என் மலர்tooltip icon

    பைக்

    • கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியூக் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • இந்த அப்டேட் மூலம் டியூக் மாடல்களில் காஸ்மெடிக் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது டியூக் சீரிஸ் மாடல்களை ஒட்டுமொத்தமாக அப்டேட் செய்து இருக்கிறது. கேடிஎம் 125 டியூக், 200 டியூக், 250 டியூக் மற்றும் 390 டியூக் என நான்கு மாடல்களும் அப்டேட் செய்யப்பட்டு, தற்போது புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    புது அப்டேட் படி கேடிஎம் 125 டியூக் மாடல் தற்போது எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் செராமிக் நிறங்களில் கிடைக்கிறது. இதில் வைட், ஆரஞ்சு, பிளாக் மற்றும் புளூ போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 200 மற்றும் 250 டியூக் மாடல்கள் டார்க் சில்வர் மெட்டாலிக் மற்றும் எபோனி பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன. இவை பைக்கிற்கு கூர்மையான தோற்றத்தை வழங்கி உள்ளன.


    390 டியூக் மாடல் தற்போது டார்க் கல்வேனோ நிறத்தில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர நான்கு டியூக் மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் 125 டியூக் மாடலில் 124.7சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.3 ஹெச்பி பவர், 12 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே போன்றே மற்ற மாடல்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


    விலை விவரங்கள்:

    கேடிஎம் 125 டியூக் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 041

    கேடிஎம் 200 டியூக் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்து 693

    கேடிஎம் 250 டியூக் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 222

    கேடிஎம் 390 டியூக் ரூ. 2 லட்சத்து 96 ஆயிரத்து 230

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஹாலிவுட் திரைப்படம் நோ டைம் டு டை காட்சியில் வந்த டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை ஏல முறையில் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    உலகம் முழுக்க பிரபலமான திரைப்பட சீரிஸ் ஜேம்ஸ் பாண்ட் இருக்கிறது. இந்த சீரிசில் வெளியான "நோ டைம் டு டை" திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில், திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிளை ஏலத்தில் விற்பனை செய்ய பட தயாரிப்பு நிறுவனமான இயான் ப்ரோடக்‌ஷன்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தொகை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.

    ஜேம்ஸ் பாண்ட் சீரிசில் 25 ஆவது திரைப்படமான "நோ டைம் டு டை" அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்துள்ளது. இதில் பல்வேறு ஆடம்பர கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி லேண்ட் ரோவர் நிறுவனமும் வாகனங்களை வழங்குவதற்காக திரைப்பட நிறுவனத்துடன் இணைந்திருந்தது. அதன்படி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளின் ஏலம் ஆன்லைனில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


    ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி முழுக்க லண்டனை சேர்ந்த செவன் ஹாஸ்பைஸ் (Severn Hospice) எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. நோ டைம் டு டை திரைப்படத்தில் வரும் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிளை அசாசின் பிரைமோ பயன்படுத்தி இருந்தார். இது திரைப்படத்தின் முதன்மை காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மட்டுமின்றி ஆஸ்டன் மார்டின் DB5, ஆஸ்டன் மார்டின் V8 மற்றும் லேண்ட் ரோவர் டிபெண்டர் போன்ற மாடல்களும் ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏலத்தில் ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் அதிகபட்சம் 30 ஆயிரம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆஸ்டன் மார்டின் DB5 மாடல் அதிகபட்சம் 2 மில்லியன் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 கோடி வரை விற்பனையாகும் என தெரிகிறது. ஆஸ்டன் மார்டின் V8 மாடல் 7 லட்சம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 46 லட்சம் வரை விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் 5 லட்சம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 கோடியே 60 லட்சம் வரை விற்பனையாகலாம்.

    • யமஹா நிறுவனத்தின் 2023 FZ-15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது யமஹா மோட்டார்சைக்கிள் பெட்ரோல் மற்றும் எத்தனால் மூலம் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    யமஹா நிறுவனம் 2023 FZ-15 மோட்டார்சைக்கிளை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் தென்னமெரிக்காவில் பேசர் FZ-15 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய FZ-15 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த மோட்டார்சைக்கிளின் மிகப் பெரும் மாற்றமாக அதன் ஸ்டைலிங் உள்ளது. இதன் முன்புறம் மேம்பட்ட ஹெட்லேம்ப் செட்டப் உள்ளது. இது தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் FZ-25 போன்றே காட்சியளிக்கிறது. இது தவிர மோட்டார்சைக்கிளின் மற்ற ஸ்டைலிங் முழுக்க FZ-V 3 போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 FZ-15 மாடலில் பிரானி பியூவல் டேன்க், ஃபாக்ஸ் ஏர் வெண்ட்கள், சிறிய டெயில் லேம்ப், ஸ்டபி எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் பைரெலி டையப்லோ ரோசோ 2 டயர்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 11.9 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீளமாக உள்ளது. இந்த மாடலில் 149சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த என்ஜின் பெட்ரோல் மட்டுமின்றி எத்தனால் மூலமும் இயங்கும்.

    செயல்திறனை பொருத்தவரை 12.2 ஹெச்பி பவர், 12.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. FZ-V3 மாடலில் உள்ள என்ஜின் 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் இருபுறங்களிலும் 17 இன்ச் வீல்கள் உள்ளன.

    புதிய யமஹா FZ-15 மாடல் - ரேசிங் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் மேக்மா ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் பஜாஜ் பல்சர் N160, டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் 2022 டுகாட்டி பனிகேல் V4 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 26 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய டுகாட்டி பைக்- V4, V4S மற்றும் V4 SP 2 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    பனிகேல் V4 ரூ. 26 லட்சத்து 49 ஆயிரம்

    பனிகேல் V4 S ரூ. 31 லட்சத்து 99 ஆயிரம்

    பனிகேல் V4 SP2 ரூ. 40 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    புதிய மாடலில் மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ், எர்கோனோமிக்ஸ், சேசிஸ், என்ஜின் மற்றும் எலெக்டிரானிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. 2022 பனிகேல் V4 மாடலில் ட்வின் பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், அண்டர்பெல்லி எக்சாஸ்ட் மற்றும் சிங்கில் சைடு ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடல் முன்பு இருந்ததை விட மெல்லியதாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முன்பை விட மெல்லியதாக மாறி இருக்கிறது. இந்த பைக் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது டவுன்போர்ஸ் 39 கிலோவாக இருக்கும் என டுகாட்டி தெரிவித்துள்ளது.


    புதிய டுகாட்டி பனிகேல் V4 மாடலில் 1,103 சிசி, வி4 சிலிண்டர், லிக்விட் கூல்டு, டெஸ்மோசிடிசி ஸ்டிராடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 212.5 ஹெச்பி பவர், 123.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள்- ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு வித பவர் மோட்களை கொண்டுள்ளது.

    இத்துடன் போஷ் கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், பவர் லான்ச், பை டேரக்‌ஷனல் குயிக் ஷிப்டர் மற்றும் ஆட்டோ டயர் கேலிபரேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் கவசாகி ZX-10R மற்றும் பிஎம்டபிள்யூ S1000RR போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்டிரீட்பைட்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட்பைட்டர் V4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்டிரீட்பைட்டர் V2 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 17 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டுகாட்டி ரெட் என ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட்பைட்டர் V4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் V வடிவ எல்இடி டிஆர்எல், மஸ்குலர் பியூவல் டேன்க், சில்வர் நிற ரேடியேட்டர் ஷிரவுட்கள், ஸ்போர்டி என்ஜின் கௌல், ஸ்டெப்-அப் சேடில், சிங்கில்-சைடு ஸ்விங் ஆர்ம் மற்றும் அண்டர்பெல்லி எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.


    இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், 4.3 இன்ச் TFT டேஷ்போர்டு உள்ளது. இத்துடன் 6-ஆக்சிஸ் IMU இனெர்ஷியல் பிளாட்பார்ம், மூன்று ரைடிங் மோட்கள், பவர் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், வீலி கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக் ஷிப்டர் மற்றும் என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V2 மாடலில் 955சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105.9 ஹெச்பி பவர், 101.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடலின் விலை ஸ்டாண்டர்டு எடிஷனை விட ரூ. 1500 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் ஷைன் செலபிரேஷன் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஷைன் செலபிரேஷன் எடிஷன் விலை ரூ. 78 ஆயிரத்து 878, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    செலபிரேஷன் எடிஷன் டிரம் பிரேக் மாடல் விலை அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 1500 அதிகம் ஆகும். புதிய ஹோண்டா ஷைன் செலபிரேஷன் எடிஷனின் ஹெட்லைட் கௌல், பியூவல் டேன்க், பக்கவாட்டு பேனல்களில் கோல்டு நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. ஹோண்டா பேட்ஜ்-ம் கோல்டு நிறம் கொண்டிருக்கிறது.


    இந்த பைக்கின் பின்புறம் ஷைன் ஸ்டிக்கர் இடம்பெற்று இருக்கிறது. செலபிரேஷன் எடிஷனில் பிரவுன் சீட் கவர் உள்ளது. இந்த மாடல் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் மேட் சங்கிரா ரெட் மெட்டாலிக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த மாடலிலும் 124சிசி சிங்கில் சிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.59 ஹெச்பி பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் டைமண்ட் டைப் பிரேம் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய 125சிசி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடல் மூன்று விதமான டூயல் டோன் நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் 125சிசி பிரிவில் புது மோட்டார்சைக்கிளை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் CT125X மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 354, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கிரீன் மற்றும் பிளாக், ரெட் மற்றும் பிளாக், புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    தோற்றத்தில் பஜாஜ் CT125X பார்க்க CT110X போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் பல்பு இலுமினேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது சிறிய கௌல் மற்றும் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளது. இந்த பைக்கில் ஹெட்லைட் கார்டு, என்ஜின் கிராஷ் கார்டு மற்றும் லக்கேஜ் ராக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    புதிய பஜாஜ் CT125X மாடலில் 125சிசி ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10 ஹெச்பி பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் போர்க்குகள், டூயல் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு 240 மில்லிமீட்டர் டிஸ்க் அல்லது ஆப்ஷனல் 130 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் உள்ளது. 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கும் பஜாஜ் CT125X மாடலில் முன்புறம் 80/100 பின்புறம் 100/90 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

    • கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 650 மற்றும் வல்கன் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
    • இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்திய சந்தையின் மிடில்-வெயிட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கவாசகி இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மாற்றியமைத்து வருகிறது. இந்த வரிசையில், அந்நிறுவனத்தின் மிடில்-வெயிட் மாடல்களான நின்ஜா 650 மற்றும் வல்கன் எஸ் விலை தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஃபுலி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் விலை தற்போது ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. குரூயிசர் மாடல் விலை தற்போது ரூ. 6 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    புதிய விலை விவரங்கள்:

    கவாசகி நின்ஜா 650 ரூ. 6 லட்சத்து 95 ஆயிரம்

    கவாசகி வல்கன் எஸ் ரூ. 6 லட்சத்து 40 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    விலை தவிர இரு மாடல்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் கவாசகி நின்ஜா 650 மற்றும் வல்கன் எஸ் மாடல்களில் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. நின்ஜா 650 மாடலில் இந்த என்ஜின் 67.3 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    கவாசகி வல்கன் எஸ் மாடலில் இந்த என்ஜின் 60 ஹெச்பி பவர், 62.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. நின்ஜா 650 மாடல் லைம் கிரீன், பியல் ரோபோடிக் வைட் நிறங்களிலும் வல்கன் எஸ் மாடல் மெட்டாலிக் மேட் கிராபீன்ஸ்டீல் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள் சீரிசாக பல்சர் விளங்குகிறது.
    • பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் பல்சர் சீரிஸ் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 180 மாடல் விற்பனையை நிறுத்தி விட்டது. இந்த மாடல் பஜாஜ் ஆட்டோ வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டது. திடீரென இந்த மாடல் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    பல்சர் சீரிசில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் பல்சர் 180. பிஎஸ் 6 புகை விதிகள் அமலுக்கு வந்த போது, 2019 ஆண்டு வாக்கில் முதல் முறையாக இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது. இத்துடன் பல்சர் 180F விற்பனையும் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் பல்சர் 180 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.


    பஜாஜ் பல்சர் 180 மாடலில் 178.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17 ஹெச்பி பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. உபகரணங்களை பொருத்தவரை பஜாஜ் பல்சர் 180 மாடலில் ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு 280 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இதை அடுத்து ஹிமாலயன் 450 இந்திய சாலைகளில் தொடர் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த மோட்டார்சைக்கிளின் சோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய மோட்டார்சைக்கிள் டீசரை ராயல் என்பீல்டு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது.

    டீசர் வீடியோவின் படி ஹிமாலயன் 450 மாடலின் எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர், பிராமண்ட கிராஷ் கார்டு மற்றும் இரண்டாவது பீக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இந்த மாடலில் 450சிசி மோட்டார் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.


    Photo Courtesy: Rushlane

    இந்த என்ஜின் 40 ஹெச்பி பவர், 45 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹிமாலயன் 450 மாடலில் யுஎஸ்டி முன்புற போர்க், ஆப்செட் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட இருக்கிறது.

    இதன் முன்புறம் மற்றும் பின்புற வீல்களில் டிஸ்க் பிரேக் செட்டப், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. இந்த மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல், பின்புறம் 17 இன்ச் ஸ்போக்டு வீல் செட்டப் வழங்கப்படுகிறது. இந்த மாடல் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மாடல் ப்ரோடக்‌ஷன் நிலையை வந்தடையும் என எதிர்பார்க்கலாம்.

    • யமஹா நிறுவனத்தின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியாகி உள்ளது.
    • இரு மோட்டார்சைக்கிள்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கால் ஆப் தி புளூ விளம்பர பிரச்சாரத்தின் அங்கமாக தனது விற்பனை மையங்களை பிரீமியமாக, யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களாக மாற்றி வருகிறது. யமஹா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகி இருக்கும் டீசர் வீடியோவில் R7 மற்றும் MT-09 மாடல்களின் வெளியீடு உறுதியாகி விட்டது.

    R7 மற்றும் MT-09 போன்ற பெரிய பைக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி யமஹா இந்தியா தலைவர் ஈஷின் சிஹானா இந்த ஆண்டு துவக்கத்தில் தகவல் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தான் தற்போது இரு மாடல்களின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் 2023-க்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கலாம். R7 என்பது சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். இது R7 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 689சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 73 ஹெச்பி பவர், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய யமஹா R7 மாடல் ஹோண்டா CBR650R மற்றும் கவாசகி நின்ஜா 650 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். யமஹா MT-09 ஸ்டிரீட் நேக்கட் மாடல் ஆகும். இந்த மாடலில் 890சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் RS, கவாசகி Z900 மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் புது பைக் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்த மாதத்திலேயே துவங்குகிறது.

    பிம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் 2022 R 1250 RT டூரிங் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 23 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த மாடலின் வினியோகம் இந்த மாதத்திலேயே செய்யப்படுகிறது.

    புதிய R 1250 RT மோட்டார்சைக்கிள் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. அதன்படி இந்த மாடல் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், டூரிங்கிற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி லக்கேஜ் ராக், பேனியர் கேஸ்கள், ஹீடெட் க்ரிப், சீட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இத்துடன் கிளட்ச், பிரேக் மற்றும் கியர் லீவர் உள்ளிட்டவைகளை ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளது. எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், ஸ்டீரிங் ஸ்டேபிலைசர், குரூயிஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிஎம்டபிள்யூ R 1250 RT மாடலில் 1254சிசி, பாக்சர் ட்வின், லிக்விட் கூல்டு DOHC என்ஜின், பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 132.2 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் அலுமினியம் கேஸ்ட் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    ×