என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஒலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒலா நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் இதனை உணர்த்தும் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
Time to order some paint! What color would you like on the Ola Scooter? Already got you covered for Black! What else? @OlaElectricpic.twitter.com/NXMftKJrrq
— Bhavish Aggarwal (@bhash) June 24, 2021
அவரது ட்வீட்டில் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படத்தை இணைத்து, தனது பாலோவர்களிடம் எந்த நிறங்களில் வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் கழற்றும் வசதி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கிளவுட் கனெக்டிவிட்டி, அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
ஆடி நிறுவனத்தின் இ-டிரான் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. இரு எஸ்யுவி மாடல்கள் விலை ரூ. 1.20 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆடி இ டிரான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQC மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய ஆடி எஸ்யுவி மாடல் பெரிய கிரில், கூர்மையான ஹெட்லைட்களை கொண்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதிகள் ஆடி கியூ5 போன்றே காட்சியளிக்கிறது.
ஆடி இ டிரான் மாடலில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேண்-கீப் அசிஸ்ட், பானரோமிக் சன்ரூப், பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீரிங் வீல் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் குறைந்த மாத தவணையில் விற்பனை செய்யப்படுகின்றன.
டி.வி.எஸ். நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 5 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இத்துடன் 100 சதவீத நிதி சலுகை, ரூ. 1555 மாத தவணை வசதி வழங்கப்படுகிறது.

இந்த சலுகை டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ், ரேடியான் மற்றும் ஸ்போர்ட் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று மாடல்களிலும் 109.7சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வழங்குகிறது.
இந்த மோட்டார்சைக்கிள்களில் 10 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் தனது வாகனங்களுக்கான இலவச சர்வீஸ் சேவையை ஜூன் 30 வரை நீட்டித்தது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் நாட்டின் இரு நகரங்களில் சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் கார் சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த சந்தா முறை சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இந்த திட்டம் நாடுமுழுக்க அறிமுகம் செய்யப்படவில்லை.

வால்வோ இந்தியாவின் புதிய கார் சந்தா முறை டெல்லி மற்றும் குர்கிராமில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சந்தா முறை குறைந்தபட்சம் 12 மாதங்களில் இருந்து துவங்குகிறது. புது திட்டம் Subscribe to Safety பெயரில் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு வால்வோ கார்களை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் வால்வோ எஸ்90 செடான் மாடல் மட்டும் இடம்பெறவில்லை.
புதிய சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக சிறு தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். மாதாந்திர சந்தா கட்டணம் பராமரிப்பு, இன்சூரன்ஸ், பதிவு மற்றும் சாலை வரி உள்ளிட்டவைகளுக்கும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 சீரிஸ் ஒரு பெட்ரோல், இரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல் துவக்க விலை ரூ. 62,90,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் சென்னையில் இயங்கி வரும் பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய 5 சீரிஸ் மாடல் ஒரு பெட்ரோல், இரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல் விலை முந்தைய வேரியண்டை விட ரூ. 2.8 லட்சம் அதிகம் ஆகும். புது மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது.

என்ஜின் விவரங்கள்
பி.எம்.டபிள்யூ. 530ஐ எம் ஸ்போர்ட் - 2.0 லிட்டர் - 249 ஹெச்பி திறன் - 350 நியூட்டன் மீட்டர் டார்க்
பி.எம்.டபிள்யூ. 520டி லக்சரி லைன் - 2.0 லிட்டர் - 187 ஹெச்பி திறன் - 400 நியூட்டன் மீட்டர் டார்க்
பி.எம்.டபிள்யூ. எம் ஸ்போர்ட் - 3.0 லிட்டர் - 261 ஹெச்பி திறன் - 620 நியூட்டன் மீட்டர் டார்க்
புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். இதன் லக்சரி லைன் மாடல் 7.3 நொடிகளிலும், எம் ஸ்போர்ட் மாடல் 5.7 நொடிகளில் எட்டிவிடும். புதிய 5 சீரிஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 71.9 லட்சம் ஆகும்.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிசான் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நேபால் போன்ற நாடுகளுக்கு மேக்னைட் இறுதிக்கட்ட யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நேபாலில் நிசான் மேக்னைட் மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த மாடலை வாங்க முப்பது நாட்களில் 760 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேபாலில் மாதாந்திர பயணிகள் வாகன விற்பனை 1580 யூனிட்களாக இருந்தது என நிசான் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2020 மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் மாடல் மே இறுதிவரை 15,010 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றில் உள்நாட்டில் 13,790 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 1220 யூனிட்களும் அனுப்பப்பட்டன.
பெனலி நிறுவனத்தின் லியோன்சினோ பிஎஸ்6 மாடல் இந்தியாவில் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
பெனலி இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி உள்ளது. விலை உயர்வின் படி பெனலி லியோன்சினோ 500 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 4,69,900 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் விலை ரூ. 4,59,000 ஆக இருந்தது.
இந்திய சந்தையில் பெனலி லியோன்சினோ 500 மாடல் ஸ்டீல் கிரே மற்றும் லியோன்சினோ ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 4,69,900 மற்றும் ரூ. 4,79,900 என மாறி இருக்கிறது. பிப்ரவரி மாத வாக்கில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் வட்ட வடிவ ஹெட்லைட், டூயல் டோன் முன்புற பென்டர், வட்ட வடிவ பியூவல் டேன்க், ஒற்றை இருக்கை அமைப்பு, எல்இடி லைட்டிங், ட்வின்-பாட் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் என்ற போதும் இதன் செயல்திறன் குறைக்கப்படவில்லை.
பெனலி லியோன்சினோ 500 பிஎஸ்6 மாடலில் உள்ள 500சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் 46.8 பிஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த CB350 RS மோட்டார்சைக்கிள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் CB350 RS மோட்டார்சைக்கிள் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பானில் இந்த மோட்டார்சைக்கிள் GB350 பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. ஜூலை 15 ஆம் தேதி இந்த மாடல் ஜப்பான் விற்பனை மையங்களை சென்றடையும்.

ஜப்பானில் இந்த மோட்டார்சைக்கிள் ஹோண்டா GB350 மற்றும் ஹோண்டா GB350 S என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உயர் ரக S வேரியண்ட் புது நிறத்தில் கிடைக்கும். இத்துடன் சில பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா GB350 மாடலிலும் 349சிசி ஏர்-கூல்டு, லாங்-ஸ்டிரோக், சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.8 பிஹெச்பி பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் 2021 எப் பேஸ் SVR மாடலில் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 எப் பேஸ் மாடலின் SVR வேரியண்ட் முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமின்றி பலவிதங்களில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய எப் பேஸ் SVR மாடலில் 5 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 543 பிஹெச்பி திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டிவிடுகிறது.

இந்த காரில் ஸ்போர்ட் அனுபவத்தை ஏற்படுத்த மேம்பட்ட சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்டீரிங், எக்சாஸ்ட் மற்றும் பிரேக்கிங் உள்ளிட்டவைகளின் செயல்பாடு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. தோற்றத்தில் இது முந்தைய மாடலை விட கூர்மையாக காட்சியளிக்கிறது. இதன் முன்புற பம்ப்பரில் பெரிய ஏர்-இன்டேக், மெல்லிய ஹெட்லைட் வழங்கப்படுகிறது.
மினி இந்தியா நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் இந்தியாவில் ரூ. 38 லட்சம் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
மினி இந்தியா நிறுவனம் மூன்று புதிய கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடல் விலை ரூ. 38 லட்சம், மினி கன்வெர்டிபில் மாடல் விலை ரூ. 44 லட்சம், மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் (JCW) மாடல் விலை ரூ. 45.50 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மூன்று புதிய மாடல்களும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகமாகி இருக்கின்றன. இவை சிபியு முறையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. மினி விற்பனை மையங்கள் மற்றும் மினி ஆன்லைன் தளங்களில் புது மாடல்களுக்கான முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் துவங்கி உள்ளது.

மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மற்றும் மினி கன்வெர்டிபில் மாடல்கள் - ரூப்டாப் கிரே மெட்டாலிக், ஐலேண்ட் புளூ மெட்டாலிக், எனிக்மேடிக் பிளாக் மற்றும் செஸ்டி எல்லோ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த யூனிட் 192 பிஹெச்பி/141kW திறன், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். மினி கன்வெர்டிபில் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 7 ஸ்பீடு டபுள் கிளட்ச்ஸ் ஸ்டெப்டிரானிக்ஸ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
மினி JCW மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் ட்வின்பவர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 231 பிஹெச்பி / 170 kW திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூலை 1 ஆம் தேதி முதல் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை மோட்டார்சைக்கிள்கள் விலை ரூ. 3 ஆயிரம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.
விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். இருசக்கர வாகன உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்த்தப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து உள்ளது.

முன்னதாக மாருதி சுசுகி நிறுவனமும் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. 2022 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தனது கார்கள் விலையை மாருதி சுசுகி உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பயணிகள் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்தன. வாகன உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்தன.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் வாகன விற்பனையை அதிகப்படுத்த கார்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 3.01 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் புதிய தார் மாடல் தவிர அனைத்து கார்களுக்கும் வழங்கப்படுகின்றன.
சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இவை கேயுவி100 என்எக்ஸ்டி துவங்கி பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான அல்டுராஸ் ஜி4 என பெரும்பாலான மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
சலுகை விவரங்கள்:
மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி - அதிகபட்சம் ரூ. 61,055
தள்ளுபடி ரூ. 38,055 வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 3 ஆயிரம் வரை
மஹிந்திரா எக்ஸ்யுவி300 - அதிகபட்சம் ரூ. 44,000
தள்ளுபடி ரூ. 5 ஆயிரம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 25 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4,000
கூடுதல் பலனகள் ரூ. 10 ஆயிரம் வரை
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 - அதிகபட்சம் ரூ. 3.01 லட்சம்
தள்ளுபடி ரூ. 2.2 லட்சம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 50 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 11,500
கூடுதல் பலனகள் ரூ. 20 ஆயிரம் வரை

மஹிந்திரா மராசோ - அதிகபட்சம் ரூ. 40,200 வரை
தள்ளுபடி ரூ. 20 ஆயிரம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 15 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 5,200 வரை
மஹிந்திரா ஸ்கார்பியோ - அதிகபட்சம் ரூ. 36,042
தள்ளுபடி ரூ. 17,042
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 15 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4,000
மஹிந்திரா எக்ஸ்யுவி500 - அதிகபட்சம் ரூ. 1.89 லட்சம் வரை
தள்ளுபடி ரூ. 1.13 லட்சம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 50 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 6,500 வரை
கூடுதல் பலனகள் ரூ. 20 ஆயிரம் வரை
மஹிந்திரா பொலிரோ - அதிகபட்சம் ரூ. 16,500
தள்ளுபடி ரூ. 3,500 வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 10 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 3 ஆயிரம் வரை






