search icon
என் மலர்tooltip icon

    பைக்

    4ஜி கனெக்டிவிட்டி, 150 கிமீ ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்
    X

    4ஜி கனெக்டிவிட்டி, 150 கிமீ ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்

    • ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் பைக் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹாப் ஆக்சோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஸ்டாண்டர்டு மற்றும் X என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரண்டு வேரியண்ட்களிலும் IP67 தர சான்று, 3.75 கிலோவாட் பேட்டரி, மல்டி மோட் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், 4ஜி கனெக்டிவிட்டி, பிரத்யேக மொபைல் செயலி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் செயலியில் ஸ்பீடு கண்ட்ரோல், ஜியோ பென்சிங், ஆண்டி தெப்ட் சிஸ்டம் மற்றும் ரைடு விவரங்களை பார்க்க முடியும். இதன் பேஸ் வேரியண்ட்- இகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.

    ஹாப் ஆக்சோ X வேரியண்டில் கூடுதலாக டர்போ மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் நான்கே நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும்.

    அறிமுக நிகழ்வுக்கு முன்பாகவே இந்த மோட்டார்சைக்கிளை வாங்க சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி கேத்தன் மேத்தா தெரிவித்துள்ளார். புதிய ஹாப் ஆக்சோ விற்பனை அந்நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் மற்றும் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    Next Story
    ×