search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூன்டாய் வென்யூ"

    ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஆகும். ஹூன்டாய் வென்யூ விலை ரூ.6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹூன்டாய் வென்யூ கார் முன்பதிவு கட்டணம் ரூ.21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும். இதில் புளு லின்க் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

    ஹூன்டாயின் புளு லின்க் கனெக்டிவிட்டியில் 33 அம்சங்கள் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை வென்யூ எஸ்.யு.வி. மாடலில் ஹெக்சாகோனல் முன்புற கிரில், டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர், முன்புறம் மெல்லிய இன்டிகேட்டக், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.



    காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் ஹூன்டாயின் வடிவமைப்பு கிரெட்டா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் ஸ்குவாரிஷ் எல்.இ.டி. டெயில் டைல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புற பம்ப்பர்களில் ரிஃப்லெக்டர்கள் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் 2019 நியூ யார்க் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #HyundaiVenue



    ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் 2019 நியூ யார்க் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் வென்யூ கார் இந்திய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. 

    புதிய வென்யூ கார் வடிவமைப்பு சான்டா ஃபெ மற்றும் பலிசேட் எஸ்.யு.வி. ஆகிய இருமாடல்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஹூன்டாய் தனது வென்யூ கார் பல்வேறு சந்தைகளில் வெவ்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூன்டாய் வென்யூ காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மோட்டார் மற்றும் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.



    இத்துடன் சர்வதேச சந்தையில் 1.6 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் இந்த கார் 1.6 லிட்டர் என்ஜின் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ஹூன்டாய் வென்யூ காரில் ஹூன்டாயின் புளுலின்க் கனெக்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் புதிய காரில் இந்தியாவுக்கென பிரத்யேகமாக பத்து அம்சங்களை வழங்கும் என்றும் காரில் மொத்தம் 33 கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

    அந்த வகையில் இந்திய மாடலில் வழங்கப்படும் அம்சங்களில் ஜியோ-ஃபென்சிங், ஸ்பீடு அலெர்ட், எஸ்.ஓ.எஸ்., பேனிக் நோட்டிபிகேஷன், டெஸ்டினேஷன் ஷேரிங், ரோட்-சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் புளுலின்க் தொழில்நுட்பம் மிகதீவிரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
    ×