என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    இந்தியாவில் காலாவதியான வாகன ஆவணங்களின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்தியா முழுக்க வாகன ஆவணங்கள் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி வாகனங்களின் கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

    நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சிகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. கால அவகாசம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். 

     கோப்புப்படம்

    அதன்படி ஓட்டுனர் உரிமம்,  அனைத்து வாகனங்களுக்கான ஆர்சி, பர்மிட், தகுதிச் சான்று உள்ளிட்டவைகளின் கால அவகாசம் மார்ச் 2021 இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை நான்காவது முறையாக வாகன கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு மார்ச், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இதேபோன்ற அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கு புதிய பெயர் பெற காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் நான்காம் தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. அதன்படி  ‘SCORPION’ மற்றும் ‘SCORPIOn’ என இரு பெயர்களை பதிவு செய்து இருக்கிறது. விண்ணப்பத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் ‘Scorpio Sting’ எனும் பெயருக்கு காப்புரிமை பெற்றது. புதிய ஸ்கார்பியோ மாடலுக்கென மஹிந்திரா புதிய லோகோவை வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது. புதிய ஸ்கார்பியோ மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப், மல்டி-ஸ்லாட் கிரில், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    சமீபத்திய ஸ்பை படங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ லோயர் வேரியண்ட் ஸ்டீல் வீல்களுடன் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 158 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    டெஸ்லா நிறுவனத்தின் புதிய மாடல் 3 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இன்க் இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகிறது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது என்ட்ரி லெவல் மாடல் 3, மாடலை முதற்கட்டமாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

    டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் ஜூன் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     டெஸ்லா மாடல் 3

    மேலும் டெஸ்லா மாடல் 3 முன்பதிவு ஜனவரி 2021 வாக்கில் துவங்கலாம் என தெரிகிறது. முன்னதாக 2016 ஆண்டு வாக்கில் மாடல் 3 முன்பதிவு துவங்கியது. எனினும், எலெக்ட்ரிக் வாகன விதிமுறை மற்றும் இறக்குமதி வரி விவகாரங்கள் காரணமாக வெளியீடு தாமதமானது.

    டெஸ்லா மாடல் 3 விநியோகம் 2021-22 முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் துவங்கி ரூ. 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் இதன் விற்பனை நேரடியாக டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

    சுசுகி நிறுவனத்தின் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    சுசுகி நிறுவனம் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மோட்டார்சைக்கிள் மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் யூரோ 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாகி இருக்கிறது. அப்டேட்களை பொருத்தவரை 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    புதிய நிறம் மட்டுமின்றி இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. நிறம் தவிர இந்த மாடலின் தோற்றத்தில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

     2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750

    2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 ஏபிஎஸ் மாடல் பியல் பிரிலியண்ட் வைட் மற்றும் சாம்பியன் எல்லோ நம்பர் 2 நிறத்திலும் ஏபிஎஸ் இல்லாத மாடல் மெட்டாலிக் ஊர்ட் கிரே நம்பர் 3 மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    சுசுகியின் புதிய 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மோட்டார்சைக்கிள் ஒற்றை ஹெட்லைட், ஃபேங் வடிவ டிஆர்எல்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மஸ்குலார் ஸ்டைலிங், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அப்சைடு டவுன் கேவைபி முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் யூரோ 4 விதிகளுக்கு பொருந்தும் 749சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 113 பிஹெச்பி பவர், 81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    கேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கேடிஎம் ஆர்சி சீரிஸ் 2021 அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் புதிய ஆர்சி 200 விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஹெட்லேம்ப் டிசைன் கொண்டிருக்கிறது. இது தற்போதைய மாடலில் உள்ள டூயல் ப்ரோஜெக்டர் ரக ஹெட்லேம்ப்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     கோப்புப்படம்

    2021 கேடிஎம் ஆர்சி 200 மாடலில் ஹாலோஜன் ரக யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி டிஆர்எல் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் வைசர் அளவில் பெரியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் மேம்பட்ட கிராபிக்ஸ் காணப்படுகிறது.

    புதிய ஆர்சி 200 மாடலில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட என்ஜினே வழங்கப்படலாம். தற்போதைய ஆர்சி 200 மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 199 சிசி யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.6 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் நிறுவனம் தனது புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விநியோகத்தை துவங்கி இருக்கிறது. நிசான் மேக்னைட் மாடல் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் களமிறங்கி இருக்கும் புதிய மாடல் ஆகும். மேலும் இது இந்த பிரிவில் கிடைக்கும் குறைந்த விலை மாடல் ஆகும்.

    முதற்கட்டமாக நிசான் மேக்னைட் விநியோகம் டெல்லியில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் நிசான் மேக்னைட் எக்ஸ்வி வேரியண்ட் ஆகும். புதிய நிசான் மேக்னைட் மாடல் எட்டு வித நிறங்களில் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் விலை விரைவில் மாற்றப்பட இருக்கிறது.


    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது போலோ மற்றும் வென்டோ மாடல்களின் விலையை ஜனவரி 2021 முதல் 2.5 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. கார் மாடல்களுக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என போக்ஸ்வேகன் தெரிவித்து இருக்கிறது.

     போக்ஸ்வேகன் போலோ

    அதன்படி போக்ஸ்வேகன் கார்களின் விலை 2.5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. புத்தாண்டு முதல் மேம்பட்ட விலை பட்டியலை போக்ஸ்வேகன் வெளியிட இருக்கிறது. கார் மாடல்களின் விலை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கும் ஏற்ப வேறுபடும் என தெரிகிறது.

    முன்னதாக எம்ஜி மோட்டார் இந்தியா, இசுசு, நிசான், டேட்சன், ரெனால்ட் என பல்வேறு கார் உற்பத்தியாளர்களும் விலை உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. பிஎம்டபிள்யூ போன்று பிரீமியம் நிறுவனங்களும் விலை உயர்வை அமலாக்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றன. 
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலை ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியீட்டுக்கு முன் புதிய டொயோட்டா புல்-சைஸ் எஸ்யுவி மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. 

    அதன்படி புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் மொத்தம் பத்து வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் இவை பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவைதவிர 2021 பார்ச்சூனர் கார் உயர் ரக வேரியண்ட் லெஜண்டர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     பார்ச்சூனர்

    இந்த வேரியண்ட் முன்புறம் அதிரடி தோற்றம் கொண்டிருக்கும் என்றும் காரை சுற்றி பிளாக் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இது டூயல் டோன் வைட் மற்றும் பிளாக் வெளிப்புற ஸ்கீம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 2 மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய சந்தையில் 13 ஜனவரி, 2021, தேதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு பற்றி டாடா மோட்டார்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், இவ்விழாவில் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட அல்ட்ரோஸ் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    அந்த வகையில் விரைவில் இரண்டு வகை என்ஜின்களை டாடா மோட்டார்ஸ் இந்த மாடலில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினாக இருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

     டாடா அல்ட்ரோஸ்

    இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் டிசிடி யூனிட் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய டர்போ என்ஜின் உயர் ரக மாடல்களில் மட்டுமே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் புதிய ஹூண்டாய் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் போக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய மாடல் மரினா புளூ நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது.

    யமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி125 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    யமஹா நிறுவனம் தனது எம்டி ஸ்டிரீட்பைட்டர் சீரிசில் சிறிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 2021 எம்டி125 என அழைக்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டாம் புளுயோ நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஐகான் புளூ, டெக் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது.

    புதிய நிறங்கள் தவிர 2021 யமஹா எம்டி125 மோட்டார்சைக்கிளில் 11 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

     யமஹா எம்டி125

    சஸ்பென்ஷனிற்கு முன்புறம் இன்வெர்ட் செய்யப்பட்ட போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. புதிய யமஹா எம்டி125 இந்திய சந்தையில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    மஹிந்திரா நிறுவனம் விரைவில் புதிய ஸ்கார்பியோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் இசட்101 எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது லேடர் பிரேம் சேசிஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    சமீபத்திய ஸ்பை படங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ லோயர் வேரியண்ட் ஸ்டீல் வீல்களுடன் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 158 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
    இஐசிஎம்ஏ 2021 சர்வதேச மோட்டார்சைக்கிள் விழாவுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இஐசிஎம்ஏ 2021 விழா தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச மிதிவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் விழா நவம்பர் 2021 இறுதி வாரத்தில் நடைபெற இருக்கிறது.

    இஐசிஎம்ஏ 2021

    சர்வதேச மோட்டார்சைக்கிள் விழா ஹால்ஸ் ஆப் பியரோ மிலானோவில் நடைபெற இருக்கிறது. இந்த விழா 2021, நவம்பர் 23 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் முதல் இரண்டு நாட்கள் செய்தியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் மட்டும் கலந்து கொள்வர்.

    பியரோ மிலானோவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச மோட்டார்சைக்கிள் விழாவுக்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. 

    ×