என் மலர்
பைக்
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
- புது ராயல் என்பீல்டு பைக் மாடல்கள் இந்திய சந்தையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் மாடலை ஆகஸ்ட் 07 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தற்போதைய டீசரின் படி ராயல் என்பீல்டு நிறுவனம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிறப்பு அறிமுக நிகழ்வை நடத்த இருப்பது தெரியவந்துள்ளது.
புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும். இது புல்லட் 350 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ஹண்டர் 350 மாடல் ஹோண்டா CB350 RS மற்றும் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் போன்ற மாடல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் எனும் விலை பிரிவில் களமிறங்கும் பட்சத்தில் ஹண்டர் 350 மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெறும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் ஸ்டைலிங் அசத்தலாக உள்ளது. இது இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மெல்லிய பியூவல் டேன்க், அப்-ஸ்வெப்ட் சிங்கில் சீட், மற்ற ராயல் என்பீல்டு மாடல்களில் உள்ள அம்சம் மற்றும் குறைந்த எடை உள்ளிட்டவை இந்த மாடலின் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த மாடல் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்மில் முதன் முதலில் மீடியோர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் புதிய ஹண்டர் 350 மாடலிலும் 350சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டு புறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன.
- டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஐகியூப் இந்திய உற்பத்தியில் அசத்தி வருகிறது.
- அமோக வரவேற்பு இல்லை என்ற போதிலும் இந்த மாடல் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.
டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் மாடல் இந்தியாவில் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐகியூப் மாடல் தொடர்ந்து வரவேற்பை பெற பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஐகியூப் மாடலின் புது வேரியண்ட் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான ஆப்ஷன்களை வழங்குகிறது. இத்துடன் இதன் பேஸ் வேரியண்ட் தற்போது அதிக ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இதன் விலை அதிகளவு மாற்றம் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சந்தையில் போட்டியை பலப்படுத்தி இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எதிர்கால திட்டமிடல் உடன் கடந்த ஆண்டு ரூ. 1000 கோடி முதலீடு செய்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ரூ. 1000 கோடி முதலீடு செய்து புது வாகனங்கள் மூலம் எலெக்ட்ரிக் மயமாக்கலை நீட்டிக்க டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜூன் 2022 மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 4 ஆயிரத்து 667 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருந்தது.
இது மே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 030 யூனிட்களை விட அதிகம் ஆகும். அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியில் 77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மாதாந்திர வாகன உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்களை அடைய டிவிஎஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
- டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
- இந்த மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஸ்கிராம்ப்ளர் 900 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முன்னதாக இதே மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் என அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்கிராம்ப்ளர் 900 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
விலை விவரஙகள்:
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 ஜெட் பிளாக் ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம்
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 மேட் காக்கி ரூ. 9 லட்சத்து 58 ஆயிரம்
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 கார்னிவல் ரெட் மற்றும் ஜெட் பிளாக் ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜெட் பிளாக் மற்றும் மேட் காக்கி நிறங்கள் மோனோ டோன் பினிஷ் கொண்டுள்ளன. கார்னிவல் ரெட் மற்றும் ஜெட் பிளாக் நிறம் மட்டும் டூயல் டோன் தீம் கொண்டுள்ளது. இது இந்த சீரிசில் விலை உயர்ந்த மாடல் ஆகும். இவை தவிர, ஸ்டைலிங், அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை ஒரே மாதிரி வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கிராம்ப்ளர் 900 மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், வயர்-ஸ்போக் வீல்கள், டெயில் செட் மற்றும் ட்வின் பாட் எக்சாஸ்ட் டிசைன் உள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை ஸ்கிராம்ப்ளர் 900 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இது 64.1 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 900 மாடல் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
- பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
- இந்த மாடல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
பஜாஜ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை தாக்கலின் போது இந்த தகவலை ராகேஷ் ஷர்மா தெரிவித்தார். முதல் மாடலே ஹை-எண்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என ராகேஷ் ஷர்மா குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில், புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 390 சீரிசுக்கு இணையான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றிய இதர விவரங்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். எனினும், இந்த மாடலின் ஆயத்த பணிகள் தற்போது தான் துவங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவை பொருத்தவரை சர்வதேச மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தாத நிலையை கடைபிடிக்கின்றன. எனினும், அனைத்து நிறுவனமும் திடமான எலெக்ட்ரிக் பைக்கை வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டம் கொண்டுள்ளன.
இது தவிர பஜாஜ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஹஸ்க்வர்னா பிராண்டிங் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் ஹஸ்க்வர்னா வெக்டார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு, மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
- கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது RC 125 மற்றும் RC 200 மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
- விலை தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
கேடிஎம் நிறுவனம் RC 125 மற்றும் RC 200 ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. முன்னதாக மே மாத வாக்கில் இரு மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய அறிவிப்பின் படி RC 125 மாடலின் விலை ரூ. 1,779, RC 200 மாடலின் விலை ரூ. 1,427 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதிய விலை விவரம்:
கேடிஎம் RC 125: ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 688
கேடிஎம் RC 200: ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 640
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உற்பத்தி செலவீனங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன. தற்போதைய விலை உயர்வை அடுத்து RC 125 மற்றும் RC 200 மாடல்கள் அந்த பிரிவில் விலை உயர்ந்த மாடலாக மாறி உள்ளன.
எனினும், இரு மாடல்களிலும் அவற்றுக்கு போட்டியாக உள்ள மோட்டார்சைக்கிள்களை விட அதிக அம்சங்கள், நவீன வசதிகள் மற்றும் அதிரடி செயல்திறன் வழங்கப்பட்டுள்ளன. கேடிஎம் RC 125 மாடலில் 124.7சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.75 ஹெச்.பி. பவர், 12 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கேடிஎம் RC 200 மாடலில் 199.5சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.4 ஹெச்.பி. பவர், 19.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச், பிரீமியம் WP சஸ்பென்ஷன், பைபிரெ பிரேக்குகள், ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், 13.7 லிட்டர் பியூவல் டேன்க், ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மோட்டோ ஜிபி ஸ்டைலிங் உள்ளன.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்பிலெண்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் மாடல் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் மாடலின் விலை ரூ. 77 ஆயிரத்து 430, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடல் - டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விலை விவரங்கள்:
ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிரம் ரூ. 77 ஆயிரத்து 430
ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிஸ்க் ரூ. 81 ஆயிரத்து 330
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலில் ஆல் பிளாக் பெயிண்ட், சூப்பர் ஸ்பிலெண்டர் பேட்ஜ், அதிக அளவில் குரோம் எலிமெண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் மாற்றங்கள் பெயிண்ட் அளவில் மட்டும் நிறுத்தப்பட்டு விட்டது. இவை தவிர டிசைன் மற்றும் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு மாடலை போன்றே காட்சி அளிக்கிறது.
ஹீரோ ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், டிண்ட் செய்யப்பட்ட வைசர், ஒற்றை இருக்கை, அலாய் வீல்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 124.7சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 10.7 ஹெச்.பி. பவர், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், 5 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட பின்புற ஸ்ப்ரிங், 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டிஸ்க் பிரேக் வெர்ஷனில் முன்புறம் 240 மில்லிமீட்டர் ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்புக்காக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புது மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு உள்ளது.
- இந்த மாடல் முழுக்க முழுக்க பிளாக் நிறம் கொண்டு இருக்கும் என தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிளின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர்களை ஹீரோ மோட்டோகார்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. டீசர்களின் படி இந்த மாடல் ஆல்-பிலாக் ஃபினிஷ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 100சிசி திறன் கொண்ட ஸ்பிலெண்டர் பிளஸ் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே ஆல் பிளாக் வெர்ஷனில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலில் பிளாக் நிற பேஸ் பெயிண்ட் ஹீரோ மற்றும் ஸ்பிலெண்டர் பிளஸ் லோகோக்களை பியூவல் டேன்க் மற்ரும் பக்கவாட்டு பேனல்களில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர சூப்பர் ஸ்பிலெண்டர் 125 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் இந்த மாடல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 124.7சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கும். இது 10.7 ஹெச்.பி. பவர் மற்றும் 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஹார்டுவேரை பொருத்தவரை டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் ஸ்ப்ரிங்குகள், 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடல் 240 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த மாடலில் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பு உள்ளது. ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் 125 மாடலின் புது வெர்ஷன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- யமஹா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய விற்பனையாளர்களுக்கு மட்டும் காட்சிப்படுத்தி இருந்தது.
- இந்தியாவுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளிலும் யமஹா ஈடுபட்டு வருகிறது.
யமஹா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி யமஹா நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு அசெம்பில் செய்யப்படும் என தெரிகிறது.
அந்த வகையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் யமஹா மிகவும் நிதானமாக இருப்பதையே உணர்த்துகிறது. தற்போது யமஹா நிறுவனம் தாய்வான் மற்றும் ஐரோப்பாவில் சில எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இவை எதுவும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான உற்பத்திக்கு தயார் நிலையில் இல்லை. இவற்றின் மிக அதிக விலை தான் இதற்கு காரணம் ஆகும்.

இந்தியாவில் அறிமுகம் செய்ய முற்றிலும் புது மாடலை உருவாக்கி, அதன் விலையை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் யமஹா நிறுவனம் உள்ளது. மேலும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வது அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
கடந்த மாதம் யமஹா நிறுவனம் டீலர்களுடன் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் NEO's மற்றும் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது. அந்த வகையில், இரு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவை தவிர அதிக ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் பணிகளிலும் யமஹா ஈடுபட்டுள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலில் 349சிசி என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த முறை ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் எவ்வித மறைப்பும் இன்றி விற்பனை மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
விற்பனை மையத்தில் ஏராளமான ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் வெளியீட்டை தொடர்ந்து இதன் டெலிவரியும் துவங்கி விடும் என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: Rushlane
புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் எடை மிகவும் குறைவாக இருக்கும் என்றும் இதுவரை வெளியான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் முதல் முறையாக எவ்வித மறைப்பும் இன்றி காட்சியளிக்கிறது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலில் சிறிய எக்சாஸ்ட், ஸ்ப்லிட் ரக கிராப் ரெயில்கள், வட்ட வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், இண்டிகேட்டர்கள், ரியர்-வியூ மிரர்கள் ஒற்றை இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது மோட்டார்சைக்கிள் அதிக சிசி என்ஜின் கொண்டு இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 350சிசி-500சிசி பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இது ஆகஸ்ட் மாத முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் ஹோண்டா நிறுவனத்தின் பிங் விங் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த மாடல் எந்த பிரிவில் களமிறங்கும் என்பது கேள்விக்குறியாவே உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இது முற்றுலும் புதிய மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இது CB அல்லது ஹைனெஸ் பிராண்டிங்கின் கீழ் வராது. தற்போது CB350 சீரிஸ் 350சிசி பிரிவிலும், CB500X மாடல் 500சிசி பிரிவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், CB500X விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் புதிதாக 500சிசி மாடலையே அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
- பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலாகவே இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த மாடலை இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்வதில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆர்வம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் இந்த மாடல் அறிமுகமாக சில காலம் ஆகும் என்ற நிலையில், இதன் விலை அனைவரும் வாங்கக்கூடிய வகையில் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலில் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 41.4 ஹெச்.பி. பவர் மற்றும் 62 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 10 நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 130 கி.மீ. வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் ஸ்பெஷல் எடிஷனை உருவாக்கி இருக்கிறது.
- இது ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 16 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 4V ரேலி எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்து 100, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்ர்டு மாடலின் விலையை விட ரூ. 16 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
புதிய ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஃபேக்டரி ரேசிங் நிறங்களான ரெட் மற்றும் வைட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்டிலும் 200சிசி, சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.9 ஹெச்.பி. பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதுதவிர ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஆஃப் ரோடிங் திறன்களை மேம்படுத்தும் வகையில் மோட்டார்சைக்கிளின் டைனமிக்ஸ் ஆல்டர் செய்யப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. இதன் சீட் உயரம் 825 மில்லிமீட்டர் அளவில் உள்ளது. மேலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 50 மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

இத்துடன் நீண்ட கியர் ஷிப்ட் லீவர் மற்றும் சைடு ஸ்டாண்டு உள்ளது. முன்புறம் 21 இன்ச், பின்புறம் 18 இன்ச் ஸ்போக்டு வீல்கள் உள்ளன. இதில் இரட்டை பயன்பாடுகளுக்கு ஏற்ற ரப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதே போன்று எல்இடி இலுமினேஷன் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட கன்சோல் மாற்றப்படவில்லை.
புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். எனினும், இந்த மாடல் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன என்ற விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை அறிவிக்கவில்லை. எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலுக்கான முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி ஹீரோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்க இருக்கிறது.






