என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய கார் மாடலுக்கான அசத்தல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிதாக டைகுன் எனும் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் இந்த மாடலுக்கான டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. 

    டீசர் வீடியோவில் புதிய கார் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய டைகுன் மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் முன்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், செங்குத்தான கிரில், பம்ப்பரில் பாக் லேம்ப் மற்றும் ஸ்கிட் பிளேட் ஹவுசிங் செய்யப்பட்டு இருக்கிறது.

     ஃபோக்ஸ்வேகன் டைகுன்

    இந்த கார் சவுகரியமான 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் பின்புற குவாட்டர் கிளாஸ் மீது இருக்கும் கிராபிக்ஸ் காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கிறது. இத்துடன் டெயில் லேம்ப்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

    காரின் உள்புற கேபினில் டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் வெளிப்புற நிறம் இன்சர்ட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், புதிய மல்டிமீடியா சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

    புதிய ஃபோக்ஸ்வேகன் கார் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலை மாற்றத்திற்கு தேதி குறித்து இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா தனது வாகனங்கள் விலையை 2021, ஜனவரி 4 ஆம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவீதம் வரை அதிகரிக்க இருக்கிறது. உற்பத்தி பணிகளில் செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    தற்சமயம் பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னை ஆலையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்1, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மற்றும் மினி கண்ட்ரிமேன் மாடல்களை உற்பத்தி செய்கிறது.

     பிஎம்டபிள்யூ கார்

    இவை தவிர பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ எக்ஸ்6, பிஎம்டபிள்யூ இசட்4, பிஎம்டபிள்யூ எம்2 காம்படீஷன், பிஎம்டபிள்யூ எம்5 காம்படீஷன், பிஎம்டபிள்யூ எம்8கூப், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் உள்ளிட்ட மாடல்களை சிபியு முறையில் கொண்டுவருகிறது.

    இத்துடன் மினி 3 டோர், மினி 5 டோர், மினி கன்வெர்டிபில், மினி கிளப்மேன் மறஅறும் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஹேட்ச் உள்ளிட்டவை இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய Meteor 350 குரூயிசர் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை நவம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிள் 7031 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் நவம்பர் 2020 விற்பனையில் கிளாசிக் 350 மாடலுக்கு அடுத்தப்படி அதிகம் விற்பனையான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பதிய Meteor 350 பெற்று உள்ளது. இது புல்லட் 350 மற்றும் எலெக்ட்ரா 350 மாடல்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     ராயல் என்பீல்டு Meteor 350

    எலெக்ட்ரா, புல்லட், Meteor மற்றும் கிளாசிக் என ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் நான்கு மாடல்களை 350சிசி பிரிவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் அனைத்து மாடல்களிலும் மொத்தமாக 56,494 யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. இதில் கிளாசிக் 350 மாடல் மட்டும் 69 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து புதிய Meteor 350 மாடல் 12 சதவீத விற்பனையை பதிவு செய்து இருக்கிறது. புல்லட் மற்றும் எலெக்ட்ரா மாடல்கள் முறையே 11 சதவீதம் மற்றும் 6 சதவீத பங்குகளை கடந்த மாதம் பெற்று இருந்தன.

    சிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 800 எம்டி மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான சிஎப்மோட்டோ நிறுவனம் தனது 800 எம்டி அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இதன் ஆப்-ரோடு வெர்ஷன் வையர்-ஸ்போக் வீல்கள், டூயல் ஸ்போர்ட் டையர்களை கொண்டிருக்கிறது. சிஎப்மோட்டோ 800 எம்டி மாடல் 790 அட்வென்ச்சர் மாடலை சார்ந்து உருவாகி இருக்கிறது. இதில் 799சிசி, எல்சி8 பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 95பிஹெச்பி பவர் வழங்குகிறது. எனினும், சிஎப்மோட்டோ 800 எம்டி மாடலின் செயல்திறன் வேறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் சிஎப்மோட்டோ 800 எம்டி ஸ்போர்ட்ஸ் மாடலில் டூயல் எல்இடி ஹெட்லைட்கள், டால் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் இந்தியாவில் ஜனவரி 21, 2021 தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. அறிமுகமானதும் இந்தியாவில் கிடைக்கும் நீண்ட மற்றும் அதிக இடவசதி கொண்ட என்ட்ரி லெவல் செடான் மாடலாக இருக்கும்.

    இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு அதிக இடவசதியை வழங்கும் வகையில் நீளமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட வீல்பேஸ் தவிர கிரான் லிமோசின் மாடல் தோற்றத்தில்  ஸ்டான்டர்டு வேரியண்ட்டை போன்றே காட்சியளிக்கிறது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR தளத்தில் உருவாகி இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 255 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான காம்பஸ் எஸ்யுவி-க்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஆண்டு இறுதியை முன்னிட்டு ஜீப் காம்பஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இவை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப மாறுபடும்.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஸ்போர்ட் பிளஸ், லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட்ட பிளஸ், நைட் ஈகிள் மற்றும் ஹார்டுகோர் டிரெயில்ஹாக் என ஆறுவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் டாப் எண்ட் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் அக்சஸரீ உள்ளிட்ட வகைகளில் வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்குவோருக்கு சலுகைகள் வெவ்வேறு வகைகளில் வழங்கப்படுகின்றன.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தானியங்கி கார் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதில் உலகின் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். மின்சாதனங்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தானியங்கி கார்களை 2024 ஆண்டு வாக்கில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் தானியங்கி கார்கள் முற்றிலும் புதுவகை பேட்டரி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    தானியங்கி கார்களை உருவாக்கும் குழு பிராஜக்ட் டைட்டன் எனும் குறியீட்டு பெயரில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு 2024 ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவன தானியங்கி கார்களில் LIDAR மற்றும் புதுவகை பேட்டரிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதில் LIDAR சென்சார் சாலையின் முப்பறிமான காட்சியை உருவாக்கி, பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்யும். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ சீரிசில் இதே தொழில்நுட்பத்தை வழங்கி இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிள் அசத்தல் சலுகையில் கிடைக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிளுக்கு ஆண்டு இறுதி சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி எக்ஸ்டிரீம் 160 ஆர் வாங்குவோருக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான போனஸ் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய மோட்டார்சைக்கிளை எக்சேன்ஜ் செய்யும் போது பெற முடியும்.

    எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி சலுகைகள் ஒன்றாக பயன்படுத்த முடியாது. மேலும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டும் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது. எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிளில் 163சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

     ஹீரோ எக்ஸ்டிரீம் 160 ஆர்

    இது 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை விரைவில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது எடை குறைந்த மோட்டார்சைக்கிள் ஆகும். 

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிள் முன்புற டிஸ்க் மற்றும் டூயல் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.02 லட்சம் மற்றும் ரூ. 1.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஏ4 பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவை துவங்கி உள்ளது. முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி இந்தியா வலைதளம் மற்றும் விற்பனையகங்களுக்கு சென்று மேற்கொள்ள முடியும்.

    இந்தியாவில் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கான சிறப்பு சர்வீஸ் பேக்கேஜ் வழங்குவதாக ஆடி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     ஆடி ஏ4

    புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அறிமுகமானதும் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸஇ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    2021 முதல் ஜாவா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை ஜனவரி 1, 2021 முதல் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாவா, ஜாவா பார்டி டு மற்றும் பெராக் என மூன்று மாடல்கள் விலையும் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

     ஜாவா மோட்டார்சைக்கிள்

    விலை உயர்வு அடுத்த மாதம் முதல் அமலாக இருப்பதாக தெரிகிறது. எனினும், ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. உதிரிபாகங்கள் மற்றும் இதர செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

    தற்சமயம் ஜாவா நிறுவன மாடல்கள் விலை ரூ. 1.65 லட்சத்தில் துவங்குகிறது. ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் இந்திய உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஜிம்னி எஸ்யுவி மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னி மாடல் 50 யூனிட்கள் குருகிராமில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    இந்திய உற்பத்திக்கென மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடல் பாகங்களின் சிகேடி கிட்களை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறது. முதற்கட்ட யூனிட்கள் இறக்குமதி செய்யப்பட்ட சிகேடி கிட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படு உள்ளது.

    மாருதி சுசுகி ஜிம்னி

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மாருதி சுசுகி தவிர மஹிந்திரா நிறுவனம் ஐந்து கதவுகள் கொண்ட தார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    சுசுகி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் சியாஸ் போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் புதிய மைல்கல் கடந்துள்ளது.

    நிசான் இந்தியா நிறுவனம் மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் 15 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்த மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய நிசான் மேக்னைட் மாடல் எட்டு வித நிறங்களில் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

     நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    ×