என் மலர்
பைக்
- யமஹா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய விற்பனையாளர்களுக்கு மட்டும் காட்சிப்படுத்தி இருந்தது.
- இந்தியாவுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளிலும் யமஹா ஈடுபட்டு வருகிறது.
யமஹா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி யமஹா நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு அசெம்பில் செய்யப்படும் என தெரிகிறது.
அந்த வகையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் யமஹா மிகவும் நிதானமாக இருப்பதையே உணர்த்துகிறது. தற்போது யமஹா நிறுவனம் தாய்வான் மற்றும் ஐரோப்பாவில் சில எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இவை எதுவும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான உற்பத்திக்கு தயார் நிலையில் இல்லை. இவற்றின் மிக அதிக விலை தான் இதற்கு காரணம் ஆகும்.

இந்தியாவில் அறிமுகம் செய்ய முற்றிலும் புது மாடலை உருவாக்கி, அதன் விலையை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் யமஹா நிறுவனம் உள்ளது. மேலும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வது அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
கடந்த மாதம் யமஹா நிறுவனம் டீலர்களுடன் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் NEO's மற்றும் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது. அந்த வகையில், இரு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவை தவிர அதிக ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் பணிகளிலும் யமஹா ஈடுபட்டுள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலில் 349சிசி என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த முறை ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் எவ்வித மறைப்பும் இன்றி விற்பனை மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
விற்பனை மையத்தில் ஏராளமான ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் வெளியீட்டை தொடர்ந்து இதன் டெலிவரியும் துவங்கி விடும் என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: Rushlane
புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் எடை மிகவும் குறைவாக இருக்கும் என்றும் இதுவரை வெளியான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் முதல் முறையாக எவ்வித மறைப்பும் இன்றி காட்சியளிக்கிறது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலில் சிறிய எக்சாஸ்ட், ஸ்ப்லிட் ரக கிராப் ரெயில்கள், வட்ட வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், இண்டிகேட்டர்கள், ரியர்-வியூ மிரர்கள் ஒற்றை இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது மோட்டார்சைக்கிள் அதிக சிசி என்ஜின் கொண்டு இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 350சிசி-500சிசி பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இது ஆகஸ்ட் மாத முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் ஹோண்டா நிறுவனத்தின் பிங் விங் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த மாடல் எந்த பிரிவில் களமிறங்கும் என்பது கேள்விக்குறியாவே உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இது முற்றுலும் புதிய மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இது CB அல்லது ஹைனெஸ் பிராண்டிங்கின் கீழ் வராது. தற்போது CB350 சீரிஸ் 350சிசி பிரிவிலும், CB500X மாடல் 500சிசி பிரிவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், CB500X விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் புதிதாக 500சிசி மாடலையே அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
- பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலாகவே இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த மாடலை இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்வதில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆர்வம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் இந்த மாடல் அறிமுகமாக சில காலம் ஆகும் என்ற நிலையில், இதன் விலை அனைவரும் வாங்கக்கூடிய வகையில் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலில் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 41.4 ஹெச்.பி. பவர் மற்றும் 62 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 10 நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 130 கி.மீ. வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் ஸ்பெஷல் எடிஷனை உருவாக்கி இருக்கிறது.
- இது ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 16 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 4V ரேலி எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்து 100, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்ர்டு மாடலின் விலையை விட ரூ. 16 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
புதிய ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஃபேக்டரி ரேசிங் நிறங்களான ரெட் மற்றும் வைட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்டிலும் 200சிசி, சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.9 ஹெச்.பி. பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதுதவிர ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஆஃப் ரோடிங் திறன்களை மேம்படுத்தும் வகையில் மோட்டார்சைக்கிளின் டைனமிக்ஸ் ஆல்டர் செய்யப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. இதன் சீட் உயரம் 825 மில்லிமீட்டர் அளவில் உள்ளது. மேலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 50 மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

இத்துடன் நீண்ட கியர் ஷிப்ட் லீவர் மற்றும் சைடு ஸ்டாண்டு உள்ளது. முன்புறம் 21 இன்ச், பின்புறம் 18 இன்ச் ஸ்போக்டு வீல்கள் உள்ளன. இதில் இரட்டை பயன்பாடுகளுக்கு ஏற்ற ரப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதே போன்று எல்இடி இலுமினேஷன் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட கன்சோல் மாற்றப்படவில்லை.
புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். எனினும், இந்த மாடல் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன என்ற விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை அறிவிக்கவில்லை. எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலுக்கான முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி ஹீரோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்க இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 310சிசி மோட்டார்சைக்கிள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
- இதன் விலை அபாச்சி RR310 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.
டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ. G 310 RR மோட்டார்சைக்கிள் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்டைலிங், எலெக்டிரானிக்ஸ் மற்றும் அம்சங்கள் தான் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எனினும், புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலின் விலை ரூ. 20 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அந்த வகையில் இரு மாடல்களையும் வித்தியாசப்படுத்தும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
தோற்றத்தை எடுத்துக் கொண்டால் பேட்ஜிங் மற்றும் வித்தியாசமான நிற ஆப்ஷன்கள் அடிப்படையில் புதிய பி.எம்.டபிள்யூ. பைக் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் - ஸ்டாண்டர்டு பிளாக் மற்றும் பாரம்பரிய பி.எம்.டபிள்யூ. ஆப்ஷனான HP-லிவர்டு ஸ்டைல் ஸ்போர்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவை தவிர மற்றொரு பெரிய மாற்றம் இரு மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டையர்கள் தான். பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் மிஷெலின் பைலட் ஸ்டிரீட் டையர்கள் உள்ளன. ஆனால் டி.வி.எஸ். அபாச்சி RR310 மிஷெலின் ரோட் 5s டையர்களை கொண்டுள்ளன.
சிறு சிறு மாற்றங்களை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் கன்வென்ஷனல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் பெட்டல் ரோட்டார்கள் தான் வழங்கப்பட்டு உள்ளன. இதன் டி.எப்.டி. டிஸ்ப்ளே கிராபிக்ஸ்-இல் ஆல்டர் செய்யப்பட்டு பி.எம்.டபிள்யூ. மாடலுக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு இருக்கிறது. எனினும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படவில்லை.

அபாச்சி RR310 மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வாடிக்கையாளர் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆப்ஷன் பி.எம்.டபிள்யூ. மாடலில் வழங்கப்படவில்லை. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் பின்புற பிரீ-லோடு மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
மேற்கூறிய வித்தியாசங்கள் தவிர இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன், சேசிஸ், என்ஜின், ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 312.2சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக G 310 RR இருந்து வந்தது.
- இந்தியாவில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் ஒரு வழியாக தனது சிறிய சூப்பர் ஸ்போர்ட் மாடல்- G 310 RR-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் விலை ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எணஅட் ஸ்டைல் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
ஸ்டைலிங்கை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட் கொண்டுள்ளன. இரு மாடல்களை வித்தியாசப்படுத்தும் வகையில் பி.எம்.டபிள்யூ. தனது சூப்பர்ஸ்போர்ட் மாடலை ரெட் மற்றும் புளூ நிற ஆப்ஷன்களில் வழங்குகிறது.

பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 313சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
அம்சங்களை பொருத்தவரை முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், பியூவல் லெவல், என்ஜின் டெம்பரேச்சர் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மேம்பட்ட G 310 R மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 2022 G 310 R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 R மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
2022 பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் மூன்று புதிய நிறங்கள் மற்றும் மேம்பட்ட டீகல்களுடன் கிடைக்கிறது. 2022 பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் வைட் மற்றும் ரேசிங் புளூ, ரேசிங் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை தவிர புது மாடலில் வேறு எந்த மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய பி.எம்.டபிள்யூ. G 310 R மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33,5 ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க் பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது. இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் கே.டி.எம். 390 டியூக் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடல் மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மற்றொரு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்கிறது. இது டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது மூன்றாவது 310சிசி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
பி.ம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய G 310 RR மோட்டார்சைக்கிளை நாளை அறிமுகம் செய்ய இருக்கிறது. டிவிஎஸ் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய G 310 RR மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மூன்றாவது 310 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். தற்போது G 310 R மற்றும் G 310 GS என இரு மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
புதிய பி.எம்.டபிள்யூ. மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலுக்கான விலை அறிவிக்கப்படாத நிலையில், இதனை ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த மாத தவணையில் வாங்கிட முடியும்.

தோற்றத்தில் இந்த மாடல் அதிகளவு மாற்றங்கள் இன்றி பி.எம்.டபிள்யூ. பாரபம்பரிய நிறம் மற்றும் கிராபிக்ஸ் உடன் உருவாகி இருக்கிறது. இந்த மாடலின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5.0 இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது.
பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 313 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ரைடு மோட்கள், டூயல் சேனல் ஏ.பிஎஸ். என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலின் விலை ரூ. 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- யமஹா நிறுவனத்தின் R15S மாடல் முந்தைய தலைமுறை மாடல் ஆகும்.
- இந்த மாடல் மொத்தத்தில் இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.
யமஹா நிறுவனம் R15S மோட்டார்சைக்கிள் விலையை ஜூலை மாதத்தில் உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய யமஹா R15S விலை தற்போது ரூ. 1 லட்சத்து 61 ஆயிரம் என துவங்குகிறது. இது முந்தைய விலையை விட ரூ. 1000 அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யமஹா R15S மாடல் ஆனது முந்தைய தலைமுறை R15 வெர்ஷன் 3 ஆகும். இதில் ஸ்ப்லிட் சீட் செட்டப்பிற்கு மாற்றாக ஒற்றை இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. யமஹா R15S மாடல் யமஹா நிறுவனத்தின் ரேசிங் புளூ மற்றும் மேட் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

R15S வெர்ஷன் 3 மாடலில் 155சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.6 ஹெச்.பி. பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது R15S மாடல் 0.2 ஹெச்.பி. பவர் அதிக திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், எல்.இ.டி. ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய யமஹா R15 வெர்ஷன் 4 மாடலுடன் ஒப்பிடும் போது R15S விலை ரூ. 16 ஆயிரம் குறைவு ஆகும். மேலும் R15S வெர்ஷன் 3 மாடல் கேடிஎம் RC125, பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்திய சந்தையில் கேடிஎம் RC125, பஜாஜ் பல்சர் RS200 மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 88 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 350சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை மாடலில் பரிசோதனை உபகரணங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த மாடலின் என்ஜின் மற்றும் எக்சாஸ்ட் நோட் விவரங்கள் ஸ்பை வீடியோவில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலுக்கு பிரத்யேக சத்தம் வழங்கப்படுகிறது.
ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய ஹண்டர் 350 மாடல் கிளாசிக் 350, மீடியோர் 350 மாடல்களில் வழங்கப்பட்ட என்ஜினை கொண்டிருக்கிறது. தோற்றத்தில் இந்த பைக் ரெட்ரோ ஸ்டைல் எலிமண்ட்களை கொண்டுள்ளது. இதில் வட்ட வடிவ ஹெட்லைட், ஹேண்டில்பாரில் மவுண்ட் செய்யப்பட்ட வட்ட வடிவ மிரர்கள், ஒற்றை பீஸ் இருக்கை, அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட் மற்றும் ஷார்டெண்டு ரியர் மட்கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

Photo Courtesy: Youtube: Inigo M Sabastian
புதிய ஹண்டர் 350 மாடலிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மாடல் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் போன்ற மாடல்களின் கீழ் நிலை நிறுத்தப்படும் என்றே தெரிகிறது.
- பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது டாமினர் சீரிஸ் மாடல்களின் விலையை மாற்றி உள்ளது.
- புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 மற்றும் டாமினர் 250 மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் முறையே ரூ. 6 ஆயிரத்து 400 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 152 என உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வை தொடர்ந்து டாமினர் 400 விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 538 என்றும் டாமினர் 250 விலை ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 002 என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக மூன்று வித டூயல் டோன் ஆப்ஷன்களில் வழங்கப்பட்டது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 248.77சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 ஹெச்.பி. பவர், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டாமினர் 400 மாடலில் 373.3சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 39.42 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக ஃபேக்டரி-ஃபிட் செய்யப்பட்ட டூரிங் அக்சஸரீக்கள் வழங்கப்பட்டன.






