search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hero Xpulse 200 4V Rally Edition"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் ஸ்பெஷல் எடிஷனை உருவாக்கி இருக்கிறது.
    • இது ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 16 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 4V ரேலி எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்து 100, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்ர்டு மாடலின் விலையை விட ரூ. 16 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஃபேக்டரி ரேசிங் நிறங்களான ரெட் மற்றும் வைட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்டிலும் 200சிசி, சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.9 ஹெச்.பி. பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதுதவிர ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஆஃப் ரோடிங் திறன்களை மேம்படுத்தும் வகையில் மோட்டார்சைக்கிளின் டைனமிக்ஸ் ஆல்டர் செய்யப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. இதன் சீட் உயரம் 825 மில்லிமீட்டர் அளவில் உள்ளது. மேலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 50 மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.


    இத்துடன் நீண்ட கியர் ஷிப்ட் லீவர் மற்றும் சைடு ஸ்டாண்டு உள்ளது. முன்புறம் 21 இன்ச், பின்புறம் 18 இன்ச் ஸ்போக்டு வீல்கள் உள்ளன. இதில் இரட்டை பயன்பாடுகளுக்கு ஏற்ற ரப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதே போன்று எல்இடி இலுமினேஷன் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட கன்சோல் மாற்றப்படவில்லை.

    புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். எனினும், இந்த மாடல் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன என்ற விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை அறிவிக்கவில்லை. எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலுக்கான முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி ஹீரோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்க இருக்கிறது.

    ×