search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி பலேனோ
    X
    மாருதி சுசுகி பலேனோ

    இணையத்தில் லீக் ஆன பலேனோ ஹைப்ரிட் ஸ்பை படங்கள்

    மாருதி சுசுகி பலேனோ ஹைப்ரிட் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    மாருதி சுசுகி பலேனோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஸ்பை படங்களின் படி புதிய பலேனோ சக்கரங்களில் பரிசோதனை உபகரணம் இணைக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. 

    இந்த உபகரணத்துடன் வையர்கள் காரின் உள்புற கேபின் வரை நீள்கிறது. அதன்படி மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை ஹைப்ரிட் என்ஜினுடன் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

     மாருதி சுசுகி பலேனோ

    புதிய என்ஜின் 48V ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டிருக்கும் என்றும் இது அதிக மைலேஜ் வழங்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த சிஸ்டம் ஸ்டிராங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வெஹிகில் என அழைக்கப்படுகிறது. இது அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார் மாடலை ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் காட்சிப்படுத்தியது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 10kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த ஹைப்ரிட் என்ஜின் 92 பிஹெச்பி பவர், 118 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    Next Story
    ×