search icon
என் மலர்tooltip icon

    பைக்

    பெட்ரோல் மற்றும் எத்தனால் மூலம் இயங்கும் யமஹா பைக் அறிமுகம்
    X

    பெட்ரோல் மற்றும் எத்தனால் மூலம் இயங்கும் யமஹா பைக் அறிமுகம்

    • யமஹா நிறுவனத்தின் 2023 FZ-15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது யமஹா மோட்டார்சைக்கிள் பெட்ரோல் மற்றும் எத்தனால் மூலம் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    யமஹா நிறுவனம் 2023 FZ-15 மோட்டார்சைக்கிளை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் தென்னமெரிக்காவில் பேசர் FZ-15 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய FZ-15 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த மோட்டார்சைக்கிளின் மிகப் பெரும் மாற்றமாக அதன் ஸ்டைலிங் உள்ளது. இதன் முன்புறம் மேம்பட்ட ஹெட்லேம்ப் செட்டப் உள்ளது. இது தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் FZ-25 போன்றே காட்சியளிக்கிறது. இது தவிர மோட்டார்சைக்கிளின் மற்ற ஸ்டைலிங் முழுக்க FZ-V 3 போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 FZ-15 மாடலில் பிரானி பியூவல் டேன்க், ஃபாக்ஸ் ஏர் வெண்ட்கள், சிறிய டெயில் லேம்ப், ஸ்டபி எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் பைரெலி டையப்லோ ரோசோ 2 டயர்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 11.9 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீளமாக உள்ளது. இந்த மாடலில் 149சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த என்ஜின் பெட்ரோல் மட்டுமின்றி எத்தனால் மூலமும் இயங்கும்.

    செயல்திறனை பொருத்தவரை 12.2 ஹெச்பி பவர், 12.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. FZ-V3 மாடலில் உள்ள என்ஜின் 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் இருபுறங்களிலும் 17 இன்ச் வீல்கள் உள்ளன.

    புதிய யமஹா FZ-15 மாடல் - ரேசிங் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் மேக்மா ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் பஜாஜ் பல்சர் N160, டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×