என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 முதல் அரையாண்டு கால வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஆண்டின் முதல் ஆறு மாத விற்பனையில் 65 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பென்ஸ் நிறுவனம் 4857 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2020 ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட 2948 யூனிட்களை விட அதிகம் ஆகும். 

     மெர்சிடிஸ் பென்ஸ் கார்

    2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஏ கிளாஸ் லிமோசின், இ கிளாஸ் LWB பேஸ்லிப்ட், AMG A35 4M, புதிய தலைமுறை GLA, AMG GLA 35 4M, GLS மேபக் 600, முற்றிலும் புதிய எஸ் கிளாஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    என்ட்ரி லெவல் மாடல்களான GLA மற்றும் ஏ கிளாஸ், இ கிளாஸ் பேஸ்லிப்ட் மற்றும் GLA முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன. மொத்த விற்பனையில் 20 சதவீத யூனிட்கள் பென்ஸ் ஆன்லைன் தளம் மூலம் நடைபெற்றுள்ளன.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பி.எஸ். 6 ரக R 1250 GS மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    விலை விவரம்:

    பி.எம்.டபிள்யூ. R 1250 GS ப்ரோ ரூ. 20,45,000

    பி.எம்.டபிள்யூ. R 1250 GS அட்வென்ச்சர் ப்ரோ ரூ. 22,40,000

     பி.எம்.டபிள்யூ. R 1250 GS

    புதிய பி.எம்.டபிள்யூ. மோட்டார்சைக்கிள் மாடல்கள் சி.பி.யு. (Completely Built-up Units) முறையில் முழுமையாக உருவாக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகின்றன. பி.எஸ். 6 ரக R 1250 GS மாடலில் 1254சிசி, ஏர்/லிக்விட் கூல்டு, பிளாட்-ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 134 பி.ஹெச்.பி. பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. R 1250 GS மாடலில் அசிமெட்ரிக் ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன், எல்.இ.டி. லைட்டிங், அடாப்டிவ் ஹெட்லைட், ப்ளூடூத் சார்ந்து இயங்கும் TFT கலர் டிஸ்ப்ளே, டிராக்ஷன் கண்ட்ரோல், யு.எஸ்.பி. சார்ஜிங் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்தது. இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 7361 துவங்கி அதிகபட்சம் ரூ. 8362 வரை உயர்ந்து இருக்கிறது. 

     ராயல் என்பீல்டு கிளாசிக் 350

    இந்த விலை உயர்வு காரணமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 துவக்க விலை ரூ. 1,79,782 என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,06,962 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தொடர் விலை உயர்வு காரணமாக கிளாசிக் 350 விலை ரூ. 2 லட்சத்தை கடந்துள்ளது. 

    அந்த வகையில் அடுத்த தலைமுறை கிளாசிக் 350 மாடல் விலை மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விலைக்கு ஏற்ப புதிய கிளாசிக் 350 மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும். இது முற்றிலும் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் பி.எம்.டபிள்யூ. CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரோடக்ஷன் மாடல் ஆகும். தோற்றத்தில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ. டெபனிஷன் CE 04 கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது.

    முற்றிலும் அதிநவீன டிசைன் கொண்டிருக்கும் பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலில் 10.25 இன்ச் TFT கலர் ஸ்கிரீன், முழுவதும் எல்.இ.டி. லைட்டிங், பக்கவாட்டு மற்றும் முன்புறம் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதி உள்ளது. இத்துடன் காற்றோட்ட வசதியுடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட மொபைல் போன் சார்ஜிங் யூனிட் உள்ளது.  

     பி.எம்.டபிள்யூ. CE 04

    பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலின் பேட்டரி மற்றும் பின்புற சக்கரத்திற்கு இடையில் காந்த திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. 15kW திறன் கொண்ட மோட்டார் 41 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    இதில் உள்ள 8.9 kWh பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. பி.எம்.டபிள்யூ. CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இகோ, ரெயின், ரோட் மற்றும் ஆப்ஷனல் டைனமிக் மோட் போன்ற ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.  

    அல்ட்ரா பிரீமியம் விலையில் பெராரி நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    பெராரி நிறுவனம் இந்தியாவில் ரோமா ஸ்போர்ட்ஸ் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் விலை ரூ. 3.76 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் 2019 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பெராரி ரோமா மாடலில் அடாப்டிவ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், குவாட் எல்.இ.டி. டெயில் லைட்கள், பிளார்டு ரியர் வீல் ஆர்ச், மூன்று மோட்கள் கொண்ட பின்புற ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     பெராரி ரோமா

    உள்புறம் 16 இன்ச், வளைந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், சென்டர் கன்சோல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    பெராரி ரோமா மாடலில் 3.9 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 612 பி.ஹெச்.பி. பவர், 760 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை 9.3 நொடிகளில் எட்டிவிடும். இது அதிகபட்சம் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 220 குரூயிஸ் மற்றும் 160 ஸ்டிரீட் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, அவெஞ்சர் 220 குரூயிஸ் மற்றும் 160 ஸ்டிரீட் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வுக்கு பின் இரு மாடல்கள் விலை முறையே ரூ. 1,31,046 மற்றும் ரூ. 1,07,309 என மாறி இருக்கிறது. முன்னதாக இவற்றின் விலை ரூ. 1,26,995 மற்றும் ரூ. 1,03,699 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர ஜனவரி மாதமும் இரு மாடல்கள் விலையை பஜாஜ் ஆட்டோ உயர்த்தியது.

     பஜாஜ் அவெஞ்சர்

    விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அவெஞ்சர் 220 குரூயிஸ் மாடலில் 220சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 18.76 பி.ஹெச்.பி. பவர், 17.55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.79 பி.ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. முன்னதாக பஜாஜ் ஆட்டோ டாமினர் சீரிஸ் விலையை மாற்றி அமைத்தது.
    சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் இரண்டாம் கட்ட யூனிட்களும் விற்றுத் தீர்ந்தன.
     

    சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிள் ஒரு மணி நேரத்தில் நிறைவுற்று இருக்கிறது. புதிய ஹயபுசா மாடல் பல்வேறு மாற்றங்களுடன் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதற்கட்ட யூனிட்கள் விற்பனை துவங்கிய சில நாட்களில் விற்றுத் தீர்ந்தது.

     2021 சுசுகி ஹயபுசா

    அந்த வகையில் இந்த மாடலின் இரண்டாம் கட்ட யூனிட்கள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 சுசுகி ஹயபுசா மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்திய சந்தையில் இத்தகைய வரவேற்பு கிடைத்து இருப்பது, இந்த சூப்பர்பைக் மாடலுக்கு பெரும் மைல்கல் ஆகும்.

    2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000SX மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2021 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் 2021 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் துவக்க விலை ரூ. 64.12 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் R டைனமிக் SE மற்றும் S என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் நடைபெறுகிறது.

     2021 ரேன்ஜ் ரோவர் இவோக்

    2021 ரேன்ஜ் ரோவர் R டைனமிக் SE வேரியண்ட் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இதன் S வேரியண்ட் 2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 247 பி.ஹெச்.பி. பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 2 லிட்டர் டீசல் என்ஜின் 201 பி.ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    இரு என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இவோக் மாடலில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இவோக் சீரிசில் முதல் முறையாக டீப் கார்னெட் / எபோனி டூயல் டோன் நிறம் வழங்கப்பட்டுள்ளது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அல்ட்ரோஸ், நெக்சான் மாடல்களின் டார்க் வேரியண்டை அறிமுகம் செய்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ், நெக்சான் மற்றும் நெக்சான் இ.வி. மாடல்களுக்கான டார்க் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்ட்களுக்கான முன்பதிவு அந்நிறுவன விற்பனை மையங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    புதிய அல்ட்ரோஸ் டார்க் மாடல் விலை ரூ. 8.71 லட்சம் என துவங்குகிறது. நெக்சான்  டார்க் மாடல் விலை ரூ. 10.40 லட்சம், நெக்சான் இ.வி. டார்க் விலை ரூ. 15.99 லட்சம் ஆகும். டாடா ஹேரியர் டார்க் எடிஷன் விலை ரூ. 18.04 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     டாடா நெக்சான் டார்க்

    டாடா அல்ட்ரோஸ் டார்க் மாடலின் வெளிப்புறம் காஸ்மோ பிளாக் நிறம், ஆர்16 அலாய் வீல்களில் டார்க் டின்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. காரின் உள்புறங்களில் கிரானைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் டார்க், இந்த காரின் டாப் எண்ட் மாடல்களில் ஒன்றாக வெளியாகி இருக்கிறது.

    நெக்சான் டார்க் மாடல் XZ+, XZA+, XZ+(O) மற்றும் XZA+(O) வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இவை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நெக்சான் இ.வி. டார்க் மாடல் XZ+ மற்றும் XZ+ லக்ஸ் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. 
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 மாடலின் ரேஸ் XP மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புது 125சிசி மாடல் விலை ரூ. 83,275, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலில் ரேசிங் சார்ந்த, மூன்று நிறங்கள் அடங்கிய தீம் மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் சிவப்பு நிறத்தால் ஆன ஸ்போர்ட் வீல்கள் உள்ளன.

     டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP

    டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP மாடலில் மேம்பட்ட Smartxonnect கனெக்டிவிட்டி மற்றும் இரண்டு ரைட் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இதில் உள்ள Smartxonnect வாய்ஸ் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இதுதவிர மோட்களை மாற்றுவது, கன்சோல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்வது, டு நாட் டிஸ்டர்ப் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    என்டார்க் 125 புது வேரியண்டிலும் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 10 பி.ஹெச்.பி. பவர், 10.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. ரேஸ் மோடில் இயக்கும் போது இந்த ஸ்கூட்டர் மணிக்கு 98 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசு அளவை குறைக்கும் மைலேஜ் பூஸ்டர் சாதனத்தை தொழில்நுட்ப வல்லுநர் உருவாக்கி இருக்கிறார்.

    காற்று மாசை குறைக்கும் நோக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாகனங்களின் மைலேஜை அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைலேஜ் பூஸ்டரை உருவாக்கி உள்ளார். 

    மூத்த தொழில்நுட்ப வல்லுநர் டேவிட் எஷ்கால் 5M மைலேஜ் பூஸ்ட் சாதனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சாதனம் வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசு அளவை வெகுவாக குறைக்கிறது. மேலும் இது வாகனங்களின் பிக்கப், டார்க் மற்றும் திரஸ்ட் அளவை அதிகப்படுத்தி காற்று மாசு ஏற்படுவதை குறைக்கிறது. இத்துடன் எரிபொருளை சேமிக்கவும் வழி செய்கிறது.

     கோப்புப்படம்

    மைலேஜ் பூஸ்டரின் ஐந்து பலன்களை குறைக்கும் வகையில் இந்த சாதனத்திற்கு 5M என பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ஜினை திறக்காமலேயே அதன் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த மைலேஜ் பூஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து அல்ட்ராசோனிக் கதிர்கள் மற்றும் வாயு அடங்கிய பிளாஸ்மா என்ஜினுள் செலுத்தப்படுகிறது.

    'மைலேஜ் பூஸ்டரை உருவாக்கும் பணிகளை 2008 ஆம் ஆண்டு துவங்கினேன். இது வாகனத்தின் மைலேஜை அதிகப்படுத்துவது மட்டுமின்றி சுற்றுச்சூழலில் ஏற்படும் காற்று மாசு அளவையும் குறைக்கும்,' என எஷ்கோல் தெரிவித்தார். இது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து மற்றும் டிரக் போன்றவைகளிலும் பயன்படுத்த முடியும். 100 சிசி முதல் 10 ஆயிரம் சிசி திறன் கொண்ட என்ஜின்களில் இந்த மைலேத் பூஸ்டரை பயன்படுத்தலாம். 
    கே.டி.எம். மற்றும் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    கே.டி.எம். நிறுவனம் அனைத்து கே.டி.எம். மற்றும் ஹஸ்க்வர்னா மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு துவங்கியது முதல் இந்நிறுவன மாடல்கள் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்படுகிறது. இம்முறை ரூ. 256 துவங்கி ரூ. 11,423 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய விலை விவரம்:

    கே.டி.எம். டியூக் 125 ரூ. 1,70,515
    கே.டி.எம். டியூக் 200 ரூ. 1,85,606
    கே.டி.எம். டியூக் 250 ரூ. 2,28,736
    கே.டி.எம். டியூக் 390 ரூ. 2,87,545
    கே.டி.எம். ஆர்.சி. 200 ரூ. 2,08,602
    கே.டி.எம். ஆர்.சி. 390 ரூ. 2,77,517
    250 அட்வென்ச்சர் ரூ. 2,54,995
    390 அட்வென்ச்சர் ரூ. 3,28,286
    ஸ்வார்ட்பிளைன் 250 ரூ. 2,10,650
    விட்பிளைன் 250 ரூ. 2,10,022

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்

    கே.டி.எம். டியூக் 125 இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125சிசி மாடல்களில் இரண்டாவது விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. டியூக் 390 மாடல் விலை ரூ. 11,358 உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 2.87 லட்சம் என மாறி இருக்கிறது. டியூக் 200 மற்றும் டியூக் 250 மாடல்கள் விலை முறையே ரூ. 2,022 மற்றும் ரூ. 6,848 உயர்த்தப்பட்டு உள்ளது.

    கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.சி. 390 மாடல் விலை ரூ. 11,358 உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 2.77 லட்சம் என மாறி இருக்கிறது. ஆர்.சி. 200 விலை ரூ. 2,253 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    250 அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 258 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 390 அட்வென்ச்சர் மாடல் ரூ. 11,423 உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 3.28 லட்சம் என மாறி இருக்கிறது.
    ×