என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியணட்டிற்கான டீசர் வெளியிட்டு உள்ளது. டீசர் வீடியோவில் புதிய அல்ட்ரோஸ் மெரினா புளூ எனும் புதிய நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் டிசிடி யூனிட் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். தற்போதைய அல்ட்ரோஸ் மாடல் 1.2 லிட்டர் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய டாடா அல்ட்ரோஸ் மாடல் ஹூண்டாய் ஐ20, போக்ஸ்வேன் போலோ, ஹோண்டா ஜாஸ், மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
இந்தியாவில் பாஸ்டேக் வைத்திருப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் பாஸ்டேக் முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி வாகன உரிமையாளர்கள் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையில் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு விரைவாக செல்ல முடியும்.
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு இருந்தது.
தற்சமயம் சுங்கச்சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் பாஸ்டேக் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. மேலும் பாஸ்டேக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாகனங்களில் பாஸ்டேக் நடைமுறை பிப்ரவரி 15, 2021 முதல் கட்டாயம் என தெரிவித்து இருக்கிறது.
சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்து இருக்கிறார்.
தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்த திட்டம் சில மாதங்கள் தாமதமாக துவங்கி இருப்பதாக அவர் மேலும் தெவிரித்தார். முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் 2022 ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், தற்சமயம் இந்த மாடல் 2023 ஆண்டு அறிமுகமாகும் என அவர் தெரிவித்தார்.

இரு நிறுவனங்கள் இந்த மோட்டார்சைக்கிள் பணிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 99 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இதன் விற்பனை மற்றும் விளம்பர பணிகளை பஜாஜ் மேற்கொள்ள இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு நிறுவன மாடல்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிபி350 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகமானதில் டாப் 5 சிறந்த கார்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2020 ஆண்டு சிறப்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் துவங்கி, பிஎஸ்6 விதிகள் அமலானது, கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் என பல்வேறு ஏற்ற தாழ்வுகள் நிறைந்து இருந்தது.
இவற்றுக்கும் மத்தியில் பல்வேறு கார் மாடல்கள் புதிதாகவும், பழைய மாடல்களின் பேஸ்லிப்ட் வேரியண்ட்கள் என ஏராளமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில், 2020 ஆண்டு அறிமுகமான கார்களின் பத்து சிறந்த மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஐ20 கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மஹிந்திரா தார்
இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் இது மிக குறுகிய காலக்கட்டத்தில் 20 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளது.
கியா சொனெட்
இந்திய சந்தையில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் விலை ரூ. 6.71 லட்சத்தில் துவங்குகிறது. இந்த மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இது ஆறு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

நிசான் மேக்னைட்
ரூ. 4.99 லட்சம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் 15 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது.
எம்ஜி குளோஸ்டர்
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பெரிய எஸ்யுவி மாடலாக எம்ஜி குளோஸ்டர் மாடலாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்து இருக்கிறது.

இவை தவிர இந்த ஆண்டு ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி, டாடா அல்ட்ரோஸ், இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான் இவி, எம்ஜி இசட்எஸ் இவி, மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி, டொயோட்டா அர்பன் குரூயிசர், கியா கார்னிவல், ஸ்கோடா கரோக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், லேண்ட் ரோவர் டிபென்டர் போன்ற மாடல்கள் அறிமுகமாகின.
இத்துடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ எம்8, 8 சீரிஸ் கிரான் கூப், ஆடி ஏ8எல், ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், ஆடி ஆர்எஸ் கியூ8, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் என ஆடம்பர நிறுவனங்களின் கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
மாருதி சுசுகி பலேனோ ஹைப்ரிட் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மாருதி சுசுகி பலேனோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஸ்பை படங்களின் படி புதிய பலேனோ சக்கரங்களில் பரிசோதனை உபகரணம் இணைக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த உபகரணத்துடன் வையர்கள் காரின் உள்புற கேபின் வரை நீள்கிறது. அதன்படி மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை ஹைப்ரிட் என்ஜினுடன் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

புதிய என்ஜின் 48V ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டிருக்கும் என்றும் இது அதிக மைலேஜ் வழங்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த சிஸ்டம் ஸ்டிராங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வெஹிகில் என அழைக்கப்படுகிறது. இது அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார் மாடலை ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் காட்சிப்படுத்தியது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 10kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த ஹைப்ரிட் என்ஜின் 92 பிஹெச்பி பவர், 118 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய நிசான் மேக்னைட் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக இந்த மாடல் விநியோகம் துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 2021 முதல் நிசான் மேக்னைட் பேஸ் மாடல் விலை ரூ. 55 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை எவ்வளவு உயர்த்தப்பட இருக்கிறது என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 850 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதக தகவல் வெளியாகி உள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய டைகர் 850 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீட்டிற்கு முன் டிரையம்ப் டைகர் 850 மோட்டார்சைக்கிள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
புதிய மோட்டார்சைக்கிள் விலை தவிர டிரையம்ப் டைகர் 850 மாடலின் விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இது அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இது என்ட்ரி லெவல் டைகர் 900 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக தோற்றத்தில் இது டைகர் 900 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ், இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய டிரையம்ப் டைகர் 850 மோட்டார்சைக்கிளில் 888சிசி லிக்விட் கூல்டு இன்-லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 82 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் 6 சீட் வேரியண்ட் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடலின் 6 சீட் வேரியண்ட் விற்பனையை நிறுத்திவிட்டது. 6 சீட் வேரியண்ட் மாடல்கள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
மஹிந்திரா தார் 6 சீட் வேரியண்ட் மொத்தம் மூன்று ட்ரிம்களில் கிடைத்து வந்தது. தற்சமயம் இந்த மாடல் பிரத்யேகமாக 4 சீட் வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 11.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
ஃபோர்ஸ் நிறுவனம் தனது புதிய குர்கா மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. புதிய குர்கா மாடலில் பிஎஸ்6 ரக என்ஜின் மட்டுமின்றி பெரிய சக்கரங்களை கொண்டிருக்கிறது. காட்சிக்கு வைக்கப்பட்டது முதல் இந்த கார் மாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய குர்கா மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. அந்த வகையில் புதிய மேம்பட்ட எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஜிம்னி மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் என இரு மாடல்கள் ஃபோர்ஸ் குர்கா மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கென அசத்தல் டீசரை வெளியிட்டு இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் இந்த மாடல் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது.
தற்சமயம் வெளியீட்டுக்கு முன் 2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரின் படி பேஸ்லிப்ட் செய்யப்பட்ட காம்பஸ் எஸ்யுவி மாடல் புதிதாக பச்சை நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

புதிய நிறம் தவிர பேஸ்லிப்ட் செய்யப்பட்ட கார் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட ஏழு ஸ்லாட் கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
உள்புறம் பெரிய 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி மற்றும் ஜீப் நிறுவனத்தின் யுகனெக்ட்5 தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின்கள் முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 172 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆடி நிறுவனம் தனது ஏ4 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஏ4 பேஸ்லிப்ட் கார் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமானதும் புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஹோண்டா நிறுவன மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி எஸ்பி125, ஷைன் மற்றும் கிரேசியா மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இவை தள்ளுபடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு கவர்ச்சிகர நிதி சலுகை உள்ளிட்ட வடிவங்களில் வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட மாடல்களை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மாத தவணை மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் நிதி சலுகையுடன் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதாக ஹோண்டா அறிவித்து இருக்கிறது. கார்டு சார்ந்த மாத தவணை வசதி பைன் லேப்ஸ் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
இதனால் மாத தவணை சலுகையை பெற கூடுதல் ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது.






