என் மலர்
பைக்
- பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 310சிசி மோட்டார்சைக்கிள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
- இதன் விலை அபாச்சி RR310 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.
டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ. G 310 RR மோட்டார்சைக்கிள் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்டைலிங், எலெக்டிரானிக்ஸ் மற்றும் அம்சங்கள் தான் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எனினும், புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலின் விலை ரூ. 20 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அந்த வகையில் இரு மாடல்களையும் வித்தியாசப்படுத்தும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
தோற்றத்தை எடுத்துக் கொண்டால் பேட்ஜிங் மற்றும் வித்தியாசமான நிற ஆப்ஷன்கள் அடிப்படையில் புதிய பி.எம்.டபிள்யூ. பைக் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் - ஸ்டாண்டர்டு பிளாக் மற்றும் பாரம்பரிய பி.எம்.டபிள்யூ. ஆப்ஷனான HP-லிவர்டு ஸ்டைல் ஸ்போர்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவை தவிர மற்றொரு பெரிய மாற்றம் இரு மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டையர்கள் தான். பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் மிஷெலின் பைலட் ஸ்டிரீட் டையர்கள் உள்ளன. ஆனால் டி.வி.எஸ். அபாச்சி RR310 மிஷெலின் ரோட் 5s டையர்களை கொண்டுள்ளன.
சிறு சிறு மாற்றங்களை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் கன்வென்ஷனல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் பெட்டல் ரோட்டார்கள் தான் வழங்கப்பட்டு உள்ளன. இதன் டி.எப்.டி. டிஸ்ப்ளே கிராபிக்ஸ்-இல் ஆல்டர் செய்யப்பட்டு பி.எம்.டபிள்யூ. மாடலுக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு இருக்கிறது. எனினும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படவில்லை.

அபாச்சி RR310 மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வாடிக்கையாளர் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆப்ஷன் பி.எம்.டபிள்யூ. மாடலில் வழங்கப்படவில்லை. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் பின்புற பிரீ-லோடு மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
மேற்கூறிய வித்தியாசங்கள் தவிர இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன், சேசிஸ், என்ஜின், ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 312.2சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக G 310 RR இருந்து வந்தது.
- இந்தியாவில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் ஒரு வழியாக தனது சிறிய சூப்பர் ஸ்போர்ட் மாடல்- G 310 RR-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் விலை ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எணஅட் ஸ்டைல் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
ஸ்டைலிங்கை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட் கொண்டுள்ளன. இரு மாடல்களை வித்தியாசப்படுத்தும் வகையில் பி.எம்.டபிள்யூ. தனது சூப்பர்ஸ்போர்ட் மாடலை ரெட் மற்றும் புளூ நிற ஆப்ஷன்களில் வழங்குகிறது.

பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 313சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
அம்சங்களை பொருத்தவரை முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், பியூவல் லெவல், என்ஜின் டெம்பரேச்சர் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மேம்பட்ட G 310 R மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 2022 G 310 R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 R மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
2022 பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் மூன்று புதிய நிறங்கள் மற்றும் மேம்பட்ட டீகல்களுடன் கிடைக்கிறது. 2022 பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் வைட் மற்றும் ரேசிங் புளூ, ரேசிங் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை தவிர புது மாடலில் வேறு எந்த மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய பி.எம்.டபிள்யூ. G 310 R மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33,5 ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க் பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது. இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் கே.டி.எம். 390 டியூக் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடல் மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மற்றொரு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்கிறது. இது டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது மூன்றாவது 310சிசி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
பி.ம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய G 310 RR மோட்டார்சைக்கிளை நாளை அறிமுகம் செய்ய இருக்கிறது. டிவிஎஸ் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய G 310 RR மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மூன்றாவது 310 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். தற்போது G 310 R மற்றும் G 310 GS என இரு மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
புதிய பி.எம்.டபிள்யூ. மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலுக்கான விலை அறிவிக்கப்படாத நிலையில், இதனை ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த மாத தவணையில் வாங்கிட முடியும்.

தோற்றத்தில் இந்த மாடல் அதிகளவு மாற்றங்கள் இன்றி பி.எம்.டபிள்யூ. பாரபம்பரிய நிறம் மற்றும் கிராபிக்ஸ் உடன் உருவாகி இருக்கிறது. இந்த மாடலின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5.0 இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது.
பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 313 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ரைடு மோட்கள், டூயல் சேனல் ஏ.பிஎஸ். என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலின் விலை ரூ. 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- யமஹா நிறுவனத்தின் R15S மாடல் முந்தைய தலைமுறை மாடல் ஆகும்.
- இந்த மாடல் மொத்தத்தில் இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.
யமஹா நிறுவனம் R15S மோட்டார்சைக்கிள் விலையை ஜூலை மாதத்தில் உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய யமஹா R15S விலை தற்போது ரூ. 1 லட்சத்து 61 ஆயிரம் என துவங்குகிறது. இது முந்தைய விலையை விட ரூ. 1000 அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யமஹா R15S மாடல் ஆனது முந்தைய தலைமுறை R15 வெர்ஷன் 3 ஆகும். இதில் ஸ்ப்லிட் சீட் செட்டப்பிற்கு மாற்றாக ஒற்றை இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. யமஹா R15S மாடல் யமஹா நிறுவனத்தின் ரேசிங் புளூ மற்றும் மேட் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

R15S வெர்ஷன் 3 மாடலில் 155சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.6 ஹெச்.பி. பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது R15S மாடல் 0.2 ஹெச்.பி. பவர் அதிக திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், எல்.இ.டி. ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய யமஹா R15 வெர்ஷன் 4 மாடலுடன் ஒப்பிடும் போது R15S விலை ரூ. 16 ஆயிரம் குறைவு ஆகும். மேலும் R15S வெர்ஷன் 3 மாடல் கேடிஎம் RC125, பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்திய சந்தையில் கேடிஎம் RC125, பஜாஜ் பல்சர் RS200 மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 88 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 350சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை மாடலில் பரிசோதனை உபகரணங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த மாடலின் என்ஜின் மற்றும் எக்சாஸ்ட் நோட் விவரங்கள் ஸ்பை வீடியோவில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலுக்கு பிரத்யேக சத்தம் வழங்கப்படுகிறது.
ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய ஹண்டர் 350 மாடல் கிளாசிக் 350, மீடியோர் 350 மாடல்களில் வழங்கப்பட்ட என்ஜினை கொண்டிருக்கிறது. தோற்றத்தில் இந்த பைக் ரெட்ரோ ஸ்டைல் எலிமண்ட்களை கொண்டுள்ளது. இதில் வட்ட வடிவ ஹெட்லைட், ஹேண்டில்பாரில் மவுண்ட் செய்யப்பட்ட வட்ட வடிவ மிரர்கள், ஒற்றை பீஸ் இருக்கை, அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட் மற்றும் ஷார்டெண்டு ரியர் மட்கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

Photo Courtesy: Youtube: Inigo M Sabastian
புதிய ஹண்டர் 350 மாடலிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மாடல் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் போன்ற மாடல்களின் கீழ் நிலை நிறுத்தப்படும் என்றே தெரிகிறது.
- பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது டாமினர் சீரிஸ் மாடல்களின் விலையை மாற்றி உள்ளது.
- புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 மற்றும் டாமினர் 250 மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் முறையே ரூ. 6 ஆயிரத்து 400 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 152 என உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வை தொடர்ந்து டாமினர் 400 விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 538 என்றும் டாமினர் 250 விலை ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 002 என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக மூன்று வித டூயல் டோன் ஆப்ஷன்களில் வழங்கப்பட்டது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 248.77சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 ஹெச்.பி. பவர், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டாமினர் 400 மாடலில் 373.3சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 39.42 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக ஃபேக்டரி-ஃபிட் செய்யப்பட்ட டூரிங் அக்சஸரீக்கள் வழங்கப்பட்டன.
- டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன் புதிய ரோனின் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
- இந்த மாடலில் 225சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ரோனின் மாடல் இந்த பிரிவில் மிகவும் தாமதமாக எண்ட்ரி கொடுத்து இருக்கிறது. புதிய டிவிஎஸ் ரோனின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
என்ஜின் விவரங்கள்: புதிய ரோனின் மாடலில் உள்ள என்ஜின் குறைந்த மற்றும் மிட்-ரேன்ஜ் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த ஏர் மற்றும் ஆயில் கூல்டு 225.9சிசி என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணி்க்கு 120 கிமீ வேரத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

சேசிஸ் மற்றும் விவரங்கள்: டிவிஎஸ் ரோனின் மாடலில் டபுள்-கிராடில் பிரேம் மற்றும் அட்ஜஸ்ட் செய்யும் வசதியில்லா 41 மில்லிமீட்டர் ஷோவா பிக் பிஸ்டன் ஃபோர்க், கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் மொத்த எடை 160 கிலோ ஆகும். இதன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் 159 கிலோ எடை கொண்டுள்ளது. இதில் 14 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது.
இதர அம்சங்கள்: புதிய ரோனின் மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டி.ஆர்.எல்., இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், பிளாக் நிற என்ஜின் கவுல், சிங்கில்-பீஸ் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் முழு எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது.
- விலை உயர்வு இந்த மாதமே அமலுக்கு வந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வில் ஹீரோ பிளெஷர் பிளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 110, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, டெஸ்டினி 125 மற்றும் டெஸ்டினி 125 XTEC போன்ற மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. விலை உயர்வு தவிர ஸ்கூட்டர்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய விலை விவரம்:
பிளெஷர் பிளஸ் ஷீட் மெட்டல் வீல் ரூ. 64 ஆயிரத்து 548
பிளெஷர் பிளஸ் கேஸ்ட் வீல் ரூ. 66 ஆயிரத்து 948
பிளெஷர் பிளஸ் XTEC டிரம் ரூ. 73 ஆயிரத்து 400
பிளெஷர் பிளஸ் XTEC டிரம் ஜூபிலண்ட் எல்லோ ரூ. 75 ஆயிரம்
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ZX டிரம் ரூ. 66 ஆயிரத்து 820
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ZX டிஸ்க் ரூ. 73 ஆயிரத்து 489
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 76 ஆயிரத்து 878
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 81 ஆயிரத்து 328
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ப்ரிஸ்மேடிக் ரூ. 81 ஆயிரத்து 748
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 கனெக்டெட் ரூ. 85 ஆயிரத்து 748
டெஸ்டினி 125 LX ரூ. 70 ஆயிரத்து 950
டெஸ்டினி 125 VX ரூ. 75 ஆிரத்து 250
டெஸ்டினி 125 100 மில்லியன் ரூ. 76 ஆயிரத்து 800
டெஸ்டினி 125 பிளாட்டினம் ரூ. 77 ஆயிரத்து 200
டெஸ்டினி 125 XTEC STD ரூ. 70 ஆயிரத்து 290
டெஸ்டினி 125 XTEC LX ரூ. 75 ஆயிரத்து 500
டெஸ்டினி XTEC அலாய் வீல் ரூ. 81 ஆயிரத்து 990
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போதைய சூழலில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே பல நிறுவனங்களும் விலை உயர்வுக்கான காரணமாக தெரிவித்து வருகின்றன.
- டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ரோனின் மோட்டார்சைக்கிள் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்த மாடல் 225சிசி என்ஜின் கொண்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரோனின் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை விவரங்கள்:
டிவிஎஸ் ரோனின் சிங்கில் டோன் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம்
டிவிஎஸ் ரோனின் டூயல் டோன் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 500
டிவிஎஸ் ரோனின் ட்ரிபில் டோன் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 750
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடல் ஆகும். இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டி.ஆர்.எல்., இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், பிளாக் நிற என்ஜின் கவுல், சிங்கில்-பீஸ் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், டூயல் டோன் ஃபினிஷ் கொண்டு இருக்கிறது.
இந்த மாடலில் முழு எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.1 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ரோனின் மாடல் ஹோண்டா CB350 RS மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
- டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்டிரீட்பைட்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் சக்திவாய்ந்த ஸ்டிரீட்பைட்டர் V4 SP ஹைப்பர் நேக்கட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களை விட முறையே ரூ. 14 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சத்து 76 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலின் மொத்த எடை 196 கிலோ ஆகும். இந்த பைக்கின் ஸ்டாப்பிங் பவர் பிரெம்போ ஸ்டைல்மா ஆர் கேலிப்பர்கள் மூலம் பெறுகிறது. இதன் சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் NIX-30 முன்புற ஃபோர்க்குகள், TTX36 ரியர் ஷாக் அப்சார்பர் மற்றும் ஒலின்ஸ் ஸ்டீரிங் டேம்ப்பர் மற்றும் ஒலின்ஸ் ஸ்மார்ட் EC 2.0 சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 1103சிசி டெஸ்மோசிடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105 ஹெச்.பி. பவர், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் கார்னரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லைட் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்திய சந்தையில் புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு நாடு முழுக்க டுகாட்டி விற்பனை மையங்களில் மேற்கொள்ள முடியும். வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
- கீவே இந்தியா நிறுவனம் புதிய குரூயிசர் மாடல் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
- முன்னதாக கீவே நிறுவன ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
கீவே நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த K லைட் 250V குரூயிசர் மாடல் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கீவே K லைட் 250V மேட் புளூ நிற வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 89 ஆயிரம் என்றும் மேட் டார்க் கிரே மற்றும் மேட் பிளாக் நிற வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு 300சிசி ஸ்கூட்டர்கள் கீவே - விஸ்டி 300 மற்றும் சிக்ஸ்டீஸ் 300i உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இரு ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் மற்ற நிற வேரியண்ட்களை தேர்வு செய்யும் போது விலை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை அதிகரிக்கும்.
கீவே K லைட் 250V மாடலில் 249சிசி ஏர் கூல்டு V டுவின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.7 ஹெச்.பி. பவர், 19 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனிற்கு யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.






