கவுல், பியூவல் டேன்க் மற்றும் ரியர் பேனல் என அனைத்து இடங்களிலும் புளூ நிற பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் வெளிப்புற நிறத்திற்கு மேட்ச் செய்யும் வகையில் வீல் ஸ்ட்ரிப்களில் புளூ பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மாற்றங்கள் நிறத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 2 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன.
இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. பல்சர் 250 டுவின் மாடல்கள் டியுபுலர் ஸ்டீல் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். இந்தியா நிறுவனம் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் இரண்டு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இத்துடன் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலுக்கு சிறப்பு நிதி சலுகைகள் மற்றஉம் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில், விசேஷ மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் தற்போது புதிதாக கே.டி.எம். பேக்டரி ரேசிங் புளூ மற்றும் டார்க் கால்வேனோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் தற்போது ஸ்டிரீட் மற்றும் ஆஃப் ரோடு என இருவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

இரு ரைடிங் மோட்களிலும் டிராக்ஷன் கண்ட்ரோல் லெவல்கள் மாற்றப்படும். ஆஃப் ரோடு மோட் கொண்டு பைக்கினை சிறப்பாக கண்ட்ரோல் செய்ய முடியும். இத்துடன் லீன் சென்சிடிவ் ABS வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ரோபஸ்ட் 5 ஸ்போக் கேஸ்ட் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலிலும் 373 சிசி, சிங்கில் சிலண்டர், 5 ஸ்பீடு, லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய தலைமுறை பல்சர் NS160 மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை பல்சர் NS160 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடலின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
தோற்றத்தில் இந்த மாடல் தற்போதைய பல்சர் N250 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் அண்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளது. ஆனால் பல்சர் N250 மாடலில் சைடு ஸ்லங் யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் இதில் கிக் ஸ்டார்டர் இடம்பெற்று இருக்கிறது. இந்த பிரிவு மாடல்களில் இது மிகவும் அரிதான ஒன்று ஆகும்.

Photo Courtesy: BikeDekho
இத்துடன் மெல்லிய டையர்கள், சிறிய டிஸ்க் பிரேக்குகள், ஏர் கூல்டு என்ஜினஅ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் அதிக செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இவை தவிர இதன் டிசைன் மற்றும் அம்சங்கள் புதிய பல்சர் NS250 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பஜாஜ் பல்சர் NS160 விலை ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடல் விலை நிச்சயம் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் NS160 மாடல் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R, டி.வி.எஸ். அபாச்சி RTR160 4V மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளன. இதன் விவரங்களை பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது.
அதன்படி இரு பல்சர் 250 சீரிஸ் மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இரு மாடல்களை சேர்த்து சுமார் 10 ஆயிரம் யூனிட்கள் இதுவரை டெலிவரி செய்யப்பட்டுள்ளது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இவை பஜாஜ் பல்சர் சீரிசில் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஆகும். இரு மாடல்களிலும் 2590சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்கள் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 என்றும் பஜாஜ் பல்சர் F250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 979 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய பஜாஜ் பல்சர் 250 சீரிஸ் மாடல்கள்- டெக்னோ கிரே, ரேசிங் ரெட் மற்றும் கரீபியன் புளூ நிறங்களில் கிடைக்கின்றன.
புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 2 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. பல்சர் 250 டுவின் மாடல்கள் டியுபுலர் ஸ்டீல் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor 350 மற்றும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு இந்திய சந்தையில் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தான் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தியது. இந்த நிலையில், புதிய Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்களுக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ராயல் என்பீல்டு Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்கள் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போதைய அறிவிப்பின் படி இரு மாடல்களிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரியாக வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த அக்சஸரி இன்றி Meteor 350 மற்றும் ஹிமாலன் வாங்குவோருக்கு மோட்டார்சைக்கிள் விலையில் ரூ. 5 ஆயிரம் விலை குறைக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு காரணமாக உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சத்திற்கான குறைபாட்டை எதிர்கொள்ளும் வகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் அதனை அக்சஸரியாக மாற்றி இருக்கிறது.
இவைதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் மாதங்களில் புதிய ஹண்டர் 350, ஹிமாலயன் 450, ஷாட்கன் 650 மற்றும் சில மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்டார்க் ஸ்கூட்டரின் XT வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது என்டார்க் 125சிசி ஸ்கூட்டர் மாடலின் புதிய XT வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT விலை ரூ. 1,02,823 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டி.வி.எஸ். என்டார்க் XT மாடலில் ஹைப்ரிட் SmartXonnect சிஸ்டம், TFT மற்றும் LCD கன்சோல், 60 ஹை-டெக் அம்சங்கள், டி.வி.எஸ். இன்டெலிகோ தொழில்நுட்பம், மேம்பட்ட ஸ்டார்ட்-ஸ்டாப் பன்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட் அலாய் வீல்கள் உள்ளன.

டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் சமூக வலைதள நோட்டிபிகேஷன் அலெர்ட், ஆன்லைன் உணவு டெலிவரி போன்ற மிக முக்கிய விவரங்களை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள டிராபிக் டைம் ஸ்லைடர் ஸ்கிரீன்களை கொண்டு நேரலை விளையாட்டு ஸ்கோர்கள், செய்தி மற்றும் பல்வேறு விவரங்களை போக்குவரத்து நெரிசல் அல்லது சிக்னலில் நிற்கும் போது பார்க்க முடியும்.
புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் 124.8 சிசி, சிங்கில் சிலிண்டர், 3 வால்வு, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 பி.ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதில் உள்ள SmartXtalk அம்சம் வாய்ஸ் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இதை கொண்டு ஸ்கூட்டர் மோட், ஸ்கிரீன் பிரைட்னஸ், நேவிகேஷன், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை குரல் வழியே மேற்கொள்ள முடியும். இத்துடன் எரிபொருள் குறைவது, வீணாவது, மழை எச்சரிக்கை, போன் பேட்டரி குறைவது போன்ற தகவல்களையும் இந்த ஸ்கூட்டர் வழங்கும்.






