search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா வரும் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    X

    விரைவில் இந்தியா வரும் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    • ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்று இருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் இரு பிரீமியம் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில், ஹோண்டா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹோண்டா U Go EV என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ஹோண்டா U Go EV மாடல் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான அம்சங்கள் மற்றும் அதிக செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் BLDC மோட்டார் உள்ளது. இது 1200 வாட்ஸ் மற்றும் 800 வாட்ஸ் என இருவிதங்களில் கிடைக்கிறது. இத்துடன் கழற்றக்கூடிய வசதி கொண்ட 30Ah லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.


    இதன் டூயல் பேட்டரி பேர் மாடல் முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும். ஹோண்டா U Go EV ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 53 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஹெட்லேம்ப், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆண்டி தெப்ட் அலாரம், யு.எஸ்.பி. சார்ஜிங், 26 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

    தற்போது காப்புரிமை பெற்று இருக்கும் நிலையில் விரைவில் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹோண்டா பேட்டரி மாற்றும் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×