search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஆக்டிவா 6ஜி பிரீமியம் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    ஆக்டிவா 6ஜி பிரீமியம் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    • அசத்தலான டீசர்களை தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி பிரீமியம் மாடலை அறிமுகம் செய்தது.
    • புது ஸ்கூட்டரின் விலை டீலக்ஸ் வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி பிரீமியம் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்கூட்டருக்கான டீசர்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இதன் அம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிரீமியம் மாடல் விலை ரூ. 75 ஆயிரத்து 400 ஆகும். இது டீலக்ஸ் வேரியண்டை விட ரூ. 1000 ஆயிரம் அதிகம் ஆகும். ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் விலை ரூ. 74 ஆயிரத்து 400 ஆகும். இரு விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் கோல்டன் வீல்கள், 3டி கோல்டு பினிஷ் செய்யப்பட்ட லோகோ, பிரவுன் நிற இன்னர் பாடி மற்றும் சீட் கவர், முன்புற அப்ரன் மீது கோல்டன் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் இந்த ஸ்கூட்டர் புதிதாக மேட் சங்கிரா ரெட் மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் மற்றும் பியல் சைரன் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. பிரீமியம் எடிஷனில் வேறு எந்த புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

    ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலில் 109.51சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.68 ஹெச்பி பவர், 8.79 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 12-10 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எக்ஸ்டெர்னல் பியூவல் பில்லர் கேப், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் ஸ்விட்ச், சைலண்ட் ஸ்டார்டர், சீட் மற்றும் எக்ஸ்டெர்னல் பியூவல் பில்லர் கேப் உள்ளிட்டவைகளை திறக்க டூயல் பன்ஷன் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×