search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    ஆப்பிள் தானியங்கி கார் வெளியீட்டு விவரம்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தானியங்கி கார் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதில் உலகின் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். மின்சாதனங்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தானியங்கி கார்களை 2024 ஆண்டு வாக்கில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் தானியங்கி கார்கள் முற்றிலும் புதுவகை பேட்டரி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    தானியங்கி கார்களை உருவாக்கும் குழு பிராஜக்ட் டைட்டன் எனும் குறியீட்டு பெயரில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு 2024 ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவன தானியங்கி கார்களில் LIDAR மற்றும் புதுவகை பேட்டரிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதில் LIDAR சென்சார் சாலையின் முப்பறிமான காட்சியை உருவாக்கி, பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்யும். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ சீரிசில் இதே தொழில்நுட்பத்தை வழங்கி இருக்கிறது.

    Next Story
    ×