search icon
என் மலர்tooltip icon

    பைக்

    சோதனையில் சிக்கிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350
    X

    சோதனையில் சிக்கிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350

    • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 350சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை மாடலில் பரிசோதனை உபகரணங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த மாடலின் என்ஜின் மற்றும் எக்சாஸ்ட் நோட் விவரங்கள் ஸ்பை வீடியோவில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலுக்கு பிரத்யேக சத்தம் வழங்கப்படுகிறது.

    ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய ஹண்டர் 350 மாடல் கிளாசிக் 350, மீடியோர் 350 மாடல்களில் வழங்கப்பட்ட என்ஜினை கொண்டிருக்கிறது. தோற்றத்தில் இந்த பைக் ரெட்ரோ ஸ்டைல் எலிமண்ட்களை கொண்டுள்ளது. இதில் வட்ட வடிவ ஹெட்லைட், ஹேண்டில்பாரில் மவுண்ட் செய்யப்பட்ட வட்ட வடிவ மிரர்கள், ஒற்றை பீஸ் இருக்கை, அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட் மற்றும் ஷார்டெண்டு ரியர் மட்கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது.



    Photo Courtesy: Youtube: Inigo M Sabastian

    புதிய ஹண்டர் 350 மாடலிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மாடல் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் போன்ற மாடல்களின் கீழ் நிலை நிறுத்தப்படும் என்றே தெரிகிறது.

    Next Story
    ×