என் மலர்
பைக்
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் நீன்ட ரேன்ஜ் வழங்கும் 2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 2022 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடல் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. 2022 டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - டி.வி.எஸ். ஐகியூப், ஐகியூப் S மற்றும் ஐகியூப் ST என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
2020 ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டி.வி.எஸ். ஐகியூப் மாடல் தற்போது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடல் - சாய்ஸ், கம்ஃபர்ட் மற்றும் சிம்ப்லிசிட்டி என மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. ரேன்ஜ், ஸ்டோரேஜ், நிறங்கள் மற்றும் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களின் அடிப்படையில் பயனர்கள் டி.வி.எஸ். ஐகியூப் மாடலின் மூன்று வேரியண்ட்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

மேம்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 2022 டி.வி.எஸ். ஐகியூப் S மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. டாப் எண்ட் ST வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டுள்ளது. மூன்று வேரியண்ட்களின் ரேன்ஜ் முந்தைய மாடல்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 டி.வி.எஸ். ஐகியூப் மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 98 ஆயிரத்து 564 ஆன்-ரோடு, டெல்லி என்றும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690, ஆன் -ரோடு, டெல்லி என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.வி.எஸ். ஐகியூப் ST வேரியண்ட் விலை அறிவிக்கப்படவில்லை. புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும்.
இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஒடிசி இரண்டு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
மும்பையை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஒடிசி இந்திய சந்தையில் V2 மற்றும் V2 பிளஸ் பெயரில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 75 ஆயிரம் மற்றும் ரூ. 97 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒடிசி V2 மற்றும் ஒடிசி V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சேர்த்து மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒடிசி நிறுவனம் விற்பனை செய்கிறது.
இவை தவிர ஆண்டி தெப்ட் லாக், பேட்டரி கூலிங் தொழில்நுட்பம், கச்சிதமான பூட் ஸ்பேஸ், 12 இன்ச் அளவில் முன்புற டையர், எல்.இ.டி. லைட்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு புதிய ஸ்கூட்டர்கள் மட்டும் இன்றி ஒடிசி நிறுவனம் E2கோ, ஹாக் பிளஸ், ரேசர் மற்றும் எவோகிஸ் என நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

புது மாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து இந்தியா முழுக்க தனது டீலர் நெட்வொர்க் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உயர்த்த ஒடிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்தவும் ஒடிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆமதாபாத், மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்க ஒடிசி நிறுவனம் முடிவு செய்துது.
புதிய ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67 தர வசதி கொண்ட பேட்டரிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் முழு சார்ஜ் செய்தால் 150 கி.மீ. ரேன்ஜ் வழங்குகின்றன. ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பல்வேறு விதமான நிறங்களில் கிடைக்கின்றன.
கே.டி.எம். நிறுவனம் விரைவில் 2022 RC 390 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக 2022 கே.டி.எம். RC390 இருக்கிறது. இந்த மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்வெளியாகி உள்ளது. புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் முந்தைய மாடலை விட அதிக அப்டேட்களை பெற்று இருக்கிறது.
இவற்றில் புதிய டிரெலிஸ் ஃபிரேம், போல்ட்-ஆன் சப்-ஃபிரேம் உள்ளிட்டவை அடங்கும்.இதுதவிர 1.7 கிலோ குறைந்த எடை கொண்ட 5 ஸ்போக் அலாய் வீல்கள், பெரிய 13.7 லிட்டர் பியூவல் டேன்க், லைட் பிரேக்கிங் ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் காரணமாக புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் எடை குறைந்து இருக்கும் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் புது மாடல் முன்பை விட சிறப்பான ஹேண்ட்லிங் வழங்கும்.

2022 கே.டி.எம். RC390 மாடலில் புதிய TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குவிக்ஷிப்டர், கார்னெரிங் ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 2022 கே.டி.எம். RC390 மாடலில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 43.5 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR310, கவாசகி நின்ஜா 300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பிகாஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இரண்டு வெவ்வேறு வேரியண்ட்களில் அறிமுகம் செய்து இருக்கிறது.
பிகாஸ் நிறுவனம் இந்தியாவில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. BG D15 என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - BG D15i மற்றும் BG D15 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
புதிய பிகாஸ் BG D15 ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் அதனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்ததோடு இந்திய சந்தையில் தனது விற்பனையை அதிகப்படுத்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட சந்தைகளில் டீலர் நெட்வொர்க்-ஐ அதிகப்படுத்த திட்டம் தீட்டி இருக்கிறது.

தற்போது நாடு முழுக்க 100 ஷோரூம்களை பிகாஸ் இயக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் முடிவு செய்து உள்ளது. புதிய பிகாஸ் BG D15 மாடலில் 3.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை 7 நொடிகளுக்குள் எட்டிவிடும்.
பிகாஸ் BG D15 ஸ்கூட்டர் இகோ மற்றும் ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இதில் 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5.30 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ ஸ்கூட்டர் மாடல்களில் மார்ச் 2022-க்கு முன் வினியோகம் செய்யப்பட்ட யூனிட்களுக்கு மட்டும் மேம்பட்ட VCU-க்களை வழங்க துவங்கி உள்ளது.
ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறுவது, ரிவர்ஸ் மோடில் திடீரென அதிவேகமாக இயங்குவது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு VCU (வெஹிகில் கண்ட்ரோல் யூனிட்) கொண்டு அப்டேட் வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு VCU அப்டேட் செய்யப்படும் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட அதிகளவு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. பழைய மாடல்கள் மட்டுமின்றி புதிதாக உருவாக இருக்கும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் மேம்பட்ட VCU-க்களே வழங்கப்பட இருக்கின்றன. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட VCU-க்களில் இ ஸ்கூட்டர்களில் வரும் பிரச்சினைகளை தீர்க்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்போர்டு VCU-க்களை வழங்கி வருகிறது. முன்னதாக தீ விபத்து மற்றும் ரிவர்ஸ் மோடில் அதிவேகமாக இயங்குவது போன்ற பிரச்சினைகளில் ஓலா எலெக்ட்ரிக் சிக்கித் தவித்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஸ்கூட்டர்களை பரிசோதனை செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருந்தது.
இதுதவிர வாகனங்களில் வழங்கப்படும் பேட்டரி செல் மற்றும் பேட்டரி பேக் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை ஓலா எலெக்ட்ரிக் தொடர்ச்சியாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. VCU யூனிட்களின் தெர்மல் மேனேஜ்மண்ட் பேட்டரி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும். இந்த நிலையில், VCU அப்டேட் மூலம் பல்வேறு பிரச்சினைகளை ஓலா எலெக்ட்ரிக் எதிர்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புது விலை விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதில் 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை மட்டும் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாடல்களின் விலை தற்போது ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய விலை உயர்வின் படி கே.டி.எம். 390 டியூக் மற்றும் 250 டியூக் மாடல்கள் விலை முறையே ரூ. 2 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. புதிய விலை மே 5 ஆம் தேதி முதல் அமலாகி இருக்கின்றன. உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக இரு மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்த்தப்படுவதாக கே.டி.எம். நிறுவனம் டீலர்களிடம் தெரிவித்து உள்ளது.

390 மற்றும் 250 டியூக் மாடல்கள் தோற்றத்தில் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கின்றன. இதன் பெயிண்ட் மற்றும் ஹெட்லேம்ப்-இல் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாடல்களிலும் சேசிஸ், வீல்கள், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் உள்ளிட்டவை ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் பெரும் வித்தியாசம் என்ஜின் மட்டும் தான் எனலாம்.
அந்த வகையில் கே.டி.எம். 390 டியூக் மாடலில் 373சிசி, என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டியூக் 250 மாடலில் 248சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.6 ஹெச்.பி. பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. எனினும் 390 டியூக் மாடலில் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் லைவ் வயர் பிராண்டு இ பைக் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு லைவ் வயர் சமீபத்தில் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட S2 டெல் மார் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் இதே மாடலின் லான்ச் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இந்த மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் லைவ் வயர் S2 டெல் மார் LE மாடல் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
புதிய டெல் மார் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த இ பைக் 80 பி.ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது லைவ் வயர் ஒன் மாடலில் உள்ளதை விட 20 சதவீதம் குறைவு ஆகும். மேலும் இது முந்தைய மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது.
இந்த இ பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த மாடலில் பில்ட் இன் GPS, இண்டர்நெட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவர் தி ஏர் அப்டேட் மூலம் புது அம்சங்கள் வழங்கப்படும்.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் மாடலின் விலை மீண்டும் மாற்றி அமைத்து இருக்கிறது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
யமஹா ஏரோக்ஸ் 155 விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டது. தற்போதைய விலை உயர்வை சேர்த்து ஏரோக்ஸ் மாடல் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை யமஹா ஏரோக்ஸ் 155 விலை ரூ. 1,800 உயர்த்தப்பட்டு உள்ளது.

விலை உயர்வின் படி ஏரோக்ஸ் 155 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் யமஹா R15 மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் லிக்விட் கூலிங், வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் 155 மாடல் ரேசிங் புளூ, கிரே வெர்மிலான் மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இந்த மாத நிலவரப்படி புல்லட் 350 மாடல் விலை ரூ. 2 ஆயிரத்து 874 அதிகரித்து உள்ளது.
புதிய விலை விவரங்கள்:
ராயல் என்பீல்டு புல்லட் 350 ஸ்டாண்டர்டு மாடல் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 999
ராயல் என்பீல்டு புல்லட் 350 கிக்ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 674
ராயல் என்பீல்டு புல்லட் 350 எல்க்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 338
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய J ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் புதிய கிளாசிக் 350 மற்றும் Meteor 350 மாடல்களை போன்று இல்லாமல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய பிளாட்பார்மில் உருவாகி, விற்பனை செய்யப்பட்டு வரும் ஒற்றை மாடலாக புல்லட் 350 இருந்து வருகிறது. முன்னதாக புதிய தலைமுறை புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
தற்போதைய புல்லட் 350 மாடல் சிங்கில் கிராடில் பிரேம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 346சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.2 பி.ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிளை ஒரு வழியாக அறிமுகம் செய்து விட்டது. புதிய கே.டி.எம். RC390 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது முந்தைய மாடலை விட ரூ. 36 ஆயிரம் அதிகம் ஆகும்.
அதிக விலைக்கு ஈடு செய்யும் வகையில் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிளில் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. 2022 கே.டி.எம். RC390 மாடலின் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கே.டி.எம். RC200 ஸ்போர்ட் பைக் மாடலை தழுவிய டிசைன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பியூவல் டேன்க், ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில் செக்ஷன், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கே.டி.எம். RC390 மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏ.பி.எஸ்., குயிக்ஷிப்டர், TFT டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கியர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இதே அம்சங்கள் அதன் சர்வதேச வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 2022 கே.டி.எம். RC390 மாடலிலும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டிற்குள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் நிலையில் இருக்கும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவது பற்றிய தகவலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. இதே பெயரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூட்டும் போது, அதன் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என ஹோண்டா நம்புகிறது.
எனினும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குமா அல்லது தனது ஆக்டிவா மாடலை மாடிபை செய்து எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனம் பென்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் டெஸ்டிங் செய்து வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளில் சத்தமின்றி புது அப்டேட் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அப்டேட் செய்து இருக்கிறது. புது அப்டேட் படி பல்சர் 250 மாடல் இனி கிரீபியன் புளூ நிறத்திலும் கிடைக்கிறது. புதிய நிறம் பல்சர் N250 மற்றும் பல்சர் F250 மாடல்களில் கிடைக்கும். புகிய நிறம் கொண்ட வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், இரு மாடல்களின் புது நிறம் கொண்ட வேரியண்ட் தற்போதைய விலையிலேயே கிடைக்கும்.
இந்தியாவில் பஜாஜ் பல்சர் F250 கரீபியன் புளூ நிற மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 979 என்றும் பஜாஜ் பல்சர் N250 கரீபியன் புளூ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் ஹெட்லைட் கவுல், முன்புற பெண்டர், என்ஜின் கவுல், பியூவல் டேன்க் மற்றும் ரியர் பேனல் என அனைத்து இடங்களிலும் புளூ நிற பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் வெளிப்புற நிறத்திற்கு மேட்ச் செய்யும் வகையில் வீல் ஸ்ட்ரிப்களில் புளூ பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மாற்றங்கள் நிறத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 2 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன.
இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. பல்சர் 250 டுவின் மாடல்கள் டியுபுலர் ஸ்டீல் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.






