search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட்
    X
    ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட்

    2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் அசத்தல் டீசர் வெளியீடு

    ஜீப் இந்தியா நிறுவனம் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கென அசத்தல் டீசரை வெளியிட்டு இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனம் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் இந்த மாடல் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது.

    தற்சமயம் வெளியீட்டுக்கு முன் 2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரின் படி பேஸ்லிப்ட் செய்யப்பட்ட காம்பஸ் எஸ்யுவி மாடல் புதிதாக பச்சை நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

     ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட்

    புதிய நிறம் தவிர பேஸ்லிப்ட் செய்யப்பட்ட கார் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட ஏழு ஸ்லாட் கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    உள்புறம் பெரிய 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி மற்றும் ஜீப் நிறுவனத்தின் யுகனெக்ட்5 தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின்கள் முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 172 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    Next Story
    ×