search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா வரும் புது கவாசகி மோட்டார்சைக்கிள்
    X

    விரைவில் இந்தியா வரும் புது கவாசகி மோட்டார்சைக்கிள்

    • கவாசகி இந்தியா நிறுவனம் புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • இந்த மாடல் W சீரிஸ் பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W சீரிஸ் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இது பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களில் கவாசகி நிறுவனம் W175 ரெட்ரோ ஸ்டைல் ரோட்ஸ்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக கவாசகி இந்தியா நிறுவனம் W175 மாடலை இந்திய சந்தையில் சோதனை செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் 2020 வாக்கில் இருந்தே கவாசகி W175 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய W175 இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.


    இந்தோனேசிய சந்தையில் கவாசகி W175 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் W175 மாடல் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும். இதன் காரணமாக செயல்திறன் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம்.

    இந்த மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கவசாகியின் W800 ரெட்ரோ ஸ்டைல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் ஹாலோஜன் ஹெட்லைட், டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×