என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ மாடல் புது வேரியண்ட்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் S (O) மற்றும் SX (O) வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புது வேரியண்ட்களின் துவக்க விலை ரூ. 9.03 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இரு வேரியண்ட்களும் மொத்தம் 4 மாடல்களில் கிடைக்கின்றன.
புது வேரியண்ட்கள் விலை விவரம்
ஹூண்டாய் வென்யூ S(O)
பெட்ரோல் iMT ரூ. 9.03 லட்சம்
பெட்ரோல் 7DCT ரூ. 9.94 லட்சம்
டீசல் 6MT ரூ. 9.44 லட்சம்
ஹூண்டாய் வென்யூ SX(O)
டீசல் 6MT ரூ. 10.96 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வென்யூ S(O) வேரியண்ட் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், iMT 7 ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 100 பிஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
மாற்றங்களை பொருத்தவரை இரு வேரியண்ட்களிலும் அலாய் வீல்களுக்கு மாற்றாக ஸ்டீல் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புளூ லின்க் கனெக்டிவிட்டி வசதி வழங்கப்படுகின்றன. இவைதவிர இரு வேரியண்ட்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய பொலிரோ மாடல் இம்மாதமே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொலிரோ நியோ மாடல் அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர் வீடியோக்களை மஹிந்திரா வெளியிட்டு உள்ளது.
அதன்படி புதிய பொலிரோ நியோ மாடலின் முன்புறம் முழுமையாக மாற்றப்பட்டு 6-ஸ்லாட் கொண்ட குரோம் கிரில், புது தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப்கள், DRL-கள், பாக் லைட்கள், பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் 5-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.5 லிட்டர் எம்-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 100 பிஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் குரூயிசர், நிசான் மேக்னைட் மற்றும் டாடா நெக்சான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் டாமினர் 250 மற்றும் 400 மாடல்கள் விலையை மாற்றி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மாற்றி உள்ளது. அதன்படி டாமினர் 250 மாடல் விலை ரூ. 16,800 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 1,54,176 என மாறி உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ. 1,70,976 என இருந்தது.

டாமினர் 400 மாடலின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 2,11,572 ஆகும். முன்னதாக இதன் விலை ரூ. 2,03,017 இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தற்போது டாமினர் 400 விலை ரூ. 8555 உயர்ந்து இருக்கிறது. விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா FZ-25 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாமினர் 400 மாடல் ராயல் என்பீல்டு Meteor 350, ஹோண்டா CB350 RS மற்றும் பெனலி இம்பீரியல் 400 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் பலன்கள், லாயல்டி மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது. க்விட் மாடலுக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளம் அல்லது மை ரெனால்ட் செயலி மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் லாயல்டி சலுகை, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் லாயல்டி பலன்கள் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு, ரூ. 25 ஆயிரம் பலன்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் பலன், ரூ. 15 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
யமஹா நிறுவனம் YZF R15 V3.0 மற்றும் MT 15 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்கள் விலை இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாடல் மற்றும் நிறத்திற்கு ஏற்ப விலை ரூ. 2500 முதல் 3 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
புதிய விலை விவரம்
யமஹா YZF R15 V3.0
தண்டர் கிரே ரூ. 1,54,600
மெட்டாலிக் ரெட் ரூ. 1,54,600
ரேசிங் புளூ ரூ. 1,55,700
டார்க் நைட் ரூ. 1,56,700

யமஹா MT-15
மெட்டாலிக் பிளாக் ரூ. 1,45,900
டார்க் மேட் புளூ ரூ. 1,45,900
ஐஸ் புளுயோ வெர்மிலான் ரூ. 1,45,900
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
இரு மாடல்களுக்கான விலை உயர்வு குறித்து யமஹா சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. எனினும், உற்பத்திக்கு தேவையான ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த உதிரிபாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது.
இரு மாடல்களிலும் 155 சிசி லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.3 பிஹெச்பி பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் புது ஹரிகேன் STO மாடல் ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.
லம்போர்கினி நிறுவனம் தனது ஹரிகேன் STO மாடலை ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
லம்போர்கினி ஹரிகேன் STO மாடலில் ஹரிகேன் பெர்போர்மன்ட் மற்றும் ஹரிகேன் இவோ மாடல்களில் வழங்கப்பட்டுள்ள என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் இழுவிசை திறன் சற்றே குறைக்கப்பட்டு இருக்கிறது.

எடையை பொருத்த வரை புது ஹரிகேன் STO கார், பெர்போர்மன்ட் மாடலை விட 43 கிலோ குறைவாக உள்ளது. இதன் பிரத்யேக ஏரோடைனமிக் வடிவமைப்பு ஹரிகேன் STO மாடலின் திறனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதனால் அதிவேகமாக செல்லும் போது காரை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
புது லம்போர்கினி காரில் 5.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 631 பிஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய AMG மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் AMG E53 4 மேடிக் பிளஸ் மற்றும் AMG E63 S 4 மேடிக் பிளஸ் மாடல்களை ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
மெர்சிடிஸ் AMG E53 4 மேடிக் பிளஸ் மாடலில் 3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 450 பிஹெச்பி பவர் வழங்குகிறது.

இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். மெர்சிடிஸ் AMG E63 S 4 மேடிக் பிளஸ் மாடலில் 4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் மட்டும் 11 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஜூன் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2.34 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்நிறுவனம் 2.10 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

கடந்த மாதம் 2.12 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. ஏற்றுமதியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 168 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 21,583 யூனிட்களை ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது.
ஒட்டுமொத்த விற்பனையில் ஆக்டிவா 6ஜி மற்றும் ஷைன் மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இவை தவிர ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
ஹோண்டா நிறுவனத்தின் பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் விற்றுத்தீர்ந்தன.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் 2021 கோல்டு விங் டூர் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியா கொண்டுவரப்பட்ட முதற்கட்ட யூனிட்கள் முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது. ஹோண்டாவின் பிளாக்ஷிப் கோல்டு விங் டூர் மாடல் ஜப்பானில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் கோல்டு விங் டூர் மாடல் துவக்க விலை ரூ. 37.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஹோண்டா கோல்டு விங் டூர் மாடலில் 1833சிசி லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், 24 வால்வ் SOHC பிளாட்-6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
"நாங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த பிளாக்ஷிப் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம்," என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலெரியா தெரிவித்தார்.
கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வழங்கும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டிக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது.
மாருதி சுசுதி நிறுவனம் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகைக்கான கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வாரண்டி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் கார் பராமரிப்பு சேவை உள்ளிட்டவைகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தது. தற்போது இவற்றுக்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
அதன்படி மார்ச் 15, 2021 முதல் மே 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுற்ற இலவச சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளுக்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டொயோட்டா, எம்ஜி மோட்டார், ஸ்கோடா, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிஎஸ்6 ரக R 1250 GS சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் வெளியாக இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது பிஎஸ்6 ரக பி.எம்.டபிள்யூ. R 1250 GS மற்றும் R 1250 GS அட்வென்ச்சர் மாடல்கள் ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இரு மாடல்கள் வெளியீட்டை பி.எம்.டபிள்யூ. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS சீரிஸ் மாடல்கள் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் சமீபத்திய அட்வென்ச்சர் டூரர் மாடலில் 1254சிசி, ஏர்/லிக்விட் கூல்டு, பிளாட் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 134 பிஹெச்பி பவர், 142 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாக இருக்கும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மாடலும் இதே அளவு செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோற்றத்தில் இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் அசிமெட்ரிக் ஹெட்லைட் டிசைன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அட்வென்ச்சர் வேரியண்ட் டியூப்-லெஸ் டையர், கிராஸ் ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர், நெக்சான் மற்றும் அல்ட்ரோஸ் கார்களின் பிளாக் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் புது பிளாக் எடிஷன் மாடல்கள் டாடா விற்பனை மையகங்களை வந்தடையும் என தெரிகிறது. டாடா கார்களின் பிளாக் எடிஷன் மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலின் டார்க்-தீம் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. ஹேரியர் டார்க் எடிஷன் மாடல் சந்தையில் ரூ. 18.35 மற்றும் ரூ. 19.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய பிளாக் எடிஷன் கார்களின் வெளிப்புறம் பிளாக்டு-அவுட் தீம் கொண்டிருக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் மட்டுமின்றி, உள்புறத்திலும் கருப்பு நிறம் பூசப்படும் என தெரிகிறது. புது நிறம் தவிர காரின் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.






