search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    X
    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மீண்டும் உடைந்து விழுந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஓலா எலெக்ட்ரிக்!

    தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணித்து கொண்டிருக்கும் போது பாதி வழியில் உடைந்து விட்டதாக மற்றொரு வாடிக்கையாளர் புதிதாக குற்றம்சாட்டி உள்ளார்.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஓடும் போதே பாதி வழியில் உடைந்து விழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது இதே பிரச்சினை குறித்து மற்றொரு வாடிக்கையாளரும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

    வழக்கறிஞராக இருக்கும் பிரியண்கா பரத்வாஜ் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருக்கும் போது, ஸ்பீடு பிரேக்கர் ஒன்றின் மீது ஏறும் போது திடீரென உடைந்து விழுந்து என குற்றம்சாட்டி இருக்கிறார். இதோடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புற டையர் உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்களையும் பிரியண்கா தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார்.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    “எனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றும் போது தானாக உடைந்து விட்டது. உடனே ஏதோ முறிந்தது போன்ற சத்தமும் கேட்டது. இதில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால் எனது ஸ்கூட்டருக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருக்கிறது, தயவு செய்து இதனை விரைந்து சரி செய்து தாருங்கள். நன்றி,” என பிரியண்கா பரத்வாஜ் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். 

    இவரது ட்விட்டர் பதிவை பார்த்த பலர் ஓலா ஸ்கூட்டர் மூலம் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தெரிவித்தனர். மேலும் பலர் ஓலா ஸ்கூட்டர்களின் உற்பத்தி தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டினர். பிரியண்கா பரத்வாஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓலா எலெக்ட்ரிக், “இந்த பிரச்சினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நாங்கள் விரைவில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×