search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2020 டி20 உலகக்கோப்பை"

    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது. #ICC
    துபாய்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐசிசி 2007-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

    2009-ல் பாகிஸ்தானும், 2010-ல் இங்கிலாந்தும் (2011-ல் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றதால் 2010-ல் நடத்தப்பட்டது), 2012-ல் வெஸ்ட்இண்டீசும், 2014-ல் இலங்கையும், 2016-ல் வெஸ்ட் இண்டீசும் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

    7-வது டி20 உலகக்கோப்பை போட்டி  முதலில் தென்ஆப்பிரிக்காவில் கடந்த வருடம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 2017-ம் ஆண்டுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்துவிட்டதால், ஐசிசி 2020-ல் டி20 உலகக்கோப்பையை நடத்த முடிவு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.

    ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 9-வது மற்றும் 10-வது இடங்களில் உள்ள இலங்கை, வங்காளதேசம், மற்றும் 6 இதர அணிகள் தகுதி சுற்றில் விளையாட வேண்டும். இதில் இருந்து 4 அணிகள் தகுதி பெறும்.

    தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற வில்லை. இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:-

    ‘ஏ’ பிரிவு: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தகுதிபெறும் அணிகள்.



    ‘பி’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதிபெறும் அணிகள்.

    20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

    அக் 24 : இந்தியா- தென்ஆப்பிரிக்கா.

    அக் 29 : இந்தியா- தகுதி பெறும் அணி (ஏ-2).

    நவ 1 : இந்தியா- இங்கிலாந்து.

    நவ 5 : இந்தியா- தகுதிபெறும் அணி (பி-1)

    நவ 8 : இந்தியா- ஆப்கானிஸ்தான்.
    ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் விவரத்தை வெளியிட்டது ஐசிசி. #ICC
    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடருக்கு 10 அணிகள் ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் நேரடியாக தகுதிபெறும். ஆனால் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு 8 அணிகள்தான் தகுதி பெறும். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகள் பெயரை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன்படி முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 2-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 3-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து. 4-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 5-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா, 6-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, 7-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ், 8-வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

    இலங்கை மற்றும் வங்காள தேச அணி தகுதிச் சுற்றுக்கான தொடரில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும். தகுதி சுற்றுத் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.
    ×