search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ரூ. 15 லட்சம் விலையில் புதிய கவாசகி பைக் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 15 லட்சம் விலையில் புதிய கவாசகி பைக் இந்தியாவில் அறிமுகம்

    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ZX-10R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய ZX-10R மாடல் இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

    கவாசகி இந்தியா நிறுவனம் 2023 நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ZX-10R மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட் மற்றும் லைம் கிரீன், பியல் ரோபோடிக் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இரு நிற வேரியண்ட்களும் ஒரே விலையிலேயே கிடைக்கின்றன.

    இரண்டு நிற ஆப்ஷன்களிலும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மாடலிலும் ட்வின் பாட் ஹெட்லைட், மேல்புற கௌல் மீது விங்லெட்கள் பொருத்தப்பட்டுள்ளன. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 998சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 ஹெச்பி பவர், 114.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் நான்கு விதமான ரைடு மோட்கள், எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய 2023 கவாசகி நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிள் பிஎம்டபில்யூ S1000RR, டுகாட்டி பனிகேல் V4, ஹோண்டா CBR 1000RR-R ஃபயர்பிளேடு போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×