என் மலர்
பைக்
- கவாசகி நிறுவனத்தின் 2023 Z900 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இது மேம்பட்ட மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும்.
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி இந்தியாவில் 2023 Z900 மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள் ஆகும். புதிய 2023 கவாசகி Z900 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 8 லட்சத்து 93 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2023 கவாசகி Z900 மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள்- மெட்டாலிக் பேண்டம் சில்வர் / மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் எபோனி / மெட்டாலிக் மேட் கிராபீன் ஸ்டீல் கிரே என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 2023 கவாசகி Z900 மாடல் சிறு கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது.

புதிய நிறம் தவிர ஒட்டுமொத்தத்தில் 2023 கவாசகி Z900 மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், 2023 கவாசகி Z900 மிடில் வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிள் விலை தற்போதைய மாடலை விட ரூ. 51 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இந்த மாடலிலும் ஸ்டீல் டிரெலிஸ் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் 17 இன்ச் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை 2023 கவாசகி Z900 மிடில்வெயிட் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிளில் 4.3 இன்ச் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டூயல் சேனல் ஏபிஎஸ், கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், பல்வேறு ரைடு மோட்கள், எல்இடி லைட்டிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 41 மில்லிமீட்டர் இன்வெர்டெட் போர்க், பின்புறம் மோனோ-ஷாக் வழங்கப்பட்டு உள்ளது.
பிரேக்கிங்கிற்கு 2023 கவாசகி Z900 மோட்டார்சைக்கிளில் டூயல் செமி-ஃபுளோட்டிங் 300 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் பிரேக், பின்புறம் 250 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. 948சிசி, 4 சிலிண்டர், இன் லைன் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123.64 ஹெச்பி பவர், 98.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய தகவல்களை அறிவித்து இருக்கிறது.
- அதன்படி எலெக்ட்ரிக் ஆக்டிவா உள்பட பத்து புது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன திட்டமிடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டிற்குள் பத்து புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது. ஹோண்டாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன வெளியீடு பற்றிய தகவல்கள் லீக் ஆகி இருக்கின்றன.

அதன்படி சீனா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஐந்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நான்கு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் நியோ-ரெட்ரோ பைக், குரூயிசர் மற்றும் பெரிய மேக்சி ஸ்கூட்டர் வடிவில் உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது.
2024-25 வாக்கில் இரண்டு தனிப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு மாடல் தோற்றத்தில் ஆக்டிவா மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் போன்று காட்சியளிக்கிறது. இதில் உள்ள மற்றொரு ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போதைய தகவல்களின் படி ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் ஆக்டிவா மாடலை அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம்.
- கவாசகி இந்தியா நிறுவனம் தனது புதிய நின்ஜா 400 பிஎஸ் 6 மாடலை இந்திய சந்தையில் இரண்டு நிறங்களில் விற்பனை செய்து வருகிறது.
- நின்ஜா 400 மாடல் கேடிஎம் RC390 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் 2022 நின்ஜா 400 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த மாடலின் வினியோகம் துவங்கி இருக்கிறது. பிரீமியம், சப்-500சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய கவாசகி நின்ஜா 400 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இது நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் விலையை விட ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இந்த விலைக்கு பெரிய என்ஜின் மற்றும் அதிக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய நின்ஜா 400 பிஎஸ்6 மாடலில் 399சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 44 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பவர் மாறாத நிலையில், டார்க் மட்டும் முந்தைய மாடலில் இருந்ததை விட 1 நியூட்டன் மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது.
2022 கவாசகி நின்ஜா 400 பிஎஸ்6 மாடல்- லைம் கிரீன் மற்றும் எபோனி மற்றும் மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. பிரேக்கிங்கிற்கு 310 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 220 மில்லமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நின்ஜா 400 பிஎஸ்6 மாடல் கேடிஎம் RC390 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
- டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டர் சீரிசில் புது மாற்றம் செய்து இருக்கிறது.
- அதன்படி புது ஸ்கூட்டர் விலை முந்தைய நிற ஆப்ஷன்களை விட அதிக விலை கொண்டிருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டரை தற்போது புளூ நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் செக்யுர்டு பிளாட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. என்டார்க் 125 ஸ்கூட்டரின் புதிய நிறத்தின் விலை ரூ. 87 ஆயிரத்து 011, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
என்டார்க் 125 ஸ்கூட்டரின் புளூ நிற வேரியண்டில் புது நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் டிவிஎஸ் என்டார்க் மாடலில் 124.8சிசி, மூன்று வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 ஹெச்பி பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க் பிரேக், டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. இதே ஸ்கூட்டர் டூயல் டிரம் பிரேக் வேரியண்டிலும் கிடைக்கிறது.
டிவிஎஸ் என்டார்க் புதிய புளூ நிற வேரியண்ட்டுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் வரும் நாட்களில் துவங்கும் என தெரிகிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதிய ஹீரோ ஸ்கூட்டர் 110 சிசி பிரிவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சி மற்றும் புது ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ஹீரோ ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
புதிய மேஸ்ட்ரோ சூம் 110 இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

அம்சங்களை பொருத்த வரை இந்த மாடலில் எல்இடி இலுமினேஷன் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டெலிஸ்கோபிக் போர்க், சிங்ரிவ் ரியர் ஷாக், முன்புறம் டிஸ்க் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் புது மாடல் 12 இன்ச் வீல்களுடன் வருகிறது.
ஹீரோ நிறுவனம் புது மேஸ்ட்ரோ சூம் 110 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய மேஸ்ட்ரோ சூம் 110 விலை ரூ. 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டலாம். இந்தியாவில் புதிய ஹீரோ மேஸ்ட்ரோ சூம் 110 மாடல் ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Photo Courtesy: Gaadiwaadi
- ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
- புது மாற்றத்தின் படி ஹார்லி பைக் விலை இந்தியாவில் அமலுக்கு வந்து இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேன் அமெரிக்கா மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 மாடல்களின் விலை தற்போது ரூ. 4 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
விலை மாற்றத்தின் படி ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 16 லட்சத்து 90 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 12 லட்சத்து 91 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பேன் அமரிக்கா 1250 ஸ்பெஷல் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 11 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 17 லட்சத்து 11 ஆயிரம் என குறைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது விலை குறைக்கப்பட்டு இருக்கும் மாடல்கள் 2021 ஆண்டை சேர்ந்தது என்பதோடு இந்த மாடல்கள் குறைந்த யூனிட்களே விற்பனைக்கு கிடைக்கின்றன. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலான பேன் அமெரிக்கா 1250 மாடலில் 1252 சிசி, வி ட்வின் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 150.19 ஹெச்பி பவர், 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 மாடலில் அட்பாடிவ் லைட்கள், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், அடாப்டிவ் ரைடு ஹைட், ஸ்போக்டு வீல்கள், செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்திய சந்தையில் இந்த பிரிவில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ 850GS, டிரையம்ப் டைகர் 900 GT உள்ளிட்ட மாடல்களை விட ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 விலை குறைக்கப்பட்டு இருப்பது பயனர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும்.
- கவாசகி இந்தியா நிறுவனம் புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.
- இந்த மாடல் W சீரிஸ் பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W சீரிஸ் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இது பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களில் கவாசகி நிறுவனம் W175 ரெட்ரோ ஸ்டைல் ரோட்ஸ்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக கவாசகி இந்தியா நிறுவனம் W175 மாடலை இந்திய சந்தையில் சோதனை செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் 2020 வாக்கில் இருந்தே கவாசகி W175 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய W175 இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்தோனேசிய சந்தையில் கவாசகி W175 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் W175 மாடல் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும். இதன் காரணமாக செயல்திறன் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம்.
இந்த மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கவசாகியின் W800 ரெட்ரோ ஸ்டைல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் ஹாலோஜன் ஹெட்லைட், டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ZX-10R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய ZX-10R மாடல் இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
கவாசகி இந்தியா நிறுவனம் 2023 நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ZX-10R மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட் மற்றும் லைம் கிரீன், பியல் ரோபோடிக் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இரு நிற வேரியண்ட்களும் ஒரே விலையிலேயே கிடைக்கின்றன.
இரண்டு நிற ஆப்ஷன்களிலும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மாடலிலும் ட்வின் பாட் ஹெட்லைட், மேல்புற கௌல் மீது விங்லெட்கள் பொருத்தப்பட்டுள்ளன. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 ஹெச்பி பவர், 114.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் நான்கு விதமான ரைடு மோட்கள், எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய 2023 கவாசகி நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிள் பிஎம்டபில்யூ S1000RR, டுகாட்டி பனிகேல் V4, ஹோண்டா CBR 1000RR-R ஃபயர்பிளேடு போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இந்த ஸ்கூட்டரின் சோதனை நடைபெற்று வருவதை உணர்த்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் ஏத்தர் 450x மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டர்களை போன்றே காட்சியளிக்கிறது.

விலை குறைவாக வைக்க 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும். இது தவிர ஏத்தர் நிறுவன வழக்கப்படி இந்த ஸ்கூட்டரில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஒடிஏ அப்டேட்கள், நேவிகேஷன் மற்றும் ஏராளமானவை அடங்கும்.
புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஒலா S1 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தலாம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் திரும்பப் பெறப்பட இருப்பதை ஒட்டி வரும் நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. இந்த சூழலில் புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் ஏத்தர் நிறுவன விற்பனை சரிவதை தடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
Photo Source: ZigWheels
- சுசுகி நிறுவனத்தின் 2023 வி ஸ்டாம் 1050DE மேட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த மோட்டார்சைக்கிள் ஆஃப் ரோடிங் அம்சங்கள், 5 இன்ச் ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் கொண்டிருக்கிறது.
சுசுகி நிறுவனம் 2023 சுசுகி வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XT மாடல் நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய வி ஸ்டாம் 1050DE மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய DE வேரியண்ட் வி ஸ்டாம் 1050 ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது.
இரு வேரியண்ட்களிலும் புதிய 5 இன்ச், ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அப்-டவுன் குயிக்-ஷிப்டர், செண்டர் ஸ்டான்டு, ஹேண்ட் கார்டு, யுஎஸ்பி, 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1037 சிசி, லிக்விட் கூல்டு, 90 டிகிரி வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105.5 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது, புதிய DE வேரியண்ட் ஆஃப் ரோடிங் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய வி ஸ்டாம் 1050DE மாடலில் அதிக சஸ்பென்ஷன் டிராவல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இரு மாடல்களிலும் 6 ஆக்சிஸ் IMU, லீன் சென்சிடிவ் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.
மேலும் மேம்பட்ட ரைடு பை வயர் திராட்டில், குரூயிஸ் கண்ட்ரோல், 3 ஸ்டேஜ் டிராக்ஷன் கண்ட்ரோல், மூன்று பவர் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் DE வேரியண்டில் புதிதாக G மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆஃப் ரோடிங்கின் போது பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
- ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த எலெக்ட்ரிக் பைக் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹாப் ஆக்சோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஸ்டாண்டர்டு மற்றும் X என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இரண்டு வேரியண்ட்களிலும் IP67 தர சான்று, 3.75 கிலோவாட் பேட்டரி, மல்டி மோட் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், 4ஜி கனெக்டிவிட்டி, பிரத்யேக மொபைல் செயலி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் செயலியில் ஸ்பீடு கண்ட்ரோல், ஜியோ பென்சிங், ஆண்டி தெப்ட் சிஸ்டம் மற்றும் ரைடு விவரங்களை பார்க்க முடியும். இதன் பேஸ் வேரியண்ட்- இகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.
ஹாப் ஆக்சோ X வேரியண்டில் கூடுதலாக டர்போ மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் நான்கே நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும்.
அறிமுக நிகழ்வுக்கு முன்பாகவே இந்த மோட்டார்சைக்கிளை வாங்க சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி கேத்தன் மேத்தா தெரிவித்துள்ளார். புதிய ஹாப் ஆக்சோ விற்பனை அந்நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் மற்றும் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய S1 ஸ்கூட்டர் முன்பதிவு முதல் நாளிலேயே அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
- இந்த ஸ்கூட்டரின் வினியோக பணிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், தனது ஓலா S1 மாடல் விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ஓலா S1 மாடலுக்கான விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கியது.
இந்த நிலையில், முன்பதிவு விவரங்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஓலா S1 ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர்களின் வினியோகம் செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முன்பதிவு ஓலா எலெக்ட்ரிக் வலைதளம் அல்லது ஓலா செயலி மூலமாகவே மேற்கொள்ள முடியும்.

தோற்றத்தில் ஓலா S1 மற்றும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடையே எந்த மாற்றமும் தெரியாது. இரு ஸ்கூட்டர்களின் மெக்கானிக்கல் அம்சங்கள் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ஓலா S1 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரியும், ஓலா S1 ப்ரோ மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது. ஓலா S1 ப்ரோ மாடலில் உள்ளதை விட S1 மாடலில் சிறிய பேட்டரியே வழங்கப்பட்டு உள்ளது.
ஓலா S1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 141 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. ஓலா S1 ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும். எடையும் ஓலா S1 மாடல் குறைவாகவே உள்ளது. ஓலா S1 மாடலை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரம் ஆகும். ஓலா S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களில் ஒரே மாதிரியான எலெக்ட்ரிக் மோட்டார் தான் வழங்கப்பட்டு இருக்கிறது.






