என் மலர்

  பைக்

  கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I
  X
  கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I

  ரூ. 41 ஆயிரம் விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரெட்டா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

  குஜராத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான கிரெட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மாடல் முற்றிலும் வித்தியாசமான பேமண்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் பயனர்கள் பேட்டரி மற்றும் சார்ஜரை அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. 

  கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I ஸ்கூட்டர் பேஸ் மாடல் விலை ரூ. 41 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டருடன் வரும் சார்ஜர் தொழில்நுட்பம் ஸ்கூட்டரை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். மேலும் மூன்று மணி நேரங்கள் சார்ஜ் செய்தால் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறி விடும். 

   கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I

  இந்த ஸ்கூட்டர் BLDC மோட்டார் மற்றும் 48-60 வோல்ட் லி-அயன் பேட்டரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. பயனர்கள் 60 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றின் விலை ரூ. 17 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 31 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர் விருப்பப்படி சார்ஜர்களின் விலை ரூ. 3 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I மாடல்களில் 3-ஸ்பீடு டிரைவ் மோட்களில் கிடைக்கிறது. இத்துடன் ரிவர்ஸ் மோட், எல்.இ.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, கீலெஸ் ஸ்டார்ட், குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் கண்ட்ரோலர், ஹைவே லைட்கள், சைடு இண்டிகேட்டர் பஸர், எல்.இ.டி. மீட்டர், இக்னிஷன்/சைல்டு லாக், பார்க் மோட், பிக்சட் ரிவர்ஸ் ஸ்பீடு மோட், மேம்பட்ட செல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
  Next Story
  ×