என் மலர்
பைக்

ஹோண்டா ஷைன் செலபிரேஷன் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
- ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த மாடலின் விலை ஸ்டாண்டர்டு எடிஷனை விட ரூ. 1500 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டா நிறுவனம் ஷைன் செலபிரேஷன் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஷைன் செலபிரேஷன் எடிஷன் விலை ரூ. 78 ஆயிரத்து 878, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
செலபிரேஷன் எடிஷன் டிரம் பிரேக் மாடல் விலை அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 1500 அதிகம் ஆகும். புதிய ஹோண்டா ஷைன் செலபிரேஷன் எடிஷனின் ஹெட்லைட் கௌல், பியூவல் டேன்க், பக்கவாட்டு பேனல்களில் கோல்டு நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. ஹோண்டா பேட்ஜ்-ம் கோல்டு நிறம் கொண்டிருக்கிறது.
இந்த பைக்கின் பின்புறம் ஷைன் ஸ்டிக்கர் இடம்பெற்று இருக்கிறது. செலபிரேஷன் எடிஷனில் பிரவுன் சீட் கவர் உள்ளது. இந்த மாடல் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் மேட் சங்கிரா ரெட் மெட்டாலிக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
இந்த மாடலிலும் 124சிசி சிங்கில் சிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.59 ஹெச்பி பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் டைமண்ட் டைப் பிரேம் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன.






