என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புது ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். இந்த தொகையை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் முழுமையாக திரும்பப் பெற முடியும். புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் எஸ் எனும் பெயரில் அழைக்கப்படலாம்.

    புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. டெயில் லைட், ஒற்றை இருக்கை அமைப்பு, வெளிப்புறம் சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் அளவில் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் செயலி சார்ந்து இயங்கும் கீலெஸ் வசதி வழங்கப்படும் என்றும் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி, மோட்டார் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்ற விவரங்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புது உற்பத்தி ஆலை மிகப் பெரும் முதலீட்டில் உருவாகி வருகிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் புது உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த உற்பத்தி ஆலையை உருவாக்க மாருதி சுசுகி நிறுவனம் ரூ. 18 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இந்த ஆலையில் ஆண்டிற்கு 7.5 லட்சம் முதல் 10 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    குருகிராமில் இயங்கி வரும் மாருதி ஆலையை இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தால், புது ஆலை உருவாகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் குருகிராம் உற்பத்தி ஆலை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாகி இருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் உற்பத்தி ஆலை ஆகும். இந்த ஆலையில் இருந்தே மாருதி 800 முதல் மாடலாக வெளியானது.

     கோப்புப்படம்

    குருகிராம் உற்பத்தி ஆலை 1983 முதல் செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் இப்பகுதி கணிசமான வளர்ச்சி பெற்று தற்போது அதிக நெரிசல் மிகுந்த நகரமாக மாறி இருக்கிறது. இதனால் இப்பகுதியில் உதிரி பாகங்களை எடுத்து செல்வது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை ஆலையில் இருந்து வெளியே கொண்டு வருவது போன்ற செயல்பாடுகள் கடுமையாகி இருக்கின்றன. 

    மேலும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு இந்த ஆலை தொந்தரவாக இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் நினைக்கின்றனர். இந்த ஆலையில் தற்போது ஆல்டோ, வேகன் ஆர் போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலை ஆண்டிற்கு 7 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.
    பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் 2021 டிஸ்கவரி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி துவக்க விலை ரூ. 88.06 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். முன்னதாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் 90 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
     
    2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடலின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புது பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிஸ்கவரி மாடலே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

     2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி

    புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த காரில் 11.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2021 டிஸ்கவரி மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 3 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 296 பி.ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க், 355 பி.ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 296 பி.ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. 

    இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் வால்வோ XC90, பி.எம்.டபிள்யூ. X7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    இ டிரான் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆடி பல்வேறு விவரங்களை வெளியிட்டு உள்ளது.

    ஆடி நிறுவனம் தனது இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு பிந்தைய சேவை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இதில் சர்வீஸ் திட்டங்கள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் பைபேக் சலுகை உள்ளிட்டவை அடங்கும்.

    இந்தியாவில் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் விவரங்கள் எலெக்ட்ரிக் வாகனம் பற்றி மக்களிடையே இருக்கும் சந்தேகங்களை விளக்கும் வகையில் உள்ளது. புதிய இ டிரான் மாடலுக்கு ஆடி இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.

    இதில் உள்ள பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இவைதவிர வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் வாரண்டியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் கூடுதல் தொகை செலுத்தி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டியை நீட்டித்துக் கொள்ளலாம்.

     ஆடி இ டிரான்

    சர்வீசை பொருத்தவரை இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் சரியான கால இடைவெளியில் சர்வீஸ் செய்து கொள்ளலாம். சில திட்டங்களில் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றன.

    இத்துடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி ஐந்து ஆண்டுகளுக்கு ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் சேவையை ஆடி வழங்குகிறது. மேலும் காரை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் ஆடியிடம் விற்பனை செய்யும் பைபேக் சலுகை வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் இப்படித் தான் அழைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் எஸ் என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் அளவில் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் செயலி சார்ந்து இயங்கும் கீலெஸ் வசதி வழங்கப்படும் என்றும் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி, மோட்டார் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்ற விவரங்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்திய சந்தையில் 2021 முதல் அரையாண்டு கால வாகன விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய சந்தையின் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் பிரிவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா முதலிடம் பிடித்து இருக்கிறது. 2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 60,183 விட்டாரா பிரெஸ்ஸா யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

     ஹூண்டாய் வென்யூ

    இதே காலக்கட்டத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 54,675 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது இரு மாடல்களின் விற்பனையும் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் மூன்றாவது இடத்தை டாடா நெக்சான் பெற்று இருக்கிறது. 

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
    வால்வோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று புது கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


    ஸ்வீடன் நாட்டு வாகன உற்பத்தியாளரான வால்வோ இந்தியாவில் புது கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் XC40 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் 2021 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் S90 பிரீமியம் செடான் மற்றும் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலான XC60 அறிமுகமாக இருக்கிறது.

    எலெக்ட்ரிக் மாடலான XC40 ரீசார்ஜ் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி  செய்யப்படுகிறது. இது பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கிறது. வால்வோ XC40 ரீசார்ஜ் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள 78kWh பேட்டரி வழங்கப்படுகிறது.

     வால்வோ கார்

    இது 397 பி.ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த  கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    வால்வோ S90 மற்றும் XC60 மாடல்களில் பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வால்வோ கார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 52 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ நியோ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

    மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 8.48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். பொலிரோ நியோ மாடலுக்கான முன்பதிவு மஹிந்திரா வலைதளம் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.

    இந்தியாவில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பொலிரோ நியோ N4 விலை ரூ. 8.48 லட்சம், N8 விலை ரூ. 9.48 லட்சம், N10 விலை ரூ. 9.99 லட்சம், N10 (O) விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     மஹிந்திரா பொலிரோ நியோ

    மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் - சில்வர், நபோலி பிளாக், ஹைவே ரெட், ராக்கி பெய்க் மற்றும் பியல் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் புது ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 15 இன்ச் அலாய் வீல்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், புது பாக் லேம்ப்கள், டெயில்கேட் பகுதியில் ஸ்பேர் வீல், பக்கவாட்டுகளில் பூட்-ஸ்டெப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் டீசல் எம்ஹாக் என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பொலிரோ நியோ இகோ டிரைவ் மோட், மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தனது பிளாக்ஷிப் கோல்டு விங் டூர் மாடலை வினியோகம் செய்ய துவங்கியது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2021 கோல்டு விங் டூர் பிளாக்ஷிப் மாடல் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் மாடல் ஹோண்டா பிங்விங் விற்பனையகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகின்றன.

     2021 ஹோண்டா கோல்டு விங் டூர்

    2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மாடல் முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் விற்பனை துவங்கிய 24 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. 2021 கோல்டு விங் டூர் மாடல் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

    புதிய ஹோண்டா கோல்டு விங் டூர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 37,20,342 என்றும் DCT வேரியண்ட் விலை ரூ. 39,16,055 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் அனைத்து வேரியண்ட்களின் விலையும் இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின் படி ஹோண்டா டியோ பேஸ் மாடல் விலை ரூ. 64,510 என்றும் DLX விலை ரூ. 67,908 என்றும் டியோ ரெப்சால் எடிஷன் விலை ரூ. 70,408 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ஹோண்டா டியோ

    அம்சங்கள் தவிர டியோ மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா டியோ மாடலில் 109சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.65 பி.ஹெச்.பி. பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    விலை உயர்வு காரணமாக ஹோண்டா டியோ தற்போது டி.வி.எஸ். ஜூப்பிட்டர் மாடலை விட அதிகமாக மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தி வரும் நிலையில், தற்போது ஹோண்டா டியோ விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    கடந்த ஆண்டு வெளியாக இருந்த போர்ஸ் குர்கா மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    புத்தம் புதிய போர்ஸ் குர்கா மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட போர்ஸ் குர்கா மாடல் கடந்த ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டது. 

     போர்ஸ் குர்கா

    புதிய குர்கா மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எனினும், புது குர்கா மாடலில் மேம்பட்ட லேடர் பிரேம் சேசிஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் சதுரங்க வடிவில் அப்படியே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட டெயில் லேம்ப், புதிய முன்புற கிரில் வழங்கப்படுகிறது.

    புதிய குர்கா மாடல் மூன்று மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட், 2-வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் குஷக் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா குஷக் இந்திய வினியோகம் துவங்கி இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் 1 லிட்டர் வேரியண்ட் முதற்கட்டமாக வினியோகம் செய்யப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் வேரியண்ட் ஆகஸ்ட் மாதம் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் மிகவும் சவால்மிக்க பிரிவாக காம்பேக்ட் எஸ்.யு.வி. இருக்கிறது. அந்த வகையில் ஸ்கோடா நிறுவனத்தின் மிகமுக்கிய வெளியீடுகளில் ஒன்றாக குஷக் உள்ளது. முன்னதாக ஸ்கோடா பிராண்டை விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. 

     ஸ்கோடா குஷக்

    தற்போது ஸ்கோடா நிறுவனம் குஷக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை- ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. சக்திவாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஸ்டைல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்கோடா குஷக் பேஸ் வேரியண்ட், மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஸ்கோடா குஷக் அனைத்து வேரியண்ட்களும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக், 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.
    ×