என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.500 பி.எஸ்.6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவன மாடல்களின் பி.எஸ்.6 வேரியண்ட் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் எக்ஸ்.யு.வி.500 எஸ்.யு.வி. மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களில் எக்ஸ்.யு.வி.500 மாடலின் ஃபியூயல் டேன்க்கில் பி.எஸ்.6 டீசல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் புதிய பி.எஸ்.6 மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. புதிய என்ஜின் அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500, 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையாகும் எக்ஸ்.யு.வி.500 மாடலில் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பி.ஹெச்.பி. பவர், 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய 2.0 லிட்டர் என்ஜின் இதைவிட அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.

புதிய எஸ்.யு.வி.யின் பி.எஸ். 6 மாடல் தவிர அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500 மாடலையும் மஹிந்திரா உருவாக்கி வருகிறது. அடுத்த தலைமுறை மாடல் அதிகளவு மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மஹிந்திராவின் எக்ஸ்.யு.வி.500 மாடல் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500 மாடலின் வெளிப்புறத்தில் புதிய முன்புறம், மேம்பட்ட பம்ப்பர்கள், ஹெட்லைட் மற்றும் புதிய கிரில் போன்றவை வழங்கப்படலாம். காரின் பின்புறத்தில் மேம்பட்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் அதிநவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெரிய தொடுதிரை டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை வழங்கப்படுகின்றன.
புகைப்படம் நன்றி: Zigwheels
ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சான்ட்ரோ காரின் புதிய வேரியண்ட்டை சத்தமில்லாமல் வெளியிட்டது.
ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது சான்ட்ரோ காரின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆனிவர்சரி எடிஷன் என அழைக்கப்படும் புதிய சான்ட்ரோ மேனுவல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 5.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆட்டோமேடிக் விலை ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன் ஹேட்ச்பேக் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வேரியண்ட் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உள்புறத்தில் முழுக்க முழுக்க கருப்பு நிற இன்டீரியர் மற்றும் புளு நிற ட்ரிம் கொண்டிருக்கிறது.

வெளிப்புறத்தில் பிளாக்டு அவுட் டோர் ஹேன்டில்கள், ORVMகள், ரூஃப் டெயில்கள், வீல் கவர்களில் கன்மெட்டல் கிரே ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பூட் லிட், பாடி சைடு மோல்டிங் உள்ளிட்டவற்றில் குரோம் அக்சென்ட்களும், பூட் லிட் பகுதியில் ஆனிவர்சரி எடிஷன் பேட்ஜ் கொண்டிருக்கிறது.
புதிய சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன் மாடல் போலார் வைட் மற்றும் அக்வா டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஃபேப்ரிக் சீட் வடிவமைப்பும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தவிர புதிய காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் புதிய சான்ட்ரோ காரிலும் 1.1 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகம் துவங்கியிருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகத்தை துவங்கியது. சென்னையில் ஏத்தர் 450 விநியோகம் சமீபத்தில் துவங்கி அதற்குள் 100 வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
வாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதுவரை சென்னையை சுற்றி பத்து இடங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஏத்தர் எனர்ஜி கட்டமைத்து இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.

சென்னை முழுக்க ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சாய் கிங்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன் மூலம் நகர் முழுக்க இயங்கி வரும் 30 விற்பனை மையங்களில் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து போரூர் மற்றும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள சாய் கிங்ஸ் விற்பனையகங்களில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இத்துடன் சென்னையை சுற்றி பல்வேறு பகுதிகளில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் படிப்படியாக கட்டமைக்கப்பட இருக்கின்றன.
ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் புதுவித நிறத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
ஹூன்டாய் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான மாடல் வென்யூ. காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலாக வந்துள்ள இந்த கார் இப்போது இரட்டை வண்ணத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை வண்ணத்தில் உருவாகும் ஹூன்டாய் கார் வென்யூ எஸ்.எக்ஸ். மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதில் 90 ஹெச்.பி. திறன் 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட டீசல் மாடல் மற்றும் 83 ஹெச்.பி. திறன் 1.2 லிட்டர் என்ஜின் கொண்ட பெட்ரோல் மாடல் ஆகியன மற்றும் 120 ஹெச்.பி. திறன், 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு மாடல்கள் இரட்டை நிறத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதில் 1.2 பெட்ரோல் மாடல் கார் 5 கியர்களைக் கொண்டதாகவும், 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட டீசல் மாடல் 6 கியர்களுடன் வரும் என தெரிகிறது. இதன் டர்போ பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் மாடல் 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே டாடா நெக்சான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் கார்கள் இரட்டை வண்ணத்தில் வெளியாகியுள்ளன. அதற்குப் போட்டியாக புதிய வென்யூ காரை ஹூன்டாய் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ஆக்டேவியா மாடல் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ஆக்டேவியா மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது 11வது தலைமுறை ஆக்டேவியா மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் நவம்பர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் புதிய ஆக்டேவியா டீசர் வெளியாகி இருக்கிறது.
டீசர்களின் படி புதிய ஆக்டேவியா வடிவமைப்பு பார்க்க ஸ்கோடா கமிக் மற்றும் ஸ்கேலா மாடல்களை தழுவி உருவாகி இருக்கிறது. புதிய ஆக்டேவியா மாடலில் ஒற்றை ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடல் காரிலும் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
புதிய காரில் பட்டர்ஃபிளை கிரில் பிரம்மாண்டமாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது. இத்துடன் பெரிய பொனெட் மற்றும் மேம்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

காரின் பின்புறம் ஆடி-எஸ்க் எல்.இ.டி. டெயில்லைட்கள், ராப்-அரவுண்ட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்ச்பேக் ஸ்டைலிங் காரின் தனித்துவ அம்சமாக இருக்கிறது. இத்துடன் பின்புறம் அகலமாக காட்சியளிக்கிறது.
2020 ஆக்டேவியா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் TSI என்ஜின்கள் 2.0 லிட்டர் டி.டி.ஐ. மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
டிரையம்ப் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தீபாவளி பண்டிக்கைக்கென சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2.8 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் மற்றும் கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது.
தீபாவளி சலுகைகள் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ்., டைகர் 800 எக்ஸ்.ஆர்., டைகர் 1200 மற்றும் போன்வில் டி100 போன்ற மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அக்டோபர் 27 வரை மட்டுமே பொருந்தும்.

தீபாவளி சலுகையின் அங்கமாக டிரையம்ப் டைகர் 1200 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள டிரையம்ப் அட்வென்ச்சர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் பயிற்சி பெற முடியும். டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.ஆர். மாடலை வாங்குவோருக்கு ரூ. 2.8 லட்சம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் வாரண்டி மற்றும் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஸ்டோர் வவுச்சர் வழங்கப்படுகின்றன. டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் ஜனவரி 2020 வாக்கில் அப்டேட் செய்யப்பட இருப்பதால், இந்த மாடலுக்கும் அதிகளவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1.59 லட்சம் மதிப்புள்ள பலன்களும், ரூ. 59,000 மதிப்புள்ள ஏரோ சைலன்சர், ரூ. 70,000 மதிப்புள்ள அப்கிரேடு போனஸ் போன்றவை வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020 நெக்சான் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா நெக்சான் 2020 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய நெக்சான் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
ஸ்பை படங்களில் புதிய நெக்சான் மாடலின் முன்புறம் மேம்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய பம்ப்பர், மேம்பட்ட ஃபாக் லேம்ப்கள், பொனெட், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள் காணப்படுகின்றன. இதன் முன்புற கிரில் பகுதியும் மேம்படுத்தப்பட்டு ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை நெக்சான் மாடலில் அலாய் வீல், மேம்பட்ட பின்புற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் உள்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் புதிய தலைமுறை நெக்சான் மாடலில் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படலாம்.
2020 நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ். 6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. தற்சமயம் விற்பனையாகும் நெக்சான் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்களை டாடா மோட்டார்ஸ் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane
ஹூன்டாய் நிறுவனத்தின் கிரெட்டா பேஸ் வேரியண்ட் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா E+ மற்றும் EX பேஸ் மாடல்களில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 10.87 லட்சம் மற்றும் ரூ. 11.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இரு பேஸ் வேரியண்ட்களும் 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஹூன்டாய் நிறுவனம் 1.6 லிட்டர் டீசல் என்ஜினை இரு மாடல்களில் வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர் @4000 ஆர்.பி.எம். மற்றும் 240 என்.எம். டார்க் @1500 முதல் 3000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய டீசல் என்ஜின் தவிர காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
டெஸ்லா இன்க் நிறுவனம் தனது வாகனங்களை சீனாவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது.
டெஸ்லா இன்க் நிறுவனம் சீனாவில் தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. டெஸ்லா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை சீன அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை் தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களை சீனாவில் உற்பத்தி செய்ய முடியும் என ஷாங்காய் நகரை சேர்ந்த ஆட்டோ துறை சார்ந்த நிறுவன தலைவரான யேல் ஷாங் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி பணிகளை துவங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக டெஸ்லா சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஷாங்காய் அருகில் டெஸ்லா நிறுவனம் 200 கோடி டாலர்கள் செலவில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைத்து வருகிறது. இதுவே வெளிநாட்டில் உருவாகும் டெஸ்லாவின் முதல் ஆலை ஆகும்.
ஷாங்காய் தயாரிப்பு ஆலையில் வாரத்திற்கு 1000 மாடல்களை உற்பத்தி செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக டெஸ்லாவின் மாடல் 3எஸ் கார்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
ஆம்பையர் வெஹிகில்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆம்பையர் வெஹிகில்ஸ் நிறுவன வாகனங்கள் அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக திருச்சி, மங்களூர், கோயம்புத்தூர், பெங்களூரு, கரூர் போன்ற நகரங்களில் வாகனங்களை முன்பதிவு செய்யலாம். விரைவில் மற்ற நகரங்களிலும் ஆன்லைன் விற்பனைக்கு வரும் என ஆம்பையர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக்கும் நோக்கில் ஆம்பையர் வெஹிகில்ஸ் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் பணிகளை துவங்கி இருக்கிறது. அமேசானுடன் இணைந்திருப்பதன் மூலம் இளம் தலைமுறையினரை கவர முடியும் என ஆம்பையர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதால் வாகன விற்பனையும் அதிகரிக்கும். ஆம்பையர் சீல், வி 49 எல்.ஏ., மேக்னஸ் 60, ரியோ எல்.ஏ. மற்றும் ரியோ லி போன்ற மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாகனத்தை வாங்கியதும் கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் ரசீது வழங்கப்படுகிறது.
பின் கட்டண ரசீதை குறிப்பிட்ட விற்பனையாளரிடம் காண்பித்து வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்கும் முறை முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நிறைவுறும்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவு 200% வேகத்தில் வளர்ச்சியடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எலெக்ட்ரிக் இருச்சகர வாகனங்கள் சந்தையில் ஆம்பையர் வெஹிகில்ஸ் கணிசமான பங்கு கொண்டிருக்கிறது. ஆம்பையர் நிறுவன வாகனங்கள் பல்வேறு செயல்திறன் மற்றும் விலைகளில் கிடைக்கிறது.
ஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ஹோன்டா நிறுவனம் 2020 டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காருக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய டீசர் அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடலுக்கானது ஆகும்.
காரின் வெளிப்புறம் தெரியும் படி நேர்த்தியாக காணப்படும் டீசரில் புதிய தலைமுறை ஜாஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் கேபின் இடவசதி அதிகமாக இருக்கும். மேலும் புதிய கார் நான்கு மீட்டர்களுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.
நான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடல் டோக்யோ ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய காரின் வடிவமைப்பு அதிகளவு மாற்றங்கள் இன்றி முந்தைய மாடலில் உள்ளதை விட அதிக இடவசதி கொண்டிருக்கும். புதிய ஜாஸ் மாடல் கார் பயணிகளுக்கு சவுகரியத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியாவில் புதிய ஜாஸ் மாடல் மேம்பட்ட இரண்டு மோட்டார் ஹைப்ரிட் பவர் டிரெயின்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற சந்தைகளில் ஹைப்ரிட் அல்லது பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
இதே என்ஜின் ஹோன்டா அமேஸ் மற்றும் டபுள்.ஆர்.-வி. மாடலிலும் வழங்கப்படலாம். இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். புதிய ஹோன்டா ஜாஸ் மாடல் இந்திய சந்தையில் ஹூன்டாய் ஐ20 மற்றும் மாருதி சுசுகி பலேனோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஹூன்டாய் நிறுவனத்தின் 2020 ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதிய ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் இந்தியா தவிர ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.
புதிய தலைமுறை ஐ20 எலைட் மற்றும் ஆக்டிவ் மாடல்களில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. ஹூன்டாய் நிறுவனம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் சி.வி.டி. யூனிட் உடன் வரும் என தெரிகிறது. தற்போதைய மாடலில் உள்ள 1.4 லிட்டர் டீசல் என்ஜின் புதிய மாடல்களில் வழங்கப்படாது. இதற்கு மாற்றாக 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.
புதிய தலைமுறை ஐ20 மாடல் மேம்பட்ட உள்புறம் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய கார் டூயல் டோன் அலாய் வீல்கள், பெரிய ஹெக்சாகோனல் கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், புதிய ஃபாக் லேம்ப், புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
உள்புறம் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, மேம்பட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய தலைமுறை ஐ20 மாடலின் விலை தற்போதைய மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐ20 மாடல் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா, ஹோன்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புகைப்படம் நன்றி: rushlane






