என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆர்வி400 மாடல் முன்பதிவு மீண்டும் நடைபெற இருக்கிறது.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஆர்வி 400 மற்றும் ஆர்வி300 மாடல்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. 

    எனினும், முன்பதிவு துவங்கிய இரண்டு மணி நேரத்தில் அமோக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டது. தற்போது இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

     ரெவோல்ட் ஆர்வி400

    இந்தியாவில் பேம் 2 திட்டத்தில் கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டதால் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 28,200 குறைந்தது. தற்போது இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 90,799, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. 

    ரெவோல்ட் ஆர்வி400 மாடலில் 3.24kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 3kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஜூலை மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஜாஸ், அமேஸ், நான்காம் தலைமுறை சிட்டி, ஐந்தாம் தலைமுறை சிட்டி மற்றும் WR-V போன்ற மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகை வழங்கப்படுகிறது. இவை ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

     ஹோண்டா கார்

    ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 34,095 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இவை ஹோண்டா ஜாஸ் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் VMT மற்றும் VXMT பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ. 33,998 வரையும், அமேஸ் S MT வேரியண்டிற்கு ரூ. 57,243 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.

    ஹோண்டா சிட்டி நான்கு மற்றும் ஐந்தாம் தலைமுறை மாடல்களுக்கு ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. ஹோண்டா WR-V மாடலுக்கு ரூ. 34,058 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
    1971 போர் வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மோட்டார்சைக்கிளை இரு நிறங்களில் அறிமுகம் செய்தது.


    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் ஜாவா கிளாசிக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே நிறங்களை அறிமுகம் செய்தது. இரு நிறங்களும் 1971 போர் வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது நிறம் தவிர மோட்டார்சைக்கிளில் இந்திய ராணுவ சின்னமும் இடம்பெற்று இருக்கிறது. 

     ஜாவா மோட்டார்சைக்கிள்

    ஜாவா காக்கி மற்றும் மிட் நைட் கிரே மாடல்கள் விலை ரூ. 1,93,357 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு நிற ஆப்ஷன்களும் மேட் பினிஷ் மற்றும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் ஸ்போக் வழங்கப்பட்டு உள்ளது. காஸ்மெடிக் அப்கிரேடுகள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வெர்ஷன் கொண்ட மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஜாவா மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 293சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 27.02 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் சி.என்.ஜி. மாடல்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஸ்விப்ட் மற்றும் அனைத்து சி.என்.ஜி. மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது விலை உயர்வு ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு இன்று (ஜூலை 12) முதல் அமலுக்கு வந்தது.

     மாருதி சுசுகி கார்

    சி.என்.ஜி. மாடல்கள் மட்டுமின்றி பெட்ரோல் கார்களின் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. "முந்தைய அறிவிப்பின் படி பல்வேறு செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது," என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. 

    இந்த ஆண்டு மட்டும் மாருதி சுசுகி விலை உயர்வு மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் விலை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. ஆண்டு துவக்கம் முதலே கார் விலை உயர்வுக்கு செலவீனங்கள் அதிகரித்ததையே காரணமாக தெரிவித்தது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    பஜாஜ் டாமினர் 400 இந்திய சந்தையின் டூரிங் மோட்டார்சைக்கிள் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின்படி டாமினர் 400 மற்றொரு வேரியண்ட் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. டாமினர் 400 புது வேரியண்ட் டூரிங் சார்ந்த பல அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     பஜாஜ் டாமினர் 400

    பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் இந்த மாடல் புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் நக்கிள் கார்டுகள் உள்ளன. தற்போது இந்த மாடலின் முன்புற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த மாடலில் மேலும் சில அக்சஸரீக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

    இந்தியாவில் பண்டிகை காலம் சில மாதங்களில் தொடங்க இருப்பதால், விரைவில் டாமினர் 400 டூரிங் எடிஷன் வெளியாகும் என தெரிகிறது. இந்த மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் டாமினர் 400 ஸ்டான்டர்டு எடிஷனை விட அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

    ஸ்கோடா நிறுவனம் நாடு முழுக்க புதிய விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சுமார் 30 விற்பனை மையங்களை அடுத்த ஆறு மாதங்களில் திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

    ஜூலை மாதத்தில் மட்டும் 14 விற்பனை மையங்களை திறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் 16 விற்பனை மையங்களை படிப்படியாக திறக்க இருக்கிறது.

    கார்

    இதுதவிர ஸ்கோடா நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கோடியக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து புதிய மிட்-சைஸ் செடான் மாடலையும் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக மஹிந்திரா மாடல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. புது விலை உயர்வு காரணமாக மஹிந்திரா தார் விலை அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

     மஹிந்திரா கார்

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, KUV 100NXT, XUV500 போன்ற மாடல்கள் விலை சற்றே குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. மஹிந்திரா XUV500 விலை ரூ. 2912 முதல் அதிகபட்சம் ரூ. 3188 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. KUV100 NXT மாடல் விலை ரூ. 3,016 முதல் ரூ. 3,344 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அல்டுராஸ் ஜி4 விலை ரூ. 3094 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா XUV300 விலை ரூ. 18,970 துவங்கி ரூ. 24,266 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பொலிரோ மாடல் விலை ரூ. 22,600 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 1,02,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மராசோ எம்.பி.வி. விலை ரூ. 30 ஆயிரம் வரையும் ஸ்கார்பியோ விலை ரூ. 40 ஆயிரம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
    மாசிராட்டி நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இத்தாலி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மாசிராட்டி, லெவாண்ட் ஹைப்ரிட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஹைப்ரிட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என தெரிகிறது. மாசிராட்டி நிறுவனத்தின் இரண்டாவது ஹைப்ரிட் மாடலாக லெவாண்ட் மாடல் இருக்கிறது.

     மாசிராட்டி லிவான்டி ஹைப்ரிட்

    மாசிராட்டி லெவாண்ட் ஹைப்ரிட் மாடலில் 48 வோல்ட் ஹைப்ரிட் மற்றும் 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 330 பி.ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதில் உள்ள மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மாசிராட்டி மாடலை மேலும் வேகமாக்கி இருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமானதும் லெவாண்ட் ஹைப்ரிட் மாடல் போர்ஷ் கேயென், பி.எம்.டபிள்யூ. எக்ஸ்7, ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடி கியூ7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய கார் வாங்குவோருக்கு நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கார் வாங்குவோருக்கு அசத்தல் நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதற்காக டாடா நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் இணைந்துள்ளது. புது அறிவிப்பின்படி மிக குறைந்த மாத தவணை, நீண்ட காலத்திற்கு தவணை செலுத்தும் வசதி, எளிய நிதி திட்டங்கள் போன்றவை வழங்கப்படுகிறது.

     டாடா கார்

    வாடிக்கையாளர்களுக்கு சிக்கலற்ற நிதி சலுகைகளை வழங்க டாடா மோட்டார்ஸ் பல்வேறு வங்கிகளுடன் கூட்டணி அமைத்து வருகிறது. அந்த வரிசையில் புது கூட்டணி மூலம் கார் வாங்குவோருக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு மிக குறைந்த மாத தவணை வழங்கப்படுகிறது. இதில் வழக்கமான மாத தவணை தொகையை விட 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    அதாவது ஒரு லட்சத்திற்கு மாதம் ரூ. 834 மாத தவணை வழங்கப்படுகிறது. மிக குறைந்த மாத தவணை கார் வாங்கிய முதல் 3-6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப மாத தவணை 1 முதல் 7 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. ஒவ்வொரு மாடல், வேரியண்ட் மற்றும் நிறத்திற்கு ஏற்ப இம்முறை ரூ. 4,470 துவங்கி அதிகபட்சம் ரூ. 8,405 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.  

    புதிய விலை விவரம்

    புல்லட் 350 KS - பிளாக் சில்வர், ஆனிக்ஸ் பிளாக் ரூ. 1,58,754
    புல்லட் 350 KS - பிளாக் ரூ. 1,65,754
    புல்லட் 350 ES - ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் புளூ ரூ. 1,82,190

    Meteor 350 பயர்ஃபால் (ரெட், எல்லோ) ரூ. 1,92,109
    Meteor 350 ஸ்டெல்லார் (புளூ, ரெட், பிளாக்) ரூ. 1,98,099
    Meteor 350 சூப்பர்நோவா (பிரவுன், புளூ) ரூ. 2,08,084

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    ஹிமாலயன் கிரானைட் பிளாக், ஃபைன் கிரீன் ரூ. 2,13,273
    ஹிமாலயன் மிரேஜ் சில்வர், கிராவெல் கிரே ரூ. 2,05,314
    ஹிமாலயன் லேக் புளூ, ராக் ரெட் ரூ. 2,09,529

    இன்டர்செப்டார் 650 மார்க் 2 க்ரோம் ரூ. 3,03,620
    இன்டர்செப்டார் 650 பேக்கர் எக்ஸ்பிரஸ், சன்செட் ஸ்ட்ரிப், டவுன்-டவுன் டிராக் ரூ. 2,89,805
    இன்டர்செப்டார் 650 ஆரஞ்சு கிரஷ், வென்ட்யூரா புளூ, கேன்யான் ரெட் ரூ. 2,81,518

    கான்டினென்டல் GT650 மிஸ்டர் க்ளீன் ரூ. 3,20,177
    கான்டினென்டல் GT650 ப்ரிடிஷ் ரேசிங் கிரீன், ராக்கர் ரெட் ரூ. 2,98,079
    கான்டினென்டல் GT650 டக்ஸ் டீலக்ஸ், வென்ட்யூரா ஸ்டாம் ரூ. 3,06,368

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    பெனலி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    பெனலி இந்தியா நிறுவனம் தனது புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். முன்பதிவு பெனலி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம். இதன் விற்பனை இம்மாதமே துவங்கும் என தெரிகிறது.

     பெனலி மோட்டார்சைக்கிள்

    புதிய பெனலி 502சி மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் QJ SRV500 மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். புது மாடலின் அம்சங்களை பெனலி இதுவரை வெளியிடவில்லை. எனினும், இந்த குரூயிசர் மாடலில் 500சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த என்ஜின் 46.8 பி.ஹெச்.பி. பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 2021 பெனலி 502சி மாடல் விலை ரூ. 5 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது.
    லேண்ட் ரோவர் டிபென்டர் 90 இரு கதவுகள் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

    லேண்ட் ரோவர் டிபென்டர் 90 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 76.57 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் இரு கதவுகள் கொண்ட வேரியண்ட்டாக கிடைக்கிறது. அளவில் சிறிய வீல்பேஸ் கொண்டிருப்பதால், இந்த மாடல் 90 என அழைக்கப்படுகிறது.

     லேண்ட் ரோவர் டிபென்டர் 90

    இந்தியாவில் புதிய டிபென்டர் 90 மாடல் 2 லிட்டர் பெட்ரோல், 2 லிட்டர் டீசல் அல்லது 3 லிட்டர் டீசல் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து வெர்ஷன்களுடன் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் AWD சிஸ்டம், 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டிபென்டர் 90 மாடல்களில் மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த டெரைன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. அனைத்து மாடல்களிலும் லெதர் இருக்கைகள், கிளைமேட் கண்ட்ரோல், லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பிவி இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ×