search icon
என் மலர்tooltip icon

    பைக்

    அதிக மைலேஜ், குறைந்த விலை - புதிய பஜாஜ் CT125X இந்தியாவில் அறிமுகம்
    X

    அதிக மைலேஜ், குறைந்த விலை - புதிய பஜாஜ் CT125X இந்தியாவில் அறிமுகம்

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய 125சிசி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடல் மூன்று விதமான டூயல் டோன் நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் 125சிசி பிரிவில் புது மோட்டார்சைக்கிளை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் CT125X மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 354, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கிரீன் மற்றும் பிளாக், ரெட் மற்றும் பிளாக், புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    தோற்றத்தில் பஜாஜ் CT125X பார்க்க CT110X போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் பல்பு இலுமினேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது சிறிய கௌல் மற்றும் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளது. இந்த பைக்கில் ஹெட்லைட் கார்டு, என்ஜின் கிராஷ் கார்டு மற்றும் லக்கேஜ் ராக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    புதிய பஜாஜ் CT125X மாடலில் 125சிசி ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10 ஹெச்பி பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் போர்க்குகள், டூயல் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு 240 மில்லிமீட்டர் டிஸ்க் அல்லது ஆப்ஷனல் 130 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் உள்ளது. 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கும் பஜாஜ் CT125X மாடலில் முன்புறம் 80/100 பின்புறம் 100/90 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×