என் மலர்

  பைக்

  விற்பனையகத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 - விரைவில் வெளியீடு?
  X

  விற்பனையகத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 - விரைவில் வெளியீடு?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த மாடலில் 349சிசி என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

  ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த முறை ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் எவ்வித மறைப்பும் இன்றி விற்பனை மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

  விற்பனை மையத்தில் ஏராளமான ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் வெளியீட்டை தொடர்ந்து இதன் டெலிவரியும் துவங்கி விடும் என எதிர்பார்க்கலாம்.


  Photo Courtesy: Rushlane

  புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் எடை மிகவும் குறைவாக இருக்கும் என்றும் இதுவரை வெளியான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் முதல் முறையாக எவ்வித மறைப்பும் இன்றி காட்சியளிக்கிறது.

  ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலில் சிறிய எக்சாஸ்ட், ஸ்ப்லிட் ரக கிராப் ரெயில்கள், வட்ட வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், இண்டிகேட்டர்கள், ரியர்-வியூ மிரர்கள் ஒற்றை இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

  Next Story
  ×