என் மலர்
ஆட்டோமொபைல்

பஜாஜ் அவெஞ்சர்
அவெஞ்சர் சீரிஸ் விலையை உயர்த்திய பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 220 குரூயிஸ் மற்றும் 160 ஸ்டிரீட் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, அவெஞ்சர் 220 குரூயிஸ் மற்றும் 160 ஸ்டிரீட் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வுக்கு பின் இரு மாடல்கள் விலை முறையே ரூ. 1,31,046 மற்றும் ரூ. 1,07,309 என மாறி இருக்கிறது. முன்னதாக இவற்றின் விலை ரூ. 1,26,995 மற்றும் ரூ. 1,03,699 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர ஜனவரி மாதமும் இரு மாடல்கள் விலையை பஜாஜ் ஆட்டோ உயர்த்தியது.

விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அவெஞ்சர் 220 குரூயிஸ் மாடலில் 220சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 18.76 பி.ஹெச்.பி. பவர், 17.55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.79 பி.ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. முன்னதாக பஜாஜ் ஆட்டோ டாமினர் சீரிஸ் விலையை மாற்றி அமைத்தது.
Next Story