search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா வரும் 500சிசி ஹோண்டா பைக்
    X

    விரைவில் இந்தியா வரும் 500சிசி ஹோண்டா பைக்

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது மோட்டார்சைக்கிள் அதிக சிசி என்ஜின் கொண்டு இருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 350சிசி-500சிசி பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இது ஆகஸ்ட் மாத முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.


    புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் ஹோண்டா நிறுவனத்தின் பிங் விங் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த மாடல் எந்த பிரிவில் களமிறங்கும் என்பது கேள்விக்குறியாவே உள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இது முற்றுலும் புதிய மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இது CB அல்லது ஹைனெஸ் பிராண்டிங்கின் கீழ் வராது. தற்போது CB350 சீரிஸ் 350சிசி பிரிவிலும், CB500X மாடல் 500சிசி பிரிவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், CB500X விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் புதிதாக 500சிசி மாடலையே அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    Next Story
    ×