search icon
என் மலர்tooltip icon

    பைக்

    பி.எம்.டபிள்யூ. G 310 RR vs டி.வி.எஸ். அபாச்சி RR310 - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?
    X

    பி.எம்.டபிள்யூ. G 310 RR vs டி.வி.எஸ். அபாச்சி RR310 - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 310சிசி மோட்டார்சைக்கிள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதன் விலை அபாச்சி RR310 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.

    டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ. G 310 RR மோட்டார்சைக்கிள் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்டைலிங், எலெக்டிரானிக்ஸ் மற்றும் அம்சங்கள் தான் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    எனினும், புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலின் விலை ரூ. 20 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அந்த வகையில் இரு மாடல்களையும் வித்தியாசப்படுத்தும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

    தோற்றத்தை எடுத்துக் கொண்டால் பேட்ஜிங் மற்றும் வித்தியாசமான நிற ஆப்ஷன்கள் அடிப்படையில் புதிய பி.எம்.டபிள்யூ. பைக் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் - ஸ்டாண்டர்டு பிளாக் மற்றும் பாரம்பரிய பி.எம்.டபிள்யூ. ஆப்ஷனான HP-லிவர்டு ஸ்டைல் ஸ்போர்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


    இவை தவிர மற்றொரு பெரிய மாற்றம் இரு மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டையர்கள் தான். பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் மிஷெலின் பைலட் ஸ்டிரீட் டையர்கள் உள்ளன. ஆனால் டி.வி.எஸ். அபாச்சி RR310 மிஷெலின் ரோட் 5s டையர்களை கொண்டுள்ளன.

    சிறு சிறு மாற்றங்களை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் கன்வென்ஷனல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் பெட்டல் ரோட்டார்கள் தான் வழங்கப்பட்டு உள்ளன. இதன் டி.எப்.டி. டிஸ்ப்ளே கிராபிக்ஸ்-இல் ஆல்டர் செய்யப்பட்டு பி.எம்.டபிள்யூ. மாடலுக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு இருக்கிறது. எனினும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படவில்லை.


    அபாச்சி RR310 மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வாடிக்கையாளர் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆப்ஷன் பி.எம்.டபிள்யூ. மாடலில் வழங்கப்படவில்லை. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் பின்புற பிரீ-லோடு மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

    மேற்கூறிய வித்தியாசங்கள் தவிர இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன், சேசிஸ், என்ஜின், ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 312.2சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×