என் மலர்

  பைக்

  முதல் நாளில் 10 ஆயிரம் முன்பதிவுகள் - விற்பனையில் அசத்திய ஓலா S1
  X

  முதல் நாளில் 10 ஆயிரம் முன்பதிவுகள் - விற்பனையில் அசத்திய ஓலா S1

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய S1 ஸ்கூட்டர் முன்பதிவு முதல் நாளிலேயே அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
  • இந்த ஸ்கூட்டரின் வினியோக பணிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், தனது ஓலா S1 மாடல் விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ஓலா S1 மாடலுக்கான விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கியது.

  இந்த நிலையில், முன்பதிவு விவரங்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஓலா S1 ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர்களின் வினியோகம் செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முன்பதிவு ஓலா எலெக்ட்ரிக் வலைதளம் அல்லது ஓலா செயலி மூலமாகவே மேற்கொள்ள முடியும்.


  தோற்றத்தில் ஓலா S1 மற்றும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடையே எந்த மாற்றமும் தெரியாது. இரு ஸ்கூட்டர்களின் மெக்கானிக்கல் அம்சங்கள் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ஓலா S1 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரியும், ஓலா S1 ப்ரோ மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது. ஓலா S1 ப்ரோ மாடலில் உள்ளதை விட S1 மாடலில் சிறிய பேட்டரியே வழங்கப்பட்டு உள்ளது.

  ஓலா S1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 141 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. ஓலா S1 ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும். எடையும் ஓலா S1 மாடல் குறைவாகவே உள்ளது. ஓலா S1 மாடலை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரம் ஆகும். ஓலா S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களில் ஒரே மாதிரியான எலெக்ட்ரிக் மோட்டார் தான் வழங்கப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×