search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yamaha R7"

    • யமஹா நிறுவனத்தின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியாகி உள்ளது.
    • இரு மோட்டார்சைக்கிள்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கால் ஆப் தி புளூ விளம்பர பிரச்சாரத்தின் அங்கமாக தனது விற்பனை மையங்களை பிரீமியமாக, யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களாக மாற்றி வருகிறது. யமஹா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகி இருக்கும் டீசர் வீடியோவில் R7 மற்றும் MT-09 மாடல்களின் வெளியீடு உறுதியாகி விட்டது.

    R7 மற்றும் MT-09 போன்ற பெரிய பைக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி யமஹா இந்தியா தலைவர் ஈஷின் சிஹானா இந்த ஆண்டு துவக்கத்தில் தகவல் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தான் தற்போது இரு மாடல்களின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் 2023-க்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கலாம். R7 என்பது சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். இது R7 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 689சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 73 ஹெச்பி பவர், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய யமஹா R7 மாடல் ஹோண்டா CBR650R மற்றும் கவாசகி நின்ஜா 650 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். யமஹா MT-09 ஸ்டிரீட் நேக்கட் மாடல் ஆகும். இந்த மாடலில் 890சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் RS, கவாசகி Z900 மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×