என் மலர்
பைக்

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 டீசர் வெளியானது
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இதை அடுத்து ஹிமாலயன் 450 இந்திய சாலைகளில் தொடர் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த மோட்டார்சைக்கிளின் சோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய மோட்டார்சைக்கிள் டீசரை ராயல் என்பீல்டு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது.
டீசர் வீடியோவின் படி ஹிமாலயன் 450 மாடலின் எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர், பிராமண்ட கிராஷ் கார்டு மற்றும் இரண்டாவது பீக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இந்த மாடலில் 450சிசி மோட்டார் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
Photo Courtesy: Rushlane
இந்த என்ஜின் 40 ஹெச்பி பவர், 45 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹிமாலயன் 450 மாடலில் யுஎஸ்டி முன்புற போர்க், ஆப்செட் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட இருக்கிறது.
இதன் முன்புறம் மற்றும் பின்புற வீல்களில் டிஸ்க் பிரேக் செட்டப், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. இந்த மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல், பின்புறம் 17 இன்ச் ஸ்போக்டு வீல் செட்டப் வழங்கப்படுகிறது. இந்த மாடல் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மாடல் ப்ரோடக்ஷன் நிலையை வந்தடையும் என எதிர்பார்க்கலாம்.






