என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிக்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல்களின் விலை ரூ. 3500 வரை உயர்ந்துள்ளது.
புதிய விலை விவரம்
சுசுகி ஜிக்சர் SF: ரூ. 1,20,469
சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,30,971
சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,72,872
சுசுகி ஜிக்சர் SF 250: ரூ. 1,83,571
சுசுகி ஜிக்சர் SF 250 மோட்டோஜிபி: ரூ. 1,84,373
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் சுசுகி இருசக்கர வாகனங்கள் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் ஜிக்சர் மாடல்கள் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
சில தினங்களுக்கு முன் சுசுகி நிறுவனம் தனது 2021 ஹயபுசா இரண்டாம் கட்ட யூனிட்களுக்கான முன்பதிவை துவங்கியது. ஹயபுசா 2021 மாடல்களின் முதல் விற்பனையில் 101 யூனிட்களும் விற்றுத்தீர்ந்தன. இவற்றின் வினியோகமும் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மாதாந்திர வாகன விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 54,474 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும். முன்னதாக இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் வாகன உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடந்தது.

ஒட்டுமொத்த வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் ஹூண்டாய் நிறுவனம் 103.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹூண்டாய் 26,820 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
கடந்த மாதம் மட்டும் உள்நாட்டில் 40,496 யூனிட்களை ஹூண்டாய் விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 89.9 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோன்று கடந்த மாதம் 13,978 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 154.1 சதவீதம் அதிகம் ஆகும்.
சிஎப் மோட்டோ நிறுவனம் தனது பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சிஎப் மோட்டோ நிறுவனம் 650NK, 650GT மற்றும் 650MT பிஎஸ்6 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 4.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு சிஎப்மோட்டோ வலைதளத்தில் நடைபெறுகிறது.
பிஎஸ்6 மாடல்கள் விலை விவரம்
650NK - ரூ. 4.29 லட்சம்
650GT - ரூ. 5.29 லட்சம்
650MT - ரூ. 5.59 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சிஎப் மோட்டோ 650NK மற்றும் 650MT பிஎஸ்6 மாடல்கள் விலை முந்தைய வேரியண்டை விட ரூ. 30 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சிஎப்மோட்டோ 650GT மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மூன்று புது சிஎப் மோட்டோ மாடல்களிலும் 650சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 55.6 பிஹெச்பி பவர், 54.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம்5 காம்படீஷன் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடல் இந்தியாவில் அறிமுகமானது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் விலை ரூ. 1.62 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சிபியு முறையில் கிடைக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடலுக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் நடைபெறுகிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடலில் வி8 ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 625 ஹெச்பி திறன், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடிகளில் எட்டிவிடும்.
பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடல்- ரோட், ஸ்போர்ட் மற்றும் டிராக் என மூன்றுவித மோட்களை கொண்டிருக்கிறது. இவற்றை சென்டர் கன்சோலில் உள்ள எம் பட்டன் கொண்டு தேர்வு செய்ய முடியும்.
சுசுகி நிறுவனம் தனது பிஎஸ்6 ஹயபுசா மாடலின் முன்பதிவை மீண்டும் துவங்கி இருக்கிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக ஹயபுசா மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. தற்போதைய முன்பதிவு ஹயபுசா பிஎஸ்6 இரண்டாம் கட்ட யூனிட்களுக்கானவை ஆகும். புது ஹயபுசா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
2021 ஹயபுசா மாடல்களின் முதற்கட்ட யூனிட்கள் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. முதற்கட்டமாக 101 யூனிட்கள் விற்பனைக்கு வந்தது. 101 யூனிட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பின்புற இருக்கைக்கான கவுல் இலவசமாக வழங்கப்பட்டது. பின்புற கவுல் கொண்டு மோட்டார்சைக்கிளை ஒற்றை இருக்கை கொண்ட மாடலாக மாற்ற முடியும்.

இந்தியாவில் புதிய சுசுகி ஹயபுசா மாடல் துவக்க விலை ரூ. 16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது முந்தைய மாடலை விட ரூ. 2.65 லட்சம் அதிகம் ஆகும். ஹயபுசா பிஎஸ்6 மாடலில் புல் எல்இடி லைட்டிங், எல்சிடி ஸ்கிரீன், முற்றிலும் புது வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
பி.எம்.டபிள்யூ. என்ஜின் கொண்ட பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
பறக்கும் கார்கள் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அதிசயம் மிக்க வாகனமாகவே அறியப்பட்டு வந்தது. சாலையில் வழக்கமான கார்களை போன்று செல்வதோடு, வானத்திலும் பறக்கும் திறன் கொண்ட வாகனம் என்றால் சுவாரஸ்யமான விஷயமாக இருப்பதோடு மட்டுமின்றி தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.
எனினும், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து புதுமை மிக்க சில ப்ரோடோடைப் மாடல்களையும் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் கிளைன் விஷன் எனும் நிறுவனமும் பறக்கும் கார் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கி உள்ளது. இத்துடன் உலகில் முதல் முறையாக இன்டர்-சிட்டி சோதனையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த பறக்கும் கார் நித்ராவில் இருந்து ஸ்லோவேகியாவில் உள்ள பிரடிஸ்லாவா என இரண்டு சர்வதேச விமான நிலையங்களுக்கு பறந்து சென்றுள்ளது. ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் பறக்கும் கார் இரு விமான நிலையங்களை கடக்க 35 நிமிடங்களை எடுத்துக் கொண்டது.
கிளைன் விஷன் ஏர்கார் மாடலில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 160 பிஹெச்பி திறன் வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் தரையில் இருந்து 8200 அடி உயரத்தில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 170 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.
வானில் பறந்து வந்து தரையிறங்கியதும், ஒரே பட்டனை க்ளிக் செய்ததும் வழக்கமான ஸ்போர்ட்ஸ் காராக மூன்றே நிமிடங்களில் மாறிவிடுகிறது. வானில் பறப்பது மட்டுமின்றி சாதுர்யமான வளைவுகளையும் இந்த கார் நேர்த்தியாக செய்கிறது. இந்த கார் இதுவரை 40 மணி நேரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தரையில் இருந்து டேக் ஆப் ஆக 15 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. மேலும் காராக இருந்து விமானமாக மாற 2.15 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் இருந்து ஒரு கோடியாவது யூனிட்டை வெளியிட்டுள்ளது. ஒரு கோடியாவது யூனிட் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மாடலாக வெளியாகி இருக்கிறது. சென்னை ஆலையில் ஹூண்டாய் உற்பத்தி பணிகள் 1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்த நிலையில், உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடக்க 23 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. புது மைல்கல் எட்டியதை கொண்டாடும் வகையில் ஒரு கோடியாவது யூனிட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் இந்தியாவின் முன்னணி வாகன ஏற்றுமதியாளராக இருக்கிறது.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளது. கிரெட்டா மாடலை போன்றே புதிய அல்காசர் மாடலும் வெற்றி பெறும் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வாகனங்கள் விற்பனை குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் பதில் அளித்துள்ளார்.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ஆன்லைன் மூலம் வாகன விற்பனையை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. இதன் காரணமாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்களும் ஆன்லைன் மூலம் தங்களின் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கின.

அந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் தனது விற்பனையை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டுவந்தது. இதற்காக பென்ஸ் நிறுவனம் ‘Merc From Home' வலைதளத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த வலைதளம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் பெரும் பங்கு வகித்துள்ளது.
``மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 20 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று இருக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது இந்தியா ஆன்லைன் விற்பனையில் முன்னணி இடம்பிடிக்கும். இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் சந்தோஷ் ஐயர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மற்றொரு நகரத்துக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பூனேவில் துவங்கி உள்ளது. இதன் விலை ரூ. 1,10,898 ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிஎஸ் ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நாட்டின் 20 நகரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. செயல்திறன் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் திறன் கொண்ட 125சிசி வாகனங்களுக்கு இணையாக உள்ளது.
டிவிஎஸ் ஐ கியூப் மாடலில் உள்ள 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் மீண்டும் துவங்கி உள்ளது.
பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் M340i மாடலை இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த கார் விலை ரூ. 62.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். மொத்தத்தில் 40 யூனிட்களே விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் வெளியான ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன.

தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் டன்சனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. M340i மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த யூனிட் 387 பிஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது SVR மாடல் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் சீரிசின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். புதிய ரேன்ஜ் ரோவர் காருக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது.

புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடல் நான்கு பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் CBU (Completely Built Up) வடிவில் கிடைக்கிறது. ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலில் 5 லிட்டர் சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது.
இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 283 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 5.48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் டியாகோ XT மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் விலை XT வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டியாகோ XT O மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. XT மாடலில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மற்றப்படி புதிய XT O வேரியண்டிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ XT O மாடல் மாருதி சுசுகி செலரியோ, வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டேட்சன் கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






