என் மலர்

  பைக்

  ரூ. 1.49 லட்சம் தான் - வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமானது ராயல் என்பீல்டு ஹண்டர் 350
  X

  ரூ. 1.49 லட்சம் தான் - வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமானது ராயல் என்பீல்டு ஹண்டர் 350

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 இருந்து வந்தது.
  • இந்திய சந்தையில் புதிய ஹண்டர் 350 மாடல் மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

  ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  விலை விவரங்கள்:

  ராயல் என்பீல்டு ஹண்டர் 350 ரெட்ரோ ஃபேக்டர் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900

  ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மெட்ரோ டேப்பர் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 900

  ராயல் என்பீல்டு ஹண்டர் 350 ரெபல் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 900

  அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் ரோட் சார்ந்த பயன்பாடுகளுக்கான ஒன்றாகவே தெரிகிறது. இதில் ரெட்ரோ டிசைன் உள்ளது. வட்ட வடிவ ஹெட்லைட், பழமை மாறா டிசைன் அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் முன்புறம் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இதன் பெரிய டயலில் ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஸ்பீடோமீட்டர், பியூவல் லெவல் மற்றும் இதர விவரங்கள் காண்பிக்கின்றன.


  ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலில் 41 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் போர்க்குகள், 6 ஸ்டெப் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு 300 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க், பின்புறம் 270 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 13 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது.

  என்ஜின் விவரங்கள்:

  இத்துடன் 349சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் கிளாசிக் 350, மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹண்டர் 350 மாடல் மணிக்கு அதிகபட்சம் 114 கி.மீ. வேகத்தில் செல்லும்.

  புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல்: ரிபல் ரெட், ரிபல் புளூ, ரிபல் பிளாக், டேப்பர் ஆஷ், டேப்பர் வைட் மற்றும் டேப்பர் கிரே என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் ரியர் பேனியர், ஃபிளை ஸ்கிரீன், பில்லியன் சீட் பேக்ரெஸ்ட் மற்றும் சில அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

  Next Story
  ×