என் மலர்

  பைக்

  இந்தியாவில் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் பி.எம்.டபிள்யூ.
  X

  இந்தியாவில் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் பி.எம்.டபிள்யூ.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இந்த மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

  பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலாகவே இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த மாடலை இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்வதில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆர்வம் செலுத்துவதாக கூறப்படுகிறது.


  இந்திய சந்தையில் இந்த மாடல் அறிமுகமாக சில காலம் ஆகும் என்ற நிலையில், இதன் விலை அனைவரும் வாங்கக்கூடிய வகையில் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.

  பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலில் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 41.4 ஹெச்.பி. பவர் மற்றும் 62 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 10 நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 130 கி.மீ. வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

  Next Story
  ×